PhonePe Blogs Main Featured Image

Trust & Safety

உங்கள் குடும்பத்தை சைபர் மோசடியிலிருந்து பாதுகாக்க 4 முக்கிய வழிகள்

PhonePe Regional|3 min read|20 January, 2026

URL copied to clipboard

இன்று ஒரு சமூக நிகழ்வில் மோசடி பற்றிப் பேசத் தொடங்கினாலே போதும், அங்குள்ள ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு ஒரு கதை இருக்கும். பணத்தை இழந்த ஒரு அத்தையோ, அல்லது சந்தேகத்திற்குரிய ஃபோன் அழைப்பு வந்ததும் அது மோசடி என்று உடனே கண்டறிந்து இணைப்பைத் துண்டித்த ஒரு மாமாவோ நிச்சயம் ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பார்கள்.

இதுதான் தற்போதைய நிலைமை. இருப்பினும், கட்டுப்பாட்டாளர்கள், சட்ட அமலாக்கத் துறையினர் மற்றும் பிற முக்கியத் தரப்பினரின் தொடர்ச்சியான முயற்சிகளால், இந்த ஆண்டு மோசடியைக் கட்டுப்படுத்துவதில் நாம் முன்னேற்றம் கண்டுள்ளோம். அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவில் 2024 நிதியாண்டில் (FY24) ரூ.1,087 கோடி மதிப்பிலான 13.42 லட்சம் UPI மோசடிச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இது 2025 நிதியாண்டில் ரூ.981 கோடி மதிப்பிலான 12.64 லட்சம் சம்பவங்களாகக் குறைந்துள்ளது.

இந்த விழிப்புணர்வைத் தொடரவும், உங்கள் குடும்பத்தை சைபர் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கவும், இந்த ஆண்டைத் தொடங்கும்போது மனதில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இங்கே.

1. அச்சுறுத்தலைப் புரிந்து கொள்ளுங்கள்

டிஜிட்டல் மோசடிகளில் ஃபிஷிங், அடையாளத் திருட்டு மற்றும் உங்கள் சாதனத்தில் மால்வேரை புகுத்துவது போன்ற பல்வேறு நுட்பங்கள் அடங்கும். மோசடி செய்பவர்கள் போலியான மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் மற்றும் ஃபோன் அழைப்புகள் போன்ற ஏமாற்று வழிகளைப் பயன்படுத்தி, தனிநபர்களை ஏமாற்றி பாஸ்வேர்டுகள் அல்லது வங்கி விவரங்கள் போன்ற முக்கியமான தகவல்களைப் பெற முயற்சிக்கின்றனர்.

2. பொதுவான மோசடிகளைக் கண்டறிதல்

சில மோசடி உத்திகள் மிகவும் பிரபலமானவை, மற்றவை ஒப்பீட்டளவில் புதியவை. இருப்பினும், இந்த முறைகள் அனைத்திற்கும் ஒரு அடிப்படை ஒற்றுமை உண்டு – மோசடி பெரும்பாலும் ஒரு தீங்கிழைக்கும் ஃபோன் அழைப்பு, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சலில் இருந்தே தொடங்குகிறது. எதிர்பாராத தொடர்புகளிடம் எச்சரிக்கையுடன் இருக்க உங்கள் குடும்பத்தினரைப் பழக்குங்கள்.

கவனிக்க வேண்டிய அபாய அறிகுறிகள்:

  • அவசரம் அல்லது மிரட்டல்கள்: உங்களைச் சிந்திக்க விடாமல், அவசரமாக முடிவெடுக்க வைக்க மோசடிக்காரர்கள் பீதியை ஏற்படுத்துவார்கள்.
  • முக்கியமான தகவல்களைக் கேட்பது: உண்மையான நிறுவனங்கள் ஒருபோதும் பாஸ்வேர்டுகள், CVV எண்கள் அல்லது OTP-களைக் கேட்காது.
  • சந்தேகத்திற்குரிய லிங்க்குகள்: ஒரு லிங்க் உண்மையான வங்கி அல்லது நிறுவனத்திடமிருந்து வந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்த எப்போதும் அதன் URL-ஐச் சரிபார்க்கவும். லிங்க்கை கிளிக் செய்வதற்கு முன், கர்சரை அதன் மீது வைப்பதன் மூலம் அது எங்குச் செல்கிறது என்பதைப் பார்க்கலாம்.
  • காவல்துறை அல்லது வங்கி: உங்கள் வங்கி அல்லது காவல்துறையினர் ஒருபோதும் உங்களைப் பணம் எடுக்கவோ, முழு PIN எண்ணைச் சொல்லவோ அல்லது “கைரேகை சரிபார்ப்பிற்காக” பணம் கேட்கவோ மாட்டார்கள்.
  • ஃபோன் மோசடிகள்: கைது செய்யப்படுவீர்கள் என்று மிரட்டினாலோ அல்லது பணப் பரிமாற்றம் மூலம் “அபராதம்” கட்டச் சொன்னாலோ, அது நிச்சயம் ஒரு மோசடி. தேவையற்ற அழைப்புகளைக் குறைக்க, ‘Telephone Preference Service’-ல் பதிவு செய்வதைப் பரிசீலிக்கவும்.
  • வீட்டிற்கு வரும் அறிமுகமில்லாதவர்கள்: சேவைகளை வழங்க வீட்டிற்கு வருபவர்களிடம் “இல்லை, வேண்டாம்” என்று சொல்வது எப்போதும் சரியே. அந்த இடத்திலேயே எந்தச் சேவையையும் ஒப்புக்கொண்டு கையெழுத்திட வேண்டாம்; எப்போதும் பலரிடமிருந்து எழுத்துப்பூர்வமான விலைப்பட்டியலைப் பெறுங்கள். மிகவும் அவசியமில்லாமல் தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம். இந்தத் தரவைப் பயன்படுத்தி மோசடிக்காரர்கள் புதிய அடையாளங்களை உருவாக்கலாம் அல்லது உங்கள் பாஸ்வேர்டைக் கண்டுபிடிக்கலாம்.

3. உங்கள் கணக்குகள் மற்றும் சாதனங்களைப் பாதுகாக்கவும்

  • வலுவான பாஸ்வேர்டுகள்: ஒவ்வொரு கணக்கிற்கும் எழுத்துகள், எண்கள் மற்றும் குறியீடுகளின் தனித்துவமான கலவையைப் பயன்படுத்தவும்.
  • மல்டி-ஃபேக்டர்(பல காரணி) அங்கீகாரம் (MFA): கூடுதல் பாதுகாப்பிற்காக, முடிந்தவரை அனைத்து கணக்குகளுக்கும் MFA-ஐ எனேபிள் செய்யவும்.
  • ஆட்டோமேட்டிக் அப்டேட்கள்: பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் செயலிகளை அப்டேட் செய்து வைத்திருக்கவும்.
  • வழக்கமான பேக்கப்: முக்கியமான கோப்புகளை மாதம் ஒருமுறை எக்ஸ்டர்னல் டிரைவ் அல்லது நம்பகமான கிளவுட் சேவையில் பேக்கப் எடுத்து வைக்கவும்.
  • ஆன்டிவைரஸ்/மால்வேர் பாதுகாப்பு: சிறந்த ஆன்டிவைரஸ் மென்பொருளைக் கொண்டு அடிக்கடி ஸ்கேன் செய்யவும்.

உங்கள் தகவல்கள் திருடப்பட்டதாகச் சந்தேகித்தால், உடனடியாக மோசடியைப் புகாரளிக்கவும்.

4. அடுத்த தலைமுறையைத் தயார்படுத்துதல்

குழந்தைகளுக்கு இணையப் பாதுகாப்பு பற்றி கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம். பின்வருவனவற்றைப்பற்றித் தொடர்ந்து பேசுங்கள்:

  • தனியுரிமை: ஏன் தனிப்பட்ட தகவல்களைப் பகிரக்கூடாது அல்லது ஆன்லைன் சேட்களில் அந்நியர்களுடன் பேசக்கூடாது என்பதை விளக்குங்கள்.
  • பெற்றோர் கட்டுப்பாடுகள்: தகாத இணையதளங்களைத் தடுக்கவும், ஆரோக்கியமான ஸ்கிரீன் நேர வரம்புகளை அமைக்கவும் கருவிகளைப் பயன்படுத்தவும்.
  • வெளிப்படையான உரையாடல்: ஆன்லைனில் ஏதாவது “விபரீதமாகத்” தோன்றினால், உடனடியாக உங்களிடம் வந்து சொல்லும்படி அவர்களை ஊக்குவிக்கவும்.
  • அதிகாரமளித்தல், கட்டுப்படுத்துதல் அல்ல: வெறுமனே அணுகலைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, டிஜிட்டல் உலகத்தைப் புரிந்து கொள்ள குழந்தைக்கு உதவுங்கள்.
  • குடும்பக் குறியீடு: AI மோசடிக்காரர்கள் பெருகிவரும் இக்காலத்தில், AI-ஐப் பயன்படுத்தி குரல் அல்லது வீடியோ மூலம் ஏமாற்றுபவர்களிடமிருந்து தப்பிக்க, குடும்பத்தினருக்குள் ஒரு பொதுவான “ரகசியக் குறியீட்டை” வைத்துக்கொள்வது முக்கியம்.

புகார் அளிப்பது எப்படி?

மோசடி நடந்ததாகச் சந்தேகம் இருந்தால், உடனடியாகப் புகாரளிக்கவும்:

PhonePe-வில் புகாரளிக்க:

  • PhonePe ஆப்: உதவி பகுதிக்குச் சென்று புகாரை எழுப்பவும்.
  • PhonePe வாடிக்கையாளர் சேவை: PhonePe-ஐ 80–68727374 அல்லது 022–68727374 என்ற எண்ணில் அழைக்கவும்.
  • சோஷியல் மீடியா புகாரளித்தல்:
  • குறைதீர்க்கும் போர்ட்டல்: PhonePe குறைதீர்க்கும் போர்ட்டலில் புகார் பதிவு செய்யவும்.

அதிகாரிகளிடம் புகாரளித்தல்:

  • சைபர் கிரைம் பிரிவு: சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் அளிக்கவும் அல்லது 1930 என்ற எண்ணை அழைக்கவும்.
  • தொலைத்தொடர்புத் துறை (DOT): சஞ்சார் சாத்தி போர்ட்டலில் உள்ள சக்ஷு வசதி மூலம் சந்தேகத்திற்கிடமான செய்திகள், அழைப்புகள் அல்லது வாட்ஸ்அப்/டெலிகிராம் மோசடிகளைப் புகாரளிக்கவும்.

பாதுகாப்பு கலாச்சாரத்தை உருவாக்குதல்

டிஜிட்டல் பாதுகாப்பு என்பது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். விழிப்புடன் இருப்பது, MFA போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது மற்றும் எதையும் தீர விசாரிப்பது போன்றவற்றின் மூலம், உங்கள் நெருங்கியவர்களைப் பாதுகாக்கவும், அனைவருக்கும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்கவும் நீங்கள் பங்களிக்கலாம்.

முக்கிய நினைவூட்டல்PhonePe ஒருபோதும் இரகசியமான அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்காது. Phonepe.com டொமைனிலிருந்து வராத மின்னஞ்சல்களைப் புறக்கணிக்கவும். நீங்கள் மோசடியைச் சந்தேகித்தால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும்.

Keep Reading