
Trust & Safety
டீப்ஃபேக் ஆள்மாறாட்டம்: AI-யின் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
PhonePe Regional|2 min read|14 October, 2025
இந்த வருடம் முழுவதும் AI (செயற்கை நுண்ணறிவு) என்ற வார்த்தைதான் அதிகமாகப் பேசப்படுகிறது. தொழில்நுட்பம் முதல் பொழுதுபோக்கு வரை, நமது அன்றாட வேலைகளில் AI-யின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவதை நாம் பார்க்கிறோம். ஆனால், AI தொழில்நுட்பம் எவ்வளவு எளிதாகக் கிடைக்கிறதோ, அந்த அளவிற்கு அதனுடன் வரும் ஆபத்துகளும் அதிகரிக்கின்றன. இன்று, சமூக வலைதளங்கள் முழுவதும் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தத்ரூபமான AI படங்கள் மற்றும் வீடியோக்களால் நிறைந்துள்ளன. இதனால், எது உண்மை, எது பொய் என்று கண்டுபிடிப்பதே கடினமாக இருக்கிறது! இந்தத் தொழில்நுட்பத்தை இப்போது மோசடி செய்பவர்கள், டீப்ஃபேக் (Deepfake) மூலம் ஆள்மாறாட்டம் செய்து மக்களை ஏமாற்றப் பயன்படுத்துகின்றனர்.
டீப்ஃபேக் ஆள்மாறாட்டம் என்றால் என்ன?
ஒரு மோசடி செய்பவர் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உங்களை ஏமாற்றி பணம் பறிப்பது அல்லது ரகசியத் தகவல்களைப் பெறுவதற்காக, உங்களுக்குத் தெரிந்தவர் போல ஆள்மாறாட்டம் செய்வதுதான் டீப்ஃபேக் ஆள்மாறாட்டம். அவர்கள் ஒரு நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது ஒரு நிறுவனம் அல்லது அரசு அதிகாரி போல் நடித்து அவ்வாறு செய்யலாம்.
“டீப் லேர்னிங்” (deep learning) மற்றும் “ஃபேக்” (fake) என்ற வார்த்தைகளை இணைத்துதான் “டீப்ஃபேக்” என்ற சொல் உருவாக்கப்பட்டது. இது ஜெனரேட்டிவ் அட்வர்சரியல் நெட்வொர்க்குகள் (GANs) AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படுகின்றன. இந்தத் தொழில்நுட்பம், ஒருவரின் உண்மையான தரவுகளை வைத்து, அவரைப் போலவே போலியான ஆனால் மிகவும் தத்ரூபமான வீடியோக்கள் அல்லது ஆடியோக்களை உருவாக்கும். இதனால், மோசடி செய்பவர்களால் உண்மையானது போலவே பேசும் வீடியோக்களையும், ஆடியோக்களையும் உருவாக்க முடிகிறது.
டீப்ஃபேக் ஆள்மாறாட்டம் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது?
டீப்ஃபேக் தொழில்நுட்பம், ஒருவரின் முக அமைப்பு மற்றும் குரலைப் பயன்படுத்தி அவரைப் போலவே ஒரு போலியான நகலை உருவாக்குகிறது. இதை வைத்து குற்றவாளிகள் பல தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். அவை:
- அடையாளத் திருட்டு: முகம் அல்லது குரலை அடையாளம் காணும் ஆன்லைன் பாதுகாப்பு அம்சங்களை இது எளிதாக ஏமாற்றிவிடும். இதன் மூலம், குற்றவாளிகள் உங்கள் கணக்குகளைப் பயன்படுத்துவது, உங்கள் பெயரில் கடன் வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
- நிதி மோசடி: மோசடி செய்பவர்கள், உங்கள் அன்புக்குரியவர் போலப் பேசி, ஒரு அவசரத் தேவைக்கு பணம் கேட்பது அல்லது ஒரு அதிகாரி போலப் பேசிப் பணத்தை அனுப்பச் சொல்வது போன்ற வேலைகளில் ஈடுபடலாம். இவை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் உண்மையானது போலவே இருப்பதால், மக்கள் எளிதில் ஏமாந்துவிடுகிறார்கள்.
- மிரட்டிப் பணம் பறித்தல் (பிளாக்மெயில்): ஒருவரைப் பற்றி போலியான, தவறான வீடியோக்கள் அல்லது படங்களை உருவாக்கி, அதைக் காட்டி மிரட்டிப் பணம் பறிப்பது அல்லது அவர்களை விரும்பத்தகாத செயல்களைச் செய்ய வைப்பது.
- தவறான தகவல்களைப் பரப்புதல்: பொதுப் பிரமுகர்கள் அல்லது சாதாரண மக்கள் சொல்லாத அல்லது ஒருபோதும் செய்யாத விஷயங்களைச் செய்தது போலக் காட்டக்கூடும். இதன் மூலம், ஒருவரின் பெயருக்குக் களங்கம் விளைவிப்பது, சமூகத்தில் சண்டைகளை உருவாக்குவது போன்றவற்றைச் செய்யலாம்.
ஒரு டீப்ஃபேக்கை எப்படி அடையாளம் காண்பது?
டீப்ஃபேக்குகள் கிட்டத்தட்ட உண்மையானது போலவே தெரிந்தாலும், சில முக்கிய அறிகுறிகளை வைத்து போலிகளைக் கண்டுபிடிக்கலாம்:
- காட்சிகளில் உள்ள முரண்பாடுகள்: மோசமான கண் சிமிட்டல் அல்லது முக பாவனைகள் இயல்பற்று இருப்பது போலத் தோன்றலாம். மேலும், நபரின் முகத்தில் உள்ள வெளிச்சமும் நிழல்களும் அவர்களின் சுற்றுப்புறங்களுடன் பொருந்துகின்றனவா என்பதைச் சரிபார்க்கவும்.
- குரலில் உள்ள அறிகுறிகள்: குரல் உணர்ச்சியில்லாமல், ஒரு ரோபோ பேசுவது போல இருக்கலாம். சில சமயம், பேசும் வார்த்தைகளும் உதடு அசைவுகளும் பொருந்தாமல் இருக்கும்.
- சந்தேகமான கோரிக்கைகள்: திடீரென்று பணம் அல்லது ரகசியத் தகவல்களைக் கேட்டு வரும் அழைப்புகள் அல்லது மெசேஜ்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். மோசடி செய்பவர்கள், உங்களை அவசரப்படுத்தி உடனடியாக முடிவெடுக்க வைப்பார்கள்.
டீப்ஃபேக்கிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?
டீப்ஃபேக் தொழில்நுட்பம் ஒரு வளர்ந்து வரும் அச்சுறுத்தல். ஆனால், சில வழிமுறைகளைப் பின்பற்றி உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
- பல அடுக்கு பாதுகாப்பு (MFA) பயன்படுத்துங்கள்: உங்கள் கணக்குகளில் எப்போதும் MFA-வை ஆன் செய்து வைக்கவும். இது உங்கள் கணக்கிற்கு கூடுதல் பாதுகாப்பைத் தரும். ஒருவேளை மோசடி செய்பவர் உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து ஏமாற்றினாலும், அடுத்தகட்ட பாதுகாப்பு இருப்பதால் உங்கள் கணக்கைப் பயன்படுத்த முடியாது.
- சந்தேகமான கோரிக்கைகளை உறுதி செய்யுங்கள்: உங்கள் நண்பர் அல்லது உடன் வேலை செய்பவர் வீடியோ கால் அல்லது மெசேஜ் மூலம் வழக்கத்திற்கு மாறாகப் பணம் கேட்டால், அந்த அழைப்பைத் துண்டித்துவிட்டு, உங்களுக்குத் தெரிந்த அவர்களின் மொபைல் எண்ணிற்கு நீங்களே அழைத்து அது உண்மையா என்பதை உறுதிப்படுத்தவும்.
- உங்களுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்: டீப்ஃபேக் மோசடிகளின் அறிகுறிகளை நீங்களும் கற்றுக்கொண்டு, உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள். “நம்பு, ஆனால் சரிபார்” (trust, but verify) என்ற மனநிலையைக் கொண்டிருப்பது இந்த மோசடிகளுக்கு எதிராக உங்கள் சிறந்த பாதுகாப்பாகும்.
எப்படிப் புகார் அளிப்பது?
நீங்கள் ஒரு மோசடியால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகித்தால், உடனடியாகப் புகார் அளியுங்கள்:
PhonePe-வில் புகார் அளிக்க:
- PhonePe செயலி: உதவி (Help) பகுதிக்குச் சென்று புகார் அளிக்கவும்.
- PhonePe வாடிக்கையாளர் சேவை: 80-68727374 / 022-68727374 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.
- சோஷியல் மீடியா புகாரளிப்பு:
- Twitter: PhonePe Support
- Facebook: PhonePe Official
- குறைகளை நிவர்த்தி செய்தல்: PhonePe குறைதீர்ப்பு போர்ட்டலில் புகார் பதிவு செய்யவும்.
அதிகாரிகளிடம் புகார் அளிக்க:
- சைபர் கிரைம் பிரிவு: சைபர் கிரைம் போர்ட்டலில் ஆன்லைனில் புகார் அளிக்கவும் அல்லது 1930 என்ற எண்ணை அழைக்கவும்.
- தொலைத்தொடர்புத் துறை (DOT): சந்தேகத்திற்கிடமான மெசேஜ்கள், அழைப்புகள் அல்லது வாட்ஸ்அப் மோசடிகளை சஞ்சார் சாத்தி போரட்டலில் உள்ள Chakshu/சாஃஷூ வசதி மூலம் புகாரளிக்கவும்.
முக்கியமான நினைவூட்டல் — PhonePe ஒருபோதும் உங்களிடம் ரகசியமான அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்காது. phonepe.com என்ற டொமைனில் இருந்து வராத, PhonePe-இலிருந்து வருவதாகக் கூறும் அனைத்து மின்னஞ்சல்களையும் புறக்கணிக்கவும். மோசடி எனச் சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்.