PhonePe Blogs Main Featured Image

Trust & Safety

குரூப் சாட்களில் மோசடி செய்பவர்கள் எவ்வாறு நுழைகிறார்கள்? அவர்களிடமிருந்து எப்படிப் பாதுகாப்பாக இருப்பது?

PhonePe Regional|3 min read|12 June, 2026

URL copied to clipboard

முந்தைய காலத்தில் தந்தி (டெலிகிராம்) மூலம் எவ்வாறு தொடர்பு கொண்டார்கள் என்ற கதைகளை நம் பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் நமக்குச் சொல்லியிருக்கலாம். தந்தி அலுவலகத்தில் ஒரு படிவத்தை நிரப்பி, வார்த்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் செலுத்த வேண்டும். ஆனால், இன்றைய காலகட்டத்தின் உடனடி செய்தி அனுப்புதல் என்பது அன்றைய நாட்களுக்கு கற்பனை செய்ய முடியாத ஒரு உண்மையாக இருந்தது.

மெசேஜிங் செயலிகள் மற்றும் பேமண்ட் செயலிகளில் உள்ள சாட் அம்சங்கள் தொடர்புகொள்வதை எளிதாக்குவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. அது நிகழ்நேர தனிப்பட்ட செய்தியாக இருந்தாலும் சரி, வணிகச் செய்தியாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு பேமண்ட் செயலிக்குள் குழுச் செலவுகளைப் பற்றி விவாதிப்பதாக இருந்தாலும் சரி, இந்த உடனடி செய்தி அனுப்புதல் முறை நாம் தொடர்பு கொள்ளும் வழியையே முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது.

இருப்பினும், மோசடி செய்பவர்கள் மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக இந்த மெசேஜிங் மற்றும் பேமண்ட் செயலிகளுக்குள் ஊடுருவுகிறார்கள். இந்த மோசடி எவ்வாறு செயல்படுகிறது மற்றும் இதுபோன்ற மோசடி தந்திரங்களில் இருந்து நீங்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கலாம் என்பதைப் பற்றி இந்த வலைப்பதிவில் விரிவாகக் காண்போம்.

சாட் மோசடி எவ்வாறு செயல்படுகிறது?

மெசேஜிங் மற்றும் பேமண்ட் செயலிகளின் “சாட்” மற்றும் “குழு” அம்சங்கள் மூலம் ஒரு பொதுவான மோசடி எவ்வாறு அரங்கேறுகிறது என்பது இங்கே:

  1. ஒரு தெரியாத நபர் உங்களுக்கு நேரடியாக ஒரு குறுஞ்செய்தியை அனுப்பலாம் அல்லது ஒரு பெரிய குழுவில் உங்களை இணைக்கலாம்.
  2. அந்த சாட் முழுவதும் “விரைவில் பணக்காரர் ஆகலாம்” என்ற திட்டங்கள், பந்தயம் கட்டுவதற்கான உதவிக்குறிப்புகள் அல்லது பிரத்யேக “சூதாட்ட செயலி” வெகுமதிகள் போன்ற செய்திகளால் நிரப்பப்பட்டிருக்கும்.
  3. மோசடி செய்பவர்கள் ஒரு லிங்க்கை உங்களுக்குப் பகிர்வார்கள். இது பெரும்பாலும் உங்களுக்குக் கிடைத்த வெகுமதி, கேஷ்பேக் அல்லது கேமிங் லிங்க் போலக் காட்டப்படும்.
  4. அந்த லிங்க்கை நீங்கள் கிளிக் செய்யும்போது, ஒரு ‘சைட்லோடட் APK’ உங்கள் போனில் இன்ஸ்டால் ஆகிவிடும். இது இன்ஸ்டால் ஆனதும், உங்கள் போனின் பின்னணியில் இயங்கி பின்வரும் வேலைகளைச் செய்யும்:
    • OTP-களை அனுப்புதல்: உங்களுக்கு வரும் SMS மற்றும் OTPக்களை இடைமறித்து மோசடி செய்பவருக்கு அனுப்பிவிடும்.
    • ஆவணங்களை அணுகுதல்: உங்கள் ஃபோனில் இருக்கும் PAN கார்டு, அடையாள அட்டைகள் மற்றும் பிற முக்கியமான கோப்புகளின் புகைப்படங்களைத் திருடிவிடும்.
  5. உங்களின் OTP-கள் மற்றும் அடையாள ஆவணங்களைக் கொண்டு, மோசடி செய்பவர்கள் உங்கள் வங்கியின் பாதுகாப்பு அம்சங்களை முறியடித்து, உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தைத் திருடுகிறார்கள். மேலும், உங்களின் உண்மையான விவரங்களை வைத்து ‘போலி அடையாளங்களை’ உருவாக்கி, அவற்றின் மூலம் அடுத்தடுத்த குற்றங்களையும் செய்கிறார்கள்.

குழு சாட்(குரூப் சாட்) மூலம் நடக்கும் மோசடிகளில் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?

டிஜிட்டல் கட்டண முறைகளும் செயலிகளும் நாம் எச்சரிக்கையுடன் பயன்படுத்தும் வரை முற்றிலும் பாதுகாப்பானவை தான். பயம் அல்லது அதிக ஆசை காரணமாக, எந்தவொரு முறையான சரிபார்ப்பும் இல்லாமல் அவசரமாகச் செயல்படுவதால் தான் பெரும்பாலான போலி செயலி/APK மோசடிகள் நடக்கின்றன. பெரிய அளவிலான பண இழப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, ஒரு செயலி எங்கிருந்து டவுன்லோட் செய்யப்படுகிறது, அதை உருவாக்கியவரின் மின்னஞ்சல், அந்த செயலி கேட்கும் அனுமதிகள் மற்றும் நமக்கு வரும் லிங்க்குகளின் நம்பகத்தன்மை ஆகியவற்றைச் சரிபார்க்க ஒரு நிமிடம் ஒதுக்குவது மிக மிக அவசியமாகும்.

சைபர் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க சில எளிய வழிகள் இதோ:

  • சாட்களில் வரும் லிங்க்குகளைக் கிளிக் செய்து ஒருபோதும் செயலிகளை டவுன்லோட் செய்யவோ, இன்ஸ்டால் செய்யவோ வேண்டாம். உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மால்வேராக அவை இருக்கலாம். செயலிகளை எப்போதுமே Google Play Store, App Store அல்லது Indus Appstore போன்ற அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து மட்டுமே டவுன்லோட் செய்யவும்.
  • உங்கள் காண்டாக்ட் லிஸ்ட்டில் இல்லாத தெரியாத எண்களில் இருந்து உங்களைத் தொடர்பு கொள்ளும் சாட்கள் அல்லது உங்களை இணைக்கும் குரூப்கள் விஷயத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்.
  • உங்கள் ஃபோன் செட்டிங்ஸிற்குள்  சென்று, எந்தெந்த செயலிகளுக்கு “Read SMS” அல்லது “Access Files” போன்ற முக்கிய அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை அவ்வப்போது சரிபார்க்கவும்.
  • எந்தவொரு உண்மையான நிறுவனமோ அல்லது வங்கி அதிகாரியோ ஒருபோதும் உங்களிடம் போன் அழைப்பிலோ அல்லது சாட் மூலமாகவோ OTP-யைக் கேட்க மாட்டார்கள்.
  • உங்கள் அனுமதியின்றி யாரும் பேமண்ட் செயலிகளைப் பயன்படுத்தாமல் இருக்க, அவற்றுக்கு கைரேகை அல்லது முக அங்கீகார லாக்குகளைப் பயன்படுத்தி கூடுதல் பாதுகாப்பை உருவாக்குங்கள்.

ஒருவேளை நீங்கள் போலி செயலியை இன்ஸ்டால் செய்திருந்தால் என்ன செய்ய வேண்டும்

  1. அந்த செயலியை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யவும்.
  2. உங்கள் மொபைல் டேட்டா மற்றும் வைஃபை இணைப்பை உடனடியாகத் தற்காலிகமாக ஆஃப் செய்யவும்
  3. உங்கள் வங்கி கணக்குகள், மின்னஞ்சல் மற்றும் பேமண்ட் செயலிகளின் பாஸ்வேர்டுகளை உடனடியாக மாற்றவும்.
  4. உங்கள் கணக்கைக் கண்காணிக்க அல்லது தற்காலிகமாக முடக்க உங்கள் வங்கி/பேமண்ட் சேவை வழங்குநரை உடனே தொடர்பு கொள்ளவும்.

புகார் அளிப்பது எப்படி

நீங்கள் ஒரு மோசடி கும்பலால் குறிவைக்கப்பட்டதாகவோ அல்லது ஏமாற்றப்பட்டதாகவோ சந்தேகித்தால், உடனடியாக பின்வரும் வழிகளில் புகார் அளிக்கவும்:

PhonePe-வில் புகாரளிக்க:

  • PhonePe குரூப் சாட்: அந்த குரூப் ஒரு மோசடி குழுவாக இருக்கலாம் என்று நீங்கள் சந்தேகித்தால், குரூப் ப்ரொஃபைல் பக்கத்திற்குச் சென்று வெளியேறு மற்றும் புகார் செய் ஆப்ஷன்களை கிளிக் செய்யலாம்.
  • PhonePe ஆப்: உதவி பகுதிக்குச் சென்று புகாரை எழுப்பவும்.
  • PhonePe வாடிக்கையாளர் சேவை: PhonePe-ஐ 80–68727374 அல்லது 022–68727374 என்ற எண்ணில் அழைக்கவும்.
  • சோஷியல் மீடியா புகாரளித்தல்:
  • குறைதீர்க்கும் போர்ட்டல்: PhonePe குறைதீர்க்கும் போர்ட்டலில் புகார் பதிவு செய்யவும்.

அதிகாரிகளிடம் புகாரளித்தல்:

  • சைபர் கிரைம் பிரிவு: சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் அளிக்கவும் அல்லது 1930 என்ற எண்ணை அழைக்கவும்.
  • தொலைத்தொடர்புத் துறை (DOT): சஞ்சார் சாத்தி போர்ட்டலில் உள்ள சக்ஷு வசதி மூலம் சந்தேகத்திற்கிடமான செய்திகள், அழைப்புகள் அல்லது வாட்ஸ்அப்/டெலிகிராம் மோசடிகளைப் புகாரளிக்கவும்.

முக்கிய நினைவூட்டல்PhonePe ஒருபோதும் இரகசியமான அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்காது. Phonepe.com டொமைனிலிருந்து வராத மின்னஞ்சல்களைப் புறக்கணிக்கவும். நீங்கள் மோசடியைச் சந்தேகித்தால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும்.

Keep Reading