
Trust & Safety
போலி சப்ஸ்கிரிப்ஷன் மேண்டேட்களை கண்டறிவது எப்படி?
PhonePe Regional|2 min read|19 May, 2026
சப்ஸ்கிரிப்ஷன் மேண்டேட் அல்லது ஆட்டோபே என்பது உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து OTT சந்தாக்கள், மின்சாரக் கட்டணம் அல்லது EMI போன்ற தொடர்ச்சியான பேமண்ட்களுக்காக உங்கள் கணக்கிலிருந்து தானாகவே பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு உங்கள் வங்கிக்கு நீங்கள் வழங்கும் ஒரு அனுமதியாகும். இந்த சப்ஸ்கிரிப்ஷன் மேண்டேட்கள், ஒவ்வொரு முறையும் கைமுறையாகப் பணம் செலுத்தும் சிரமத்தைக் குறைத்து, பணப்பரிவர்த்தனையை எளிமையாக்கினாலும், இந்த டிஜிட்டல் வசதியுடன் சில சைபர் பாதுகாப்பு அபாயங்களும் ஒளிந்துள்ளன.
மோசடி செய்பவர்கள் இந்த ஆட்டோபே அம்சத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நீங்கள் அவசரத்தில் எதையாவது கிளிக் செய்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கையில், ஏதேனும் பேமண்ட் கோரிக்கைகள் அல்லது மேண்டேட் அப்ரூவல்கள் போன்றவற்றை உங்களுக்கு அனுப்புவார்கள். அவர்கள் ஏதேனும் ஓர் அடையாளம் தெரியாத அல்லது அங்கீகரிக்கப்படாத மொபைல் எண்ணில் இருந்து, “மின்சாரக் கட்டணம் நிலுவையில் உள்ளது”, “லாட்டரி வரி செயலாக்கம்” அல்லது “KYC புதுப்பித்தல் கட்டணம்” என்பது போன்ற போலியான காரணங்களைக் கூறி உங்களை ஏமாற்ற முயற்சி செய்யலாம்.
போலியான மேண்டேட்டை எப்படிக் கண்டறிவது
மோசடியான மேண்டேட் கோரிக்கைகளைக் கண்டறிய எப்போதும் சில அறிகுறிகள் இருக்கும். நீங்கள் கவனிக்க வேண்டியவை இதோ:
- ஒருமுறை அல்லது தொடர்ச்சியான பேமண்ட் வகை: நீங்கள் மின்சாரக் கட்டணம் போன்ற ஒருமுறை மட்டுமே செலுத்த வேண்டிய பில்லைக் கட்டும்போது, உங்களுக்கான அப்ரூவல் ரிக்வெஸ்ட்டில் “ரிக்கரிங்” (தொடர் கட்டணம்) என்ற வார்த்தை கண்டிப்பாக இருக்கக் கூடாது. எனவே, எந்தவொரு பேமண்ட்டையும் அப்ரூவ் செய்வதற்கு முன், அதில் உள்ள மெசேஜை கவனமாகப் படியுங்கள். மேலும், அந்த ரிக்வெஸ்ட் (BESCOM, Jio போன்ற) அங்கீகரிக்கப்பட்ட பில்லர்களிடமிருந்து வந்துள்ளதா அல்லது ஏதேனும் சாதாரண மொபைல் எண்ணில் இருந்து வந்துள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். PhonePe செயலியில், அங்கீகரிக்கப்பட்ட பில்லர்களுக்கு அருகில் எப்போதும் ஒரு பச்சை நிற டிக் மார்க் இருக்கும்.
- சரிபார்க்கவும்: உங்களுக்கு வந்திருக்கும் ஆட்டோபே மேண்டேட் உண்மையானதா அல்லது மோசடியானதா என்பதில் சந்தேகம் இருந்தால், உடனடியாக உங்கள் PhonePe ப்ரொஃபைல்> Autopay Settings/ஆட்டோபே அமைப்புகள் பகுதிக்குச் செல்லுங்கள். அங்கு உங்களுக்குத் தெரியாத, அடையாளம் காண முடியாத ஏதேனும் மேண்டேட் இருந்தால், அதை உடனே டெலீட் செய்துவிடுங்கள்.
- ஆதாரம்: உண்மையான ஆட்டோபே மேண்டேட்கள் எப்போதும் நீங்கள் பயன்படுத்தும் வணிகச் செயலியிலிருந்துதான் தொடங்கும் (உதாரணமாக, நீங்கள் Netflix செயலியில் சப்ஸ்கிரைப் செய்யும்போது, அங்கிருந்து PhonePe ஆட்டோபேவை தேர்ந்தெடுப்பது போல). ஆனால், மோசடி மேண்டேட்கள் பெரும்பாலும் உங்களுக்கு வரும் ஏதேனும் ஒரு சாதாரண SMS லிங்க் மூலமாகவோ அல்லது தேவையில்லாத பாப்-அப் மூலமாகவோதான் வரும்.
பணத்தைப் பெறுவதற்கு நீங்கள் ஒருபோதும் உங்களுடைய UPI PIN-ஐ உள்ளிடத் தேவையில்லை. யாராவது உங்களிடம், “இந்த QR கோடை ஸ்கேன் செய்தால் உங்கள் ரீஃபண்ட் பணம் கிடைத்துவிடும்” என்று கூறினால், அவர்கள் உங்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று அர்த்தம்!
PhonePeவின் ப்ரீ-டெபிட் நோட்டிபிகேஷன்
உங்களுடைய அனுமதியின்றி உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, அது உங்களுக்கு அதிர்ச்சியைத் தரக்கூடாது என்பதில் PhonePe உறுதியாக உள்ளது. அதனால்தான், உங்களுக்காக 24 மணி நேர ரிமைண்டர் என்ற பாதுகாப்பு அம்சத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இது செயல்படும் விதம் இதோ:
- முன்னெச்சரிக்கை அறிவிப்பு: PhonePeவில் செட் செய்யப்பட்டுள்ள எந்தவொரு தொடர் ஆட்டோபே கட்டணத்திற்கும், அதற்கான பணம் கணக்கிலிருந்து எடுக்கப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே உங்களுக்கு நாங்கள் ஒரு நோட்டிபிகேஷனை அனுப்பிவிடுவோம்.
- நல்வாய்ப்பு: இந்த நோட்டிபிகேஷனைப் பார்த்தவுடன், “அடடா, இந்த ஆப்-ஐ நான் இப்போது பயன்படுத்துவதே இல்லையே!” என்று நீங்கள் நினைத்தால், அந்த ஆட்டோபேவை டெலீட் செய்ய உங்களுக்கு 24 மணி நேரம் அவகாசம் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் PhonePe ப்ரொஃபைல்> Autopay Settings/ஆட்டோபே அமைப்புகள் பகுதிக்குச் சென்று, அந்த மேண்டேட்டை உடனே டெலீட் செய்வது மட்டும்தான்.
PhonePe பாதுகாப்பு டிப்ஸ்: உங்களால் ஒரு ஆட்டோபேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஒரு நீண்ட தூரப் பயணம் செல்லும்போது அல்லது ஏதேனும் ஒரு சேவையிலிருந்து தற்காலிகமாக இடைவேளை எடுக்க நினைக்கும் போது, அதை முழுமையாக ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்கள் Autopay Settings/ஆட்டோபே அமைப்புகள் பகுதிக்குச் சென்று, Pause/இடைநிறுத்து பொத்தானை அழுத்தினால் போதும்; உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படும்.
சப்ஸ்கிரிப்ஷன் மேண்டேட் மோசடியில் நீங்கள் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ஒரு மோசடிக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தால், உடனடியாக உங்கள் PhonePe செயலியில் உள்ள “Autopay Settings/ஆட்டோபே அமைப்புகள்” பகுதிக்குச் சென்று, அந்த மேண்டேட்டை ரத்து செய்யுங்கள். அதனைத் தொடர்ந்து உடனே அதுபற்றி புகார் அளிக்கவும். இந்த நேரத்தில் ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானது.
PhonePe-வில் புகாரளிக்க:
- PhonePe ஆப்: உதவி பகுதிக்குச் சென்று புகாரை எழுப்பவும்.
- PhonePe வாடிக்கையாளர் சேவை: PhonePe-ஐ 80–68727374 அல்லது 022–68727374 என்ற எண்ணில் அழைக்கவும்.
- சோஷியல் மீடியா புகாரளித்தல்:
- Twitter: PhonePe Support
- Facebook: PhonePe Official
- குறைதீர்க்கும் போர்ட்டல்: PhonePe குறைதீர்க்கும் போர்ட்டலில் புகார் பதிவு செய்யவும்.
அதிகாரிகளிடம் புகாரளிக்க:
- சைபர் கிரைம் பிரிவு: சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் அளிக்கவும் அல்லது 1930 என்ற எண்ணை அழைக்கவும்.
- தொலைத்தொடர்புத் துறை (DOT): சஞ்சார் சாத்தி போர்ட்டலில் உள்ள சக்ஷு வசதி மூலம் சந்தேகத்திற்கிடமான செய்திகள், அழைப்புகள் அல்லது வாட்ஸ்அப்/டெலிகிராம் மோசடிகளைப் புகாரளிக்கவும்.
முக்கிய நினைவூட்டல்: PhonePe ஒருபோதும் இரகசியமான அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்காது. Phonepe.com டொமைனிலிருந்து வராத மின்னஞ்சல்களைப் புறக்கணிக்கவும். நீங்கள் மோசடியைச் சந்தேகித்தால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும்.
