
Trust & Safety
KYC மோசடியால் அடையாளத் திருட்டு: உங்கள் அடையாளத்தைப் பாதுகாக்கும் வழிகள்
PhonePe Regional|3 min read|18 July, 2025
நீங்கள் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கணக்கை உருவாக்கும்போது, அவர்கள் உங்கள் அடையாளத்தை சரிபார்க்கும்படி கேட்கிறார்கள். இது KYC செயல்முறை மூலம் செய்யப்படுகிறது, இதில் ஆதார், PAN அல்லது பிற RBI-அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிப்பது அடங்கும்.
இன்று, நிதி நிறுவனங்கள் இந்த சரிபார்ப்பு செயல்முறையை “டிஜிட்டல் KYC” மூலம் மேற்கொள்கின்றன. ஆஃப்லைன் சரிபார்ப்பை செய்ய முடியாத சூழ்நிலைகளில் வாடிக்கையாளரின் நேரடி புகைப்படங்கள் மற்றும் அவர்களின் ஆவணங்கள் அல்லது ஆதார் வைத்திருப்பதற்கான ஆதாரத்தைப் படம்பிடிப்பது தான் டிஜிட்டல் KYC ஆகும்.
KYC மோசடி மூலம் அடையாளத் திருட்டு என்றால் என்ன?
KYC அடையாளத் திருட்டில், மோசடிக்காரர்கள் உங்கள் தனிப்பட்ட தகவலை திருடுகிறார்கள் அல்லது போலியான அடையாளங்களை உருவாக்கி, அதைப் பயன்படுத்தி KYC செயல்முறையை மோசமாக நிறைவேற்றுகிறார்கள். ஒருமுறை சரிபாரிக்கப்பட்ட பிறகு, அவர்களால் உங்கள் கணக்குகளை அனுமதியில்லாமல் அணுக முடியும் அல்லது உங்கள் பெயரில் புதிய கணக்குகளைத் திறக்க முடியும், கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளை பெற்றுக்கொள்ள முடியும். இது உங்களுக்கு நிதி இழப்பையும், பெயருக்கு சேதம் விளைவிக்குமாறும் அமையும்.
இன்றைய டிஜிட்டல் உலகில், குறிப்பாக மோசடி செய்பவர்கள் KYC நடைமுறைகளை முடிக்கவும் உங்கள் கணக்குகளைக் கட்டுப்படுத்தவும் திருடப்பட்ட அல்லது போலி ஆவணங்களைப் பயன்படுத்துவதால் அடையாளத் திருட்டு ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
பல சூழ்நிலைகளில் அடையாளத் திருட்டு நிகழலாம்
சூழ்நிலை 1: மோசடி செய்பவர்கள் பல்வேறு ஃபிஷிங் முறைகள் மூலம் உங்கள் தனிப்பட்ட அடையாளத் தகவலைத் திருடலாம். அவர்கள் பெரும்பாலும் இந்தத் தகவலைத் தவறாகப் பயன்படுத்தி உங்கள் கணக்குகளை அணுகி அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைச் செய்கிறார்கள்.
அர்ஜுனை ஒரு மோசடி செய்பவர் அணுகினார், அவர் முதலீடு செய்வதன் மூலம் கவர்ச்சிகரமான வருமானம் கிடைக்குமென உறுதியளித்தார்.மேற்கொண்டு தொடர, அர்ஜுனிடம் அவரது தனிப்பட்ட விவரங்களைச் சரிபார்க்கும்படி கேட்கப்பட்டது. அந்த மோசடியாளரை நம்பி, தனது முதலீடுகள் பாதுகாப்பாக நிர்வகிக்கப்படும் என்று நம்பி, தனது கணக்குச் சான்றுகள் மற்றும் OTPகளைப் பகிர்ந்து கொண்டார் அர்ஜுன். இந்தத் திருடப்பட்ட தகவலைப் பயன்படுத்தி, மோசடி செய்பவர் அர்ஜுனின் கணக்கை அணுகி அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைச் செய்தார்.
சூழ்நிலை 2: மோசடியாளர்கள் உங்கள் கணக்கை அணுகுவதற்காக KYC செயல்முறையை முடிக்கச் சொல்லலாம். தகவல் அவர்களிடம் கிடைத்ததும், அவர்கள் உங்கள் கணக்கை முழுமையாகக் கட்டுப்படுத்தி தவறான வழிகளில் பயன்படுத்துவார்கள்.
அரசாங்க மானியத் திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெறுவதற்கு உதவுவதாகக் கூறி, ஒரு மோசடி நபர் ரோஹினியை அணுகினார். ஒரு கணக்கை உருவாக்கி KYC சரிபார்ப்பை முடிக்குமாறும் மானியத்தைப் பெறுவதற்கு அது அவசியமாக தேவை என்றும் அந்த மோசடி நபர் ரோஹினியிடம் கூறியுள்ளார். மோசடி செய்பவரை நம்பி, ரோஹினி தனது தனிப்பட்ட விவரங்களைச் சமர்ப்பித்தார். மோசடி செய்பவருக்கு ரோஹினியின் KYC தகவல்களை அணுக முடிந்ததும், அவரது கணக்கின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்து, அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கு அதைத் தவறாகப் பயன்படுத்தினர், இதன் விளைவாக ரோஹினிக்கு நிதி இழப்பு ஏற்பட்டது.
சூழ்நிலை 3: மோசடி செய்பவர்கள் உங்களை ஏமாற்றி உங்களுக்கு சொந்தமில்லாத ஒரு கணக்கிற்கான KYC செயல்முறையை முடிக்க வைக்கலாம். அதன் பிறகு, உங்களுக்குத் தெரியாமல் மோசடி நடவடிக்கைகளுக்காக அந்த கணக்கை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்
ஒரு மோசடி செய்பவர் டேவிட்டை தொடர்பு கொண்டு, அவருக்கு கடன் பெற உதவுவதாக உறுதியளித்தார். மோசடி செய்பவர் அவரிடம் டேவிட்டின் பெயரில் அல்லாத, மோசடி செய்பவரின் பெயரில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஒரு கணக்கில் KYC செயல்முறையை முடிக்கச் சொன்னார். அது கடன் விண்ணப்ப செயல்முறையின் ஒரு சட்டப்பூர்வமான பகுதி என்று நம்பி, டேவிட் அதற்கு இணங்கினார். KYC க்காக தனது தனிப்பட்ட விவரங்களைச் சமர்ப்பித்தார், தன்னை அறியாமலேயே மோசடி செய்பவருக்கு கணக்கின் முழு கட்டுப்பாட்டையும் வழங்கினார். பின்னர் மோசடி செய்பவர் மோசடி கடன் பரிவர்த்தனைகளுக்காக அந்த கணக்கைத் தவறாகப் பயன்படுத்தினார், இதனால் டேவிட் தன்னை அறியாமலேயே குறிப்பிடத்தக்க ஆபத்திற்கு உள்ளானார் .
KYC மோசடிகள் மற்றும் கணக்கு கைப்பற்றல் தொடர்பான பொதுவான எச்சரிக்கைக் குறிப்புகள்
- நீங்கள் கோராத கணக்கு திறப்பு குறித்து எதிர்பாராமல் வரும் அழைப்புகள் அல்லது மின்னஞ்சல்கள்.
- நீங்கள் அனுமதிக்காத பரிவர்த்தனைகள் தொடர்பான அலர்ட்கள் அல்லது SMS அறிவிப்புகள்.
- நீங்கள் விண்ணப்பிக்காத பில்கள் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பெறுவது.
- உங்கள் வங்கி அல்லது நிதிக் கணக்குகளை அணுகுவதில் சிரமம்.
- உண்மை என நம்ப வைக்கும் அளவுக்கு ஆச்சரியமாகவும் ஈர்க்கும் வகையிலும் இருக்கும் சலுகைகள், ஆனால் அவை உங்கள் அடையாளத்தைத் திருடும் மோசடி முயற்சிகளாக இருக்கலாம்.
அடையாளத் திருட்டு மற்றும் KYC மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி?
- உங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்திருங்கள்: தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது மெசேஜிங் ஆப்களில் முக்கியமான ஆவணங்கள் அல்லது OTPகளை ஒருபோதும் பகிர வேண்டாம்.
- பிஷிங் முயற்சிகள் குறித்து கவனமாக இருங்கள்: சந்தேகத்திற்கிடமான இணையதள லிங்குகளை கிளிக் செய்வது மற்றும் நம்பகமற்ற இணையதளங்களில் தனிப்பட்ட தகவல்களை பகிர்வது ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
- உங்கள் கணக்குகளை அடிக்கடி சரிபாருங்கள்: உங்கள் வங்கி அறிக்கைகள், கிரெடிட் ரிப்போர்ட்கள் மற்றும் கணக்குப் பயன்படுத்தல் விவரங்களைச் சரிபார்த்து, அதில் ஏதேனும் அனுமதி இல்லாத அணுகல் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
- வலுவான அடையாளச் சோதனையை பயன்படுத்துங்கள்: இரண்டு நிலை அடையாளச் சோதனையை (2FA) எங்கெல்லாம் பயன்படுத்த முடிகிறதோ அங்கெல்லாம் அதை இயக்கி வையுங்கள்.
- தகவல் தொடர்பு வரும் நிறுவனங்களை சரிபாருங்கள்: நிதி நிறுவனங்களிடமிருந்து எதிர்பாராத தகவல் தொடர்பு வந்தால், அவர்கள் உண்மையானவர்களா என்பதை அதிகாரப்பூர்வ தொடர்பு வழிகள் மூலம் உறுதிசெய்து கொள்ளுங்கள்.
- தனிப்பட்ட ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால் உடனே புகாரளிக்கவும்: உங்கள் அடையாள ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களிடம் அதுகுறித்து உடனே புகார் அளியுங்கள்.
- அதிகாரபூர்வ KYC வழிமுறைகளை மட்டுமே பயன்படுத்துங்கள்: KYC செயல்முறைகளைச் செய்யும்போது, அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது சரிபார்க்கப்பட்ட ஏஜென்ட்கள் மூலம் மட்டும் செய்யுங்கள்.
ஏதேனும் PhonePe கணக்கில் உங்கள் அடையாளத் தகவல் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால் என்ன செய்வது
PhonePe வழியாக மோசடிக்கு உள்ளாகியதாக அல்லது ஏமாற்றப்பட்டதாக சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுத்து கீழ்க்கண்ட வழிகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் புகார் அளியுங்கள்:
- PhonePe வாடிக்கையாளர் சேவை எண் PhonePe வாடிக்கையாளர் சேவையை 80–68727374 அல்லது 022–68727374 என்ற எண்ணில் அழைக்கவும். வாடிக்கையாளர் சேவை ஏஜென்ட் ஒரு டிக்கெட்டை எழுப்பி, உங்களுக்கு மேற்கொண்டு உதவுவார்.
- சமூக ஊடகங்கள் PhonePe இன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளில் மோசடி சம்பவங்களைக் குறித்து புகாரளிக்கவும்:
- Twitter: https://twitter.com/PhonePeSupport
- Facebook: https://www.facebook.com/OfficialPhonePe
- Twitter: https://twitter.com/PhonePeSupport
- குறை தீர்க்கும் சேவை உங்களிடம் ஏற்கனவே புகார் டிக்கெட் இருந்தால், உங்கள் டிக்கெட் ஐடியைப் பயன்படுத்தி https://grievance.phonepe.com/ என்ற முகவரியில் குறைகளைக் குறித்து புகாரளிக்கலாம்.
அதிகாரிகளிடம் புகாரளித்தல்
- சைபர் கிரைம் பிரிவு: சைபர் கிரைம் போர்ட்டலில் ஆன்லைனில் புகார் அளிக்கவும் அல்லது 1930 என்ற எண்ணை அழைக்கவும்.
- தொலைத்தொடர்புத் துறை (DOT): சஞ்சார் சாதி போர்ட்டலில் உள்ள சக்ஷு வசதி மூலம் சந்தேகத்திற்கிடமான செய்திகள், அழைப்புகள் அல்லது ஏதேனும் மோசடி கோரிக்கையைக் குறித்து புகாரளிக்கவும்.