
Trust & Safety
புதிய பயனாளிகளுக்குக் கட்டணம் செலுத்தும்போது இருக்கும் ஆபத்துகளைப் புரிந்துகொள்ளுதல்
PhonePe Regional|2 min read|17 September, 2026
நீங்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கும் ஒரு சோஷியல் மீடியா பயர்-செல்லர் குழுவில் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு மெத்தை தேவை என்று நீங்கள் ஒரு பதிவு போடுகிறீர்கள். சில நிமிடங்களில், அந்தக் குழுவில் இல்லாத ஒருவரிடமிருந்து உங்களுக்கு ஒரு டைரக்ட் மெசேஜ் (DM) வருகிறது. உங்கள் தேவைக்கேற்ற மெத்தை அவர்களிடம் இருப்பதாகக் கூறுகிறார்கள். வேறு சிலர் அதை வாங்க ஆர்வமாக இருப்பதால், உடனடியாக முன்பணம் செலுத்த வேண்டும் என்று உங்களை வற்புறுத்துகிறார்கள். நீங்கள் அந்த நபருடன் பேசி, பாதி தொகையை முன்பணமாகவும், மீதி தொகையை மெத்தைப் பெற்ற பின்னரும் தருவதாக ஒப்புக்கொள்கிறீர்கள். முன்பணம் அனுப்ப ஒரு எண்ணை அவர்கள் பகிர்கிறார்கள். நீங்கள் PhonePe மூலம் பணம் அனுப்ப முயலும் போது, ஆப் உங்களை எச்சரிக்கிறது, ஆனால் நீங்கள் அதைத் தாண்டி பணம் செலுத்துகிறீர்கள்.
இதுபோன்ற அல்லது இதே போன்ற ஒரு சூழ்நிலையில் என்ன தவறாக நடக்கக்கூடும்?
புதிய பயனாளிகளுக்குப் பணம் அனுப்புவது அல்லது பரிவர்த்தனை செய்வது அடிக்கடி நிகழும் ஒன்றாகும். இத்தகைய பரிவர்த்தனைகளின்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் புரிந்துகொள்வது, சாத்தியமான மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்கவும், உங்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை பயணத்தில் பாதுகாப்பாக இருக்கவும் உதவும்.
இந்த மோசடி எவ்வாறு செயல்படுகிறது: அவசரமும் சுரண்டலும்
- போலி அவசரத்தை உருவாக்குதல்: மோசடி செய்பவர்கள் போலி அவசர நிலைகளை உருவாக்கி, முடிவடையப் போகும் ஒரு ஆஃபர், கைநழுவப்போகும் சேவை அல்லது அவசர ரீஃபண்ட் ஆகியவற்றைப் போலக் காட்டுவார்கள். நேரம் கடந்து கொண்டிருக்கிறது என்ற இந்த உணர்வு, உங்கள் இயல்பான எச்சரிக்கை உணர்வைப் பரிசீலிக்காமலேயே விரைந்து செயல்பட உங்களைத் தூண்டுகிறது.
- ஆப்பில் உள்ள பாதுகாப்பு எச்சரிக்கைகளைப் புறக்கணித்தல்: பரிவர்த்தனையை முடிப்பதற்கு மோசடி செய்பவர்கள் உருவாக்கும் தவறான அவசரத்தின் காரணமாக, பயனர்கள் பெரும்பாலும் தங்கள் இயல்பான உள்ளுணர்வை மீறி, PhonePe ஆப்-ல் வரும் முக்கிய பாதுகாப்பு எச்சரிக்கைகளைப் புறக்கணிக்கிறார்கள்.
- சரிபார்க்கப்படாத விற்பனையாளர்கள் முழு தொகையையும் முன்பணமாகக் கேட்பது: இன்ஸ்டாகிராம், டெலிகிராம் அல்லது பிற சோஷியல் ஆப்ஸ்களில் உள்ள சரிபார்க்கப்படாத ஆன்லைன் விற்பனையாளர்கள், பொருட்கள் அல்லது சேவைகளை அனுப்பும் முன் முழு கட்டணத்தையும் செலுத்த வற்புறுத்துகிறார்கள். இதனால், பரிவர்த்தனை முடிந்தவுடன், எந்தவொரு பொறுப்புக்கூறலும் இன்றி அவர்கள் தலைமறைவாவதற்கு இது வழிவகுக்கிறது.
ஒரு சிறிய தவறின் உண்மையான தாக்கம்
- உடனடி பேமெண்ட்டுகள்: உங்கள் நிதி ஆதாரங்களைப் பாதுகாப்பதே மிக முக்கியம்- நீங்கள் ஒரு UPI பின்னை உள்ளீடு செய்தவுடன், அப்பரிமாற்றம் முழுமையடைந்ததாகக் கருதப்படும் என்பதையும், அதன் பிறகு பணத்தை மீட்டெடுப்பது சிரமமான அல்லது சில சமயங்களில் சாத்தியமற்ற ஒரு செயலாக அமையக்கூடும் என்பதையும் புரிந்துகொள்வது அவசியம்.
- நிதி இழப்பு: இல்லாத சேவைகள், போலியான பொருட்கள் அல்லது மோசடியான செயலாக்கக் கட்டணங்கள் ஆகியவற்றால் பணத்தை இழப்பதும், அதற்கான பணத்தைத் திரும்பப் பெற நடைமுறையில் எந்த வழியும் இல்லாததும் மிகுந்த விரக்தியை அளிக்கிறது.
பாதுகாப்பான பரிவர்த்தனைகளை உறுதி செய்வதற்கான நடைமுறை விதிகள்
- அவசரப்படுத்துவதை எப்போதுமே ஒரு எச்சரிக்கை சமிக்ஞையாகக் கருதுங்கள்: உண்மையான வணிகங்களோ அல்லது தனிநபர்களோ விவரங்களைச் சரிபார்க்க உங்களுக்கு நேரம் தராமல் உடனடியாகப் பணம் அனுப்பக் கோர மாட்டார்கள். அவசரப்படுத்துவதே முதல் மற்றும் தெளிவான எச்சரிக்கை சமிக்ஞையாகும்.
- ஒவ்வொரு முறையும் பெயரைச் சரிபாருங்கள்: பணம் செலுத்துவதற்கு முன், உறுதிப்படுத்தல் திரையில் காட்டப்படும் பதிவுசெய்யப்பட்ட பெயரைப் பாருங்கள். நீங்கள் பணம் செலுத்த நினைக்கும் நபர் அல்லது நிறுவனத்தின் பெயருடன் அது பொருந்தவில்லை என்றால், அந்தப் பரிவர்த்தனையை நீங்கள் ரத்து செய்யலாம்.
- மனித தவறுக்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொள்ளுங்கள்: முதல் முறை பேமெண்ட் செய்வதற்கு முன் விவரங்களை இருமுறை சரிபார்ப்பது மிகவும் முக்கியமானது, ஏனெனில் UPI என்பது உடனடியானது மற்றும் ரத்து செய்ய முடியாதது.
- பணத்தைப் பெறுவது எப்போதுமே ஒரு செயலற்ற நிகழ்வு: எவ்வளவு எளிமையாக இருந்தாலும் சரி – உங்கள் வங்கி கணக்கில் பணத்தைப் பெற நீங்கள் QR கோடை ஸ்கேன் செய்யவோ, உங்கள் UPI பின்னை உள்ளிடவோ அல்லது போன் OTP-யைப் பகிரவோ தேவையில்லை.
- ஆப் பாப்-அப்கள் மற்றும் நோட்டிஃபிகேஷன்களை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்: உங்கள் பேமண்ட் ஆப்செயலி ஒரு கணக்கை அதிக ஆபத்துள்ளதாகவோ அல்லது சமீபத்தில் உருவாக்கப்பட்டதாகவோ குறிப்பிட்டால், அந்த எச்சரிக்கையைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, நிறுத்தி இருமுறை சரிபார்க்கவும். PhonePe போன்ற செயலிகள், அதிக ஆபத்துள்ள எண்கள், ஸ்பேம் குறிச்சொற்கள் அல்லது புதிதாக உருவாக்கப்பட்ட கணக்குகளுக்காகத் தொடர்ந்து பாப்-அப் எச்சரிக்கைகளைக் காண்பிக்கின்றன.
- முதல் முறை பயனாளிகளுக்கு முழுத் தொகையையும் ஒருபோதும் செலுத்த வேண்டாம்: பேமண்ட் செய்யும்போது, தவணை முறையிலான கட்டணங்கள், கேஷ்-ஆன்-டெலிவரி ஆகியவற்றைக் கேட்கவும் அல்லது தெளிவான வாங்குபவர் பாதுகாப்பு விதிகளை வழங்கும் நம்பகமான தளங்களைப் பயன்படுத்தவும்.
ஒரு உரையாடலின் போதே சந்தேகத்திற்குரிய சில அறிகுறிகள் தென்படலாம்; எனவே, சரியான தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பதும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொள்வதுமே முக்கியம்.
நீங்கள் ஒரு மோசடியால் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்
நீங்கள் ஒரு மோசடியால் இலக்காக்கப்பட்டதாகச் சந்தேகத்தால், உடனடியாகப் புகாரளிக்கவும். ஒவ்வொரு வினாடியும் முக்கியமானது.
PhonePe-வில் புகாரளித்தல் :
- PhonePe வாடிக்கையாளர் சேவை: 080-68727374 / 022-68727374 ஆகிய எண்களை அழைக்கவும்
- லாகின் தொடர்பான சிக்கல்கள்: https://support.phonepe.com/ வழியாக டிக்கெட் உயர்த்தவும்
- சோஷியல் மீடியாவில் புகாரளித்தல்:
- Twitter: PhonePe Support
- Facebook: PhonePe Official
- குறைதீர்க்கும் போர்ட்டல்: PhonePe குறைதீர்க்கும் போர்ட்டலில் புகார் பதிவு செய்யவும்.
அதிகாரிகளிடம் புகாரளித்தல்:
- சைபர் கிரைம் பிரிவு: சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் அளிக்கவும் அல்லது 1930 என்ற எண்ணை அழைக்கவும்.
- தொலைத்தொடர்புத் துறை (DOT): சஞ்சார் சாத்தி போர்ட்டலில் உள்ள சக்ஷு வசதி மூலம் சந்தேகத்திற்கிடமான செய்திகள், அழைப்புகள் அல்லது வாட்ஸ்அப்/டெலிகிராம் மோசடிகளைப் புகாரளிக்கவும்.
முக்கிய நினைவூட்டல் — PhonePe ஒருபோதும் இரகசியமான அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்காது. Phonepe.com டொமைனிலிருந்து வராத மின்னஞ்சல்களைப் புறக்கணிக்கவும். நீங்கள் மோசடியைச் சந்தேகித்தால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும்.
