இந்த ஆவணம் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 (அவ்வப்போது இருக்கலாம்), அதன் கீழ் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 ஆல் திருத்தப்பட்ட பல்வேறு சட்டங்களில் மின்னணு பதிவுகள் தொடர்பான திருத்தப்பட்ட விதிகளின் அடிப்படையில் இது ஒரு மின்னணு பதிவாகும். இந்த மின் பதிவு கம்ப்யூட்டரால் உருவாக்கப்படுவதால் இதற்கு எவ்விதமான ஃபிசிக்கல் அல்லது டிஜிட்டல் கையொப்பங்களும் தேவை இல்லை.
PhonePe ஆப் வழியாக இந்த செயல்பாட்டை அணுகுவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு முன்பு இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக படிக்கவும்-ஆட்டோபே (“ஆட்டோபே விதிமுறைகள்”) இந்த ஆட்டோபே விதிமுறைகள் உங்களுக்கும் PhonePe பிரைவேட் லிமிடெட் (“PhonePe”) க்கும் இடையிலான சட்டப்பூர்வ ஒப்பந்தமாகும், அதன் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம், அலுவலகம்-2, மாடி 5, விங் ஏ, பிளாக் ஏ, சலார்பூரியா சாப்ட்ஸோன், பெல்லந்தூர் கிராமம், வர்தூர் ஹோப்ளி, அவுட்டர் ரிங் சாலை, பெங்களூரு தெற்கு, பெங்களூர், கர்நாடகா, இந்தியா, 560103 என்ற முகவரியில் அமைந்துள்ளது. கீழே வழங்கப்பட்டுள்ள ஆட்டோபே விதிமுறைகளை நீங்கள் படித்துவிட்டீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த ஆட்டோபே விதிமுறைகளுக்கு நீங்கள் உடன்படவில்லை அல்லது இந்த ஆட்டோபே விதிமுறைகளுக்கு கட்டுப்பட விரும்பவில்லை எனில், இந்த செயல்பாட்டைப் பெற/பயன்படுத்த வேண்டாம் என்று நீங்கள் தேர்வு செய்யலாம்.
இந்த ஆட்டோபே விதிமுறைகள் PhonePe ஆல் இயக்கப்பட்ட ஒரு செயல்பாட்டை நிர்வகிக்கின்றன, இதில் PhonePe பயனர் PhonePe ஆப்பில் தகுதியான வணிகருக்கு ஆட்டோபேவை (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி) அமைக்கலாம், அத்துடன் ஆட்டோபே விதிமுறைகளுக்குட்பட்டு PhonePe பயனரால் ஃப்ரிக்வன்ஸி அமைக்கப்பட்ட அல்லது தேர்வுசெய்ப்பட்டவாறு PhonePe பயனர் சார்பாக பணம் செலுத்துவதற்கு PhonePe ஐ முன்கூட்டியே அங்கீகரிக்கலாம்.
- வரையறைகள்
- “செயல்பாடுகள்” என்பது இந்த ஆட்டோபே விதிமுறைகளின் பிரிவு V இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள செயல்பாடுகளைக் குறிக்கும், அவை மேண்டேட்டின் செல்லுபடியாகும் காலத்தில் PhonePe பயனரால் மேற்கொள்ளப்பட்டதாக/கோரப்பட்டதாக இருக்கலாம்.
- “ஆட்டோ டாப்-அப் மாண்டேட்” என்பது UPI லைட் வசதிக்கான ஒரு மேண்டேட்டை (கீழே விவரிக்கப்பட்டுள்ளவாறு) குறிக்கிறது, இது UPI வசதி குறைந்தபட்ச மினிமம் பேலன்ஸை அடைந்தவுடன், ரிசர்வ் வங்கி, NPCI மற்றும்/அல்லது பிற ஒழுங்குமுறை அமைப்புகளால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட டாப்-அப் வரம்பு வரை UPI-லைட் வசதி இருப்பை தானாகவே டாப்-அப் செய்யும்.
- “தானியங்கி பேமண்ட்டுகள்””அல்லது “தானியங்கி பரிவர்த்தனைகள்” என்பது தகுதியான வணிகர்களுக்கு, ஒரு மேண்டேட்டின் கீழ் PhonePe பயனர் நிர்ணயித்த ஒரு குறிப்பிட்ட ஃபிரிக்வன்ஸி அடிப்படையில் PhonePe மூலம் இயக்கப்பட்ட அத்தகைய பேமண்ட்டுகளைக் குறிக்கும்.
- “தகுதியான வணிகர்கள்” என்பது இந்த ஆட்டோபே விதிமுறைகளின்படி PhonePe பயனர்களிடமிருந்து தானியங்கி பேமண்ட்டுகளை ஏற்றுக்கொள்வதற்கு PhonePe மூலம் இயக்கப்பட்டுள்ள தகுதியான வணிகர்கள், சேவை வழங்குநர்கள், பில்லர்கள் ஆகியோரைக் குறிக்கும்.
- “மேண்டேட்” என்பது இந்த ஆட்டோபே விதிமுறைகளின்படி தகுதியான வணிகர்களுக்கு தானியங்கி பேமண்ட்டுகள் செலுத்த PhonePe ஆப் வழியாக ஒரு PhonePe பயனர் வழங்கிய நிலையான அறிவுறுத்தல்/அங்கீகாரத்தைக் குறிக்கும்.
- “மேண்டேட் எக்ஸிக்யூஷன்” என்பது ஒரு குறிப்பிட்ட ஆட்டோபே பேமண்ட்டிற்கு PhonePe மூலம் இயக்கப்பட்ட உங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பேமண்ட் முறைப்படி, உங்கள் வழங்குநர் வங்கியால் ஒரு மேண்டேட் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தொகையை கழிப்பதாகும்.
- “மேண்டேட் வரம்புகள்” என்பது ஒரு மேண்டேட் தொடர்பான வரம்புகளைக் குறிக்கும், அவை (i) தானியங்கி பேமண்ட்டின் முன் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு அல்லது (ii) தானியங்கி பேமண்ட்டின் வேரியபிள் மதிப்பு, ரிசர்வ் வங்கி/NPCI ஆல் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச/ஒட்டுமொத்த அனுமதிக்கப்பட்ட வரம்பிற்கு உட்பட்டு இருக்கலாம். (அவ்வப்போது மாற்றப்படுகிறது).
- “மேண்டேட் பதிவு” என்பது ஒரு மேண்டேட் தொடர்பாக ஒரு PhonePe பயனர் வழங்க வேண்டிய விவரங்கள்/உள்ளீடுகளைக் குறிக்கும், இதில் (i) ஆணை தொடர்பான அளவுருக்கள், (ii) ஆணை தொடர்பாக தொடக்க தேதி மற்றும் இறுதி தேதி, (iii) மேண்டேட் வரம்புகள், (iv) மேண்டேட் ஃப்ரிக்வன்ஸி ஆகியவை அடங்கும்.
- மேண்டேட் அமைப்பு
PhonePe ஆப் வழியாக உங்கள் வழங்குநர் வங்கியால் சரிபார்ப்பு/அங்கீகாரம் செய்யப்பட்ட பின்னரே ஒரு மேண்டேட் அமைக்கப்படும். ஒரு மேண்டட்டை அமைப்பதற்காக, ஒரு குறிப்பிட்ட தானியங்கி பேமண்ட் தொடர்பாக கட்டாய பதிவு தொடர்பான விவரங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும், இந்த செயல்பாட்டின் கீழ் PhonePe மூலம் செயல்படுத்தப்பட்ட அத்தகைய பேமண்ட் முறைகள்/பேமண்ட் கருவிகள் ஆகியவற்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.
மேண்டேட் பதிவு செய்த பிறகு, நீங்கள் நிர்ணயித்த மேண்டேட் ஃப்ரிக்வன்ஸி அடிப்படையில் ஒரு மேண்டேட் நிறைவேற்றம் மேற்கொள்ளப்படும், மேலும் அத்தகைய அங்கீகரிக்கப்பட்ட தொகை உங்கள் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு/கடன் வரம்பிலிருந்து கழிக்கப்பட்டு, அத்தகைய தானியங்கி பேமண்ட் தொடர்பாக நியமிக்கப்பட்ட பணம் செலுத்துபவர்/பயனாளிக்கு மாற்றப்படும்.
நிராகரிப்பு, அடையவில்லை அல்லது ஒரு மேண்டேட்டின் நிலுவையில் உள்ள நிலை அல்லது ஒரு மேண்டேட்டை நிறைவேற்றுதல் தொடர்பான எந்தவொரு பொறுப்பையும் PhonePe இதன் மூலம் நிராகரிக்கிறது, மேலும் இது தொடர்பாக உங்கள் வழங்குநர் வங்கியால் மேற்கொள்ளப்பட்ட அத்தகைய சரிபார்ப்புகள்/அங்கீகாரம் தொடர்பாக எந்தப் பங்கும் பொறுப்பும் இருக்காது. - UPI லைட்டிற்கான ஆட்டோ-டாப் மேண்டேட்
நீங்கள் PhonePe ஆப்பின் மூலம் இயக்கப்பட்ட UPI லைட் வசதியைத் தேர்ந்தெடுத்திருந்தால், UPI லைட் வசதிக்கான ஆட்டோ டாப்-அப்பிற்கு பொருந்தக்கூடிய கட்டாய வரம்பின் படி ஆட்டோ-டாப்-அப் மேண்டேட்டை அமைப்பதற்கான விருப்பம் உங்களுக்கு இருக்கும்.
உதாரணமாக: UPI லைட் வசதியின் பேலன்ஸ் INR 200க்கும் குறைவாக இருந்தால் UPI லைட் வசதியில் தானாக INR 300 சேர்க்கும் வகையில் PhonePe பயனர் ஆட்டோ- டாப்-அப் மேண்டேட்டை அமைக்கலாம். அதன்படி, INR 200க்கும் குறைவாக பேலன்ஸ் இருக்கும் ஒவ்வொருமுறையும் PhonePe பயனரின் வங்கிக் கணக்கிலிருந்து INR 300 டெபிட் செய்யப்படும். - மேண்டேட்டை நிறைவேற்றுதல்
உங்கள் வங்கிக் கணக்கில் போதுமான பணத்தை நீங்கள் வைத்திருந்தால் மட்டுமே உங்கள் மேண்டேட்டுகள் செயலாக்கப்படும். மேலும் மேண்டேட் அமைக்குபோது தேர்ந்தெடுத்த பேமண்ட் முறையின் அடிப்படையில் பொதுவாக கிரெடிட் லிமிட்கள் இருக்கும். நீங்கள் மேற்கண்டவற்றை செய்யத் தவறும்பட்சத்தில் உங்கள் மேண்டேட்டை நிறைவேற்ற முடியாது.
PhonePe மூலம் மேண்டேட்டை செயலாக்கிய பிறகு உங்களின் தகுதிவாய்ந்த வணிகரிடமிருந்து தானியங்கி பேமண்ட் தொடர்பான இறுதி பேமண்ட் நிலை உறுதிப்படுத்துதலை நீங்கள் பெறுவதற்கு அந்த தானியங்கி பேமண்ட் செலுத்திய தேதியிலிருந்து 2 [இரண்டு] முதல் 10 [நாட்கள்] வரை ஆகலாம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
அவ்வப்போது புதுப்பிக்கப்படும் பொருந்தக்கூடிய சட்டங்கள், அறிவிப்புகள், வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் கீழ் ஒழுங்குமுறை அமைப்புகளால் பரிந்துரைக்கப்பட்ட முறையில் உங்களின் தானியங்கி பேமண்ட் தொடர்பாக உங்களின் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு, கிரெடிட் வரம்பு (பொருந்தக்கூடிய பட்சத்தில்) ஆகியவை டெபிட் செய்யப்படுவதற்கு முன்பாகவே தெரிவிக்கப்படும். மேலும் மேண்டேட் நிறைவேற்றப்பட்ட பிறகு மேண்டேட் மற்றும் மேண்டேட் நிறைவேற்றம் தொடர்பான பிற விவரங்கள் உங்களின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும். - மேண்டேட் தொடர்புடைய செயல்கள்:
ஒரு மேண்டேட்டின் செல்லுபடியாகும் காலத்தின்போது PhonePe ஆப் வழியாக உங்கள் மேண்டேட்டை (ஆட்டோ டாப்-அப் மேண்டேட் உட்பட) நிர்வகிப்பது தொடர்பாக பின்வரும் நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ளலாம் (i) மேண்டேட் பதிவு செய்யும் நேரத்தில் நீங்கள் நிர்ணயித்த மேண்டேட் வரம்புகளை மாற்றியமைத்தல், (ii) மேண்டேட்டை இடைநிறுத்துதல்/அல்லது தொடருதல், (iii) தானியங்கி பேமண்ட் தொடர்பாக உங்கள் வழங்குநர் வங்கியால் ரிடம்ப்ஷன் டிரகரை செயல்படுத்துவதற்கு முன்பே மேண்டேட்டை திரும்பப் பெறுதல்/ரத்துசெய்தல்
மேண்டேட் தொடர்பான உங்களின் செயல்பாடுகள் உங்கள் வழங்குநர் வங்கியின் கூடுதல் சரிபார்ப்பு அல்லது அங்கீகாரத்திற்கு உட்பட்டதாக இருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் செயல்பாடுகள் இந்த ஆட்டோபே விதிமுறைகளுக்கு ஏற்பவும், பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்கவும் இருக்கும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள், மேலும் RBI/NPCI அல்லது உங்கள் வழங்குநர் வங்கி பரிந்துரைத்த நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அவ்வப்போது பொருந்தக்கூடிய கால வரம்புகளை நீங்கள் கடைப்பிடிப்பீர்கள் என்பதையும் ஏற்கிறீர்கள். - கட்டணங்கள்
மேண்டேட் தொடர்பாக கட்டணங்கள் விதிக்கப்படலாம். பொருந்தக்கூடிய அத்தகைய கட்டணங்கள் PhonePe இல் காட்டப்படும். மேலும் அது தொடர்பாக அத்தகைய கட்டணங்களை ஏற்க ஒப்புக்கொள்கிறீர்கள். - லையபிலிட்டிகள்
நீங்கள் பின்வருவனவற்றை ஏற்று ஒப்புக்கொள்கிறீர்கள்:- PhonePe என்பது உங்கள் வழங்குநர் வங்கியால் தானியங்கி பேமண்ட்டுக்காக டிரிகர் செய்யப்பட்ட மேண்டேட்டுகளின் பேமண்ட்டுகளை எளிதாக்கும் செயல்முறையை மேற்கொள்கிறது. ஆனால் நியமிக்கப்பட்ட பணம் செலுத்துபவர்/பயனாளிக்கு செலுத்தப்பட வேண்டிய பேமண்ட் பரிவர்த்தனையின் ஒரு தரப்பாக செயல்படாது.
- PhonePe பயனரால் அமைக்கப்பட்ட மேண்டேட்டுகள் மற்றும் PhonePe ஆப் வழியாக மண்டேட் பதிவுக்கு பகிரப்பட்ட விவரங்களின் அடிப்படையில் அனைத்து மேண்டேட் நிறைவேற்றங்களுக்கும் PhonePe ஆப் வழியாக நடைபெறும். உங்களின் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு, பொருந்தும் பட்சத்தில் கிரெடிட் வரம்பு ஆகியவற்றிற்கான சரிபார்ப்பிற்காக கழிக்கப்படும் தொகை அல்லது குறிப்பிட்ட தானியங்கி பேமண்ட்டிற்கான இரட்டிப்பு பேமண்ட் பிடித்தம் ஆகியவற்றிற்கு PhonePe பொறுப்பேற்காது. PhonePe ஆப் வழியாக இந்தச் செயல்பாட்டின் கீழ் ஒவ்வொரு மேண்டேட்டிற்கும் வழங்கப்பட்ட/அங்கீகரிக்கப்பட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும்.
- தானியங்கி பேமண்ட் தொடர்பாக குறிப்பிட்ட பணம் செலுத்துநர்/பயனாளியிடமிருந்து நீங்கள் மேற்கொள்ளும் பொருட்கள், சேவைகள் தொடர்புடைய எந்தவொரு சிக்கல்கள் அல்லது சர்ச்சைகளுக்கும் PhonePe பொருப்பேற்காது. பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பாக உங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு தகுதிவாய்ந்த வணிகரிடம் நேரடியாக தொடர்புகொள்ளலாம்.
- மேண்டேட்டை நிறைவேற்றுவதற்காக உங்கள் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு/பொருந்தக்கூடிய பட்சத்தில் கிரெடிட் வரம்பில் போதுமான நிலுவைத் தொகையை வைத்திருக்க ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு/பொருந்தக்கூடியபட்சத்தில் கிரெடிட் வரம்பில் போதுமான நிதி இல்லாததால் மேண்டேட்டை நிறைவேற்ற முடியாத அல்லது ரத்து ஆவதன் தொடர்பாக எந்தவொரு பொறுப்புகளுக்கும் PhonePe பொறுப்பேற்காது.
- இந்த செயல்பாட்டின் கீழ் PhonePe ஆப் மூலம் செயல்படுத்தப்பட்ட உங்கள் செயல்பாடுகள், மேண்டேட்கள், மேண்டேட் நிறைவேற்றங்கள் ஆகியவற்றை தவறாமல் மதிப்பாய்வு செய்வது உங்கள் பொறுப்பாகும். தானியங்கி பேமண்ட்டுகள் தொடர்பாக உங்கள் வழங்குநர் வங்கி/தகுதியுள்ள வணிகரால் விதிக்கப்படும் அங்கீகரிக்கப்படாத பேமண்ட்டுகள், அபராதங்கள், தாமத பேமண்ட்டுகள் அல்லது தானியங்கி பேமண்ட் தொடர்பாக நீங்கள் நிர்ணயித்த மேண்டேட் பதிவு /மேண்டேட் வரம்பு தொடர்பான எந்தவொரு முரண்பாடுகளுக்கும் PhonePe பொறுப்பேற்காது.
- இந்த அம்சத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட தானியங்கி பேமண்ட்டிற்கான பொருத்தமான வழிகாட்டுதல்கள்/பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் RBI / NPCI பரிந்துரைத்த மேண்டேட் வரம்புகளுக்கு இணங்குவதையும் பின்பற்றுவதையும் உறுதிசெய்கிறீர்கள்.
- பொது
- இந்த ஆட்டோபே விதிமுறைகள் தொடர்பாக எழக்கூடிய எந்தவொரு மற்றும் அனைத்து இழப்புகள், சேதங்கள், நடவடிக்கைகள், உரிமைகோரல்கள் மற்றும் பொறுப்புகள் (சட்ட செலவுகள் உட்பட) ஆகியவற்றிலிருந்து PhonePe, அதன் துணை நிறுவனங்கள், ஊழியர்கள், இயக்குநர்கள், அதிகாரிகள், முகவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு பாதிப்பில்லாமல் இழப்பீடு வழங்க ஒப்புக்கொள்கிறீர்கள்.
- இழந்த லாபங்கள் அல்லது வருவாய்கள், வணிகத் தடங்கல், இழந்த வணிக வாய்ப்புகள், தரவு இழப்பு அல்லது பிற பொருளாதார நலன்களின் இழப்புகள் உட்பட, ஆனால் அவை மட்டும் அல்லாமல், மறைமுக, பின்விளைவு, தற்செயலான, தண்டனைக்குரிய சேதங்களுக்கு PhonePe பொறுப்பேற்காது. வழங்கப்பட்ட தகவலைப் பயன்படுத்துதல் அல்லது பயன்படுத்த இயலாமை, காரணம் எதுவாக இருந்தாலும், ஏமாற்றுதல், அலட்சியம், உத்தரவாதம் அல்லது இந்த ஆட்டோபே விதிமுறைகளுடன் தொடர்புடையதாக இருந்தாலும் இந்த சிக்கல் பின்வரும் ஒப்பந்த மீறல்களால் ஏற்பட்டதா என்பதைப் பொருட்படுத்தாமல் இது பொருந்தும்.
- இந்த ஆட்டோபே விதிமுறைகள் அதன் சட்டக் கொள்கைகளின் முரண்பாட்டைப் பொருட்படுத்தாமல், இந்திய சட்டங்களால் நிர்வகிக்கப்படும். உங்களுக்கும் PhonePeக்கும் இடையிலான எந்தவொரு உரிமைகோரலும் அல்லது சர்ச்சையும் இந்த ஆட்டோபே விதிமுறைகள் தொடர்பாக முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ எழும் எந்தவொரு உரிமைகோரலும் பெங்களூருவில் அமைந்துள்ள தகுதிவாய்ந்த அதிகார வரம்பின் நீதிமன்றத்தால் பிரத்தியேகமாக தீர்மானிக்கப்படும்.
- இந்த ஆட்டோபே விதிமுறைகளின்படி கிடைக்கப்பெற்ற இந்த செயல்பாட்டின் துல்லியம் மற்றும் உண்மைத்தன்மை குறித்து வெளிப்படையான அல்லது மறைமுகமான அனைத்து உத்தரவாதங்களையும் PhonePe மறுக்கிறது.
- PhonePe பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் PhonePe தனியுரிமைக் கொள்கை ஆகியவை குறிப்பு மூலம் இந்த ஆட்டோபே விதிமுறைகளில் இணைக்கப்பட்டதாகக் கருதப்படும். இந்த விதிமுறைகளுக்கும் PhonePe பயன்பாட்டு விதிமுறைகளுக்கும் இடையே ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால், இந்த ஆட்டோபே விதிமுறைகள் வழியாக செயல்படுத்தப்பட்ட இந்த செயல்பாட்டைப் பொறுத்தவரை இந்த ஆட்டோபே விதிமுறைகளே பொருந்தும்.