Investments
செல்வத்தை அதிகரித்து கோடீஸ்வரராக மாறுவதற்கான எளிய வழியைக் கற்றுக் கொள்ளுங்கள்
PhonePe Regional|2 min read|03 August, 2021
சிறிய அளவில் முதலீடு செய்ய ஆரம்பித்து காலப்போக்கில் பெரிய செல்வத்தை சேமிக்கவும்
ஒவ்வொருவருக்கும் கோடீஸ்வரராக வேண்டும் என்ற கனவு இருக்கும் ஆனால் அவர்களில் பெரும்பாலோருக்கு அதை எப்படி அடைவது என்று தெரிவதில்லை. கோடீஸ்வரராவதற்கு நிச்சயமாக குறுக்குவழிகள் இல்லை என்றாலும், நீங்கள் தொடர்ந்து முதலீடுகளை செய்ய உங்களுக்கு தைரியமும் ஒழுக்கமும் இருந்தால் நிச்சயம் கோடீஸ்வரராக முடியும்.
சிறிய அளவில் பொறுமையாக முதலீடு செய்து கூட்டு வட்டி எடுக்க வேண்டும் என்பதே மேஜிக் மந்திரம்.
கூட்டு வட்டி என்றால் என்ன?
இது உண்மையில் எளிது. நீங்கள் வருடத்திற்கு 8% வட்டிக்கு ₹100 முதலீடு செய்கிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள், ஆண்டின் இறுதியில் நீங்கள் 8 ரூபாய் பெறுவீர்கள். அதே 8% வட்டி விகிதத்தில் இரண்டாவது வருடத்திற்கு நீங்கள் மீண்டும் ₹108-ஐ முதலீடு செய்தால், நீங்கள் ₹8.64 பெறுவீர்கள். இந்த கூடுதல் 64 பைசா வட்டி நீங்கள் சம்பாதித்த வட்டிக்கு வட்டியாகும். அதனால்தான் இது கூட்டு வட்டி என்று அழைக்கப்படுகிறது.
நீங்கள் எவ்வளவு அதிக காலம் முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு அதிக ‘கூட்டு வட்டி’ உங்களுக்கு கிடைக்கும், மேலும் காலப்போக்கில் அது ஒரு பெரிய தொகையாக மாறும் — நீங்கள் முதலீடு செய்த தொகையை விட மிகப் பெரியதாக வளரும்.
நீங்கள் எவ்வளவு சேமிக்க வேண்டும் மற்றும் எப்படி தொடங்க வேண்டும்?
நீங்கள் 30 வருட முதலீட்டுத் திட்டத்தில் (இளம் வயதிலிருந்தே) ஆர்வமாக இருந்தால், உங்களுக்கு மாதத்திற்கு ₹1300 மட்டுமே தேவைப்படும், அத்துடன் இந்த மாதாந்திர முதலீட்டை ஒவ்வொரு ஆண்டும் 10% அதிகரிக்க வேண்டும்.
நீங்கள் 30 ஆண்டுகளுக்குள்ளாகவே கோடீஸ்வரராக விரும்பினால், நீங்கள் ஒரு பெரிய தொகையையும் முதலீடு செய்யலாம்.
கோடீஸ்வரர் ஆவதற்கான உங்கள் பயணத்தைத் தொடங்குவதற்குத் தேவையான மாதாந்திர முதலீட்டை கீழேயுள்ள அட்டவணை விவரிக்கிறது.
அதாவது, உங்கள் முதலீட்டில் இருந்து 10% வருடாந்திர வருவாயை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், 25 ஆண்டுகளில் ₹1 கோடி இலக்கை அடைய நீங்கள் மாதத்திற்கு ₹3,200 உடன் தொடங்க வேண்டும். இதேபோல் நீங்கள் உங்கள் முதலீட்டில் 12% வருமானத்தை எதிர்பார்க்கிறீர்கள் மற்றும் 20 ஆண்டுகளில் அதே மைல்கல்லை அடைய விரும்பினால், நீங்கள் மாதத்திற்கு ₹5,400 உடன் தொடங்க வேண்டும்.
உங்கள் கோடீஸ்வரர் பயணத்தைத் தொடங்க நீங்கள் தயாரா?
நீங்கள் தொடங்குவதற்கு முன் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கே:
சரியான முதலீட்டு தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்: உங்கள் ரிஸ்க் வசதியின் அடிப்படையில் ஈக்விட்டி மற்றும் டெப்ட் போன்ற பல்வேறு சொத்து வகைகளிலிருந்து சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் தொடங்க வேண்டும். இது உங்களுக்கு கடினமாகத் தெரிந்தால், உங்கள் ரிஸ்க் வசதிக்கு ஏற்றவாறு எங்கள் முதலீட்டு விருப்பங்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.
மாதாந்திர முதலீட்டுத் தொகையை நிர்ணயிக்கவும்: முதலீட்டு தயாரிப்பு அல்லது நீங்கள் தேர்ந்தெடுக்கும் பல்வேறு வகையான தயாரிப்புகள் (அக்ரெஸிவ், மாடரேட், கன்சர்வேட்டிவ்) மற்றும் நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் ஆண்டுகளின் அடிப்படையில் உங்கள் மாதாந்திர ஆரம்ப முதலீட்டை நீங்கள் முடிவு செய்யலாம்.
ஒழுக்கமான அணுகுமுறையைப் பின்பற்றவும்: (a) ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்வதற்கும், (b) உங்கள் முதலீட்டை ஆண்டுக்கு 10% அதிகரிப்பதற்கும் நீங்கள் ஒழுக்கமான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும்.
பொறுமையாக இருங்கள்: எல்லாவற்றிற்கும் மேலாக, குறுகிய கால ஏற்ற இறக்கங்களைப் பொருட்படுத்தாமல், உங்கள் முதலீட்டை நிலையானதாக வைத்திருக்க நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
தாமதிக்க வேண்டாம்! உங்கள் தனிப்பட்ட முதலீட்டுத் திட்டத்தைப் பற்றி யோசித்து, கோடீஸ்வரராகும் பயணத்தை இன்றே தொடங்குங்கள்.
*மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படியுங்கள்.
PhonePe Wealth Broking Private Limited | AMFI — பதிவுசெய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் ARN- 187821.