PhonePe Blogs Main Featured Image

Investments

உங்கள் முதலீட்டு பயணம் மற்றும் அஜய்,அஸ்வின்,அருணின் கதை

PhonePe Regional|2 min read|05 July, 2021

URL copied to clipboard

அஜய், அஸ்வின் மற்றும் அருண் ஆகியோர் கல்லூரியில் ஒன்றாகப் படித்தனர். பட்டம் பெற்ற பிறகு, தற்செயலாக மூவருக்கும் ஒரே நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அவர்கள் ஒரே நேரத்தில் ஒரே நிலையில் சேர்ந்ததால், அவர்களின் சம்பளமும் ஒரே மாதிரியாக இருந்தது.

அலுவலகத்தில் முதல் வாரத்தில் நடந்த ஒரு நிதி திட்டமிடல் ஒர்க்ஷாப்பில் அவர்கள் கலந்து கொண்டனர். அங்கு ஒரு நிதி ஆலோசகர் அவர்களுக்கு முறையான முதலீட்டுத் திட்டம் (SIP), காலப்போக்கில் எவ்வாறு பணக்காரர் ஆவது, பவர் ஆஃப் காம்பவுண்டிங் போன்ற சில யோசனைகளை வழங்கினார்.

சீக்கிரம் தொடங்குங்கள், சரியாகத் தொடங்குங்கள்

ஒர்க்ஷாப்பில் விளக்கப்பட்ட அனைத்து கருத்துகளையும் அஜய் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றாலும், ஒர்க்ஷாப்பிலிருந்து அவரது முக்கிய புரிதல் என்னவென்றால், வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே ஒரு முதலீட்டைத் தொடங்குவது ஒருவரை நீண்ட காலத்திற்கு பணக்காரராக்குவதில் நீண்ட தூரம் செல்லக்கூடும். எனவே, ஒருவர் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையாக இருந்தாலும் விரைவில் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். எனவே அஜய் உடனடியாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் ₹10,000 SIPயைத் தொடங்கினார், அதே தொகையை ஒவ்வொரு மாதமும் SIP மூலம் தொடர்ந்து முதலீடு செய்தார்.

அஸ்வினுக்கு சில சந்தேகங்கள் இருந்தன, எனவே தற்போது முதலீடு செய்வதைத் தவிர்த்து எதிர்காலத்தில் முதலீடு செய்யலாம் என முடிவு செய்தார். இருப்பினும், சரியாக ஒரு வருடம் கழித்து, SIP மூலம் சேமிப்பது எவ்வளவு எளிது என்றும் அது பணத்தை பெருக்க உதவும் என்றும் அஜய் அவரிடம் கூறுகிறார். இதை கேட்டபின், அஸ்வின் வேலையில் சேர்ந்த சரியாக ஒரு வருடம் கழித்து அதே ஃபண்டில் ₹10,000 SIPயைத் தொடங்கினார்.

மறுபுறம் அருண் எப்போதும் அவர்தான் புத்திசாலி என்றும், கூலானவர் என்றும் நினைத்துக்கொண்டிருப்பார். அருண் அவ்வப்போது பார்ட்டிகளில் பங்கேற்று, அதில் பணத்தை செலவழிக்கத் தொடங்கினார். அதேபோல் அருண் எலக்ட்ரானிக் கேஜெட்களை மிகவும் விரும்பினார், எப்போதும் தனக்கு சிறந்த கேஜெட்களை வாங்கும் பழக்கம் கொண்டிருந்தார். இதனால், அவரிடம் முதலீடு செய்ய அதிக பணம் இல்லை.

ஆனால் இதுபோன்ற வாழ்க்கை முறை மற்றும் கிட்டத்தட்ட முதலீடுகள் இல்லாத 5 ஆண்டுகளுக்குப் பிறகு, அருண் தனது தவறை உணர்ந்து அஜய் மற்றும் அஸ்வினைப் பின்தொடர்ந்து அதே ஃபண்டில் ₹10,000 SIPயைத் தொடங்கினார்.

காலப்போக்கில் முதலீடு அதிகரிக்கிறது

காலம் செல்ல செல்ல, அவர்கள் ஈக்விட்டி ஃபண்டில் தங்கள் SIP முதலீடு அதிகரித்து வருவதைக் கண்டனர். பட்டப்படிப்பு முடிந்து சரியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு காலேஜ் ரீயூனியனில் கலந்துகொண்டபோது (அவர்கள் தங்கள் பணி வாழ்க்கையின் 20 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தனர்), மேற்கூறிய ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் அவர்கள் SIP முதலீடு பற்றி பேசத் தொடங்கினர். அவர்களின் SIP முதலீட்டு மதிப்பை பற்றி விவாதித்தனர், மேலும் அவர்கள் முதலீட்டின் மதிப்பை ஒப்பிட முடிவு செய்தனர்.

அவர்களின் முதலீட்டு மதிப்பு எவ்வாறு அதிகரித்துள்ளது என்பது இங்கே:

அஜய் பங்குகளின் நிகர மதிப்பு இப்போது ₹1.04 கோடியாக உள்ளது. அஸ்வின் ₹1 கோடியை எட்டவில்லை என்றாலும்,சுமார் ₹91 லட்சத்திற்கு அருகில் இருந்தார். சரியான நேரத்தில் அஜய்யுடன் பேசியதன் விளைவாக அவர் SIP இல் முதலீடு செய்யத் தொடங்கினார். மறுபுறம், அருணிடம் ₹52 லட்சம் மட்டுமே உள்ளது. இது அஜய் அடைந்தவற்றில் பாதி மட்டுமே. அருணின் சொத்துக்கள் அஜய் மற்றும் அஸ்வினை விட மிகக் குறைவு. இதனால் அருண் வருத்தப்பட்டார்.

இந்த கதையின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்: நீங்கள் விரைவில் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். நீங்கள் இன்னும் தொடங்கவில்லை என்றால், முதலீடு செய்யத் தொடங்க இது சரியான நேரம். இல்லையெனில், கடைசியில் அருணை போலவே, நீங்கள் மிகக் குறைந்த வருவாயுடன் வருத்தப்படுவீர்கள்.

பொறுப்புத்துறப்பு:

Nifty 50 TR இன்டெக்சில் உள்ள SIP ஜனவரி 2001 இல் தொடங்கி டிசம்பர் 2020 வரை நீடித்திருந்தால், அது 14.64% வருடாந்திர வருவாயை (XIRR) அடைந்திருக்கும். இருப்பினும், மேலே கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தின்படி, ஆண்டு வருமானத்தில் 13% ஆகப் பயன்படுத்தினோம். தரவு மூலம்: ICRA Analytics. கடந்தகால செயல்திறன் எதிர்காலத்தில் மீண்டும் செய்யப்படாமல் போகலாம்.

மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படியுங்கள்.

Keep Reading