PhonePe Blogs Main Featured Image

Trust & Safety

மோசடியான வேலை விளம்பரங்களைக் கண்டறிய 5 வழிகள்

PhonePe Regional|3 min read|13 June, 2023

URL copied to clipboard

நீங்கள் வேலை தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், ஒரு வேலை ஆட்சேர்ப்பு செய்பவர் உங்களை அழைத்து, கவர்ச்சிகரமான சம்பளத்துடன், நீங்கள் விரும்பும் உங்கள் கனவு வேலையைப் பற்றி கூறுகிறார். மேலும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான கூடுதல் வாய்ப்பும் உண்டு! இது ஒரு நல்ல வாய்ப்பு என கூறுகிறார். பின்னர் உடனேயே, ஆட்சேர்ப்பு செய்பவர் உங்களுக்கு ஒரு இணைப்பை அனுப்பி, உங்கள் தனிப்பட்ட விவரங்களை நிரப்பச் சொல்வார். பின்னர் உறுதிப்படுத்தலுக்கு உங்களை அழைத்து, விமான கட்டணம் மற்றும் இடமாற்றக் கட்டணங்களின் ஒரு பகுதியாக ₹50,000-ஐ நீங்கள் செலுத்த வேண்டும் என்று உங்களுக்குத் தெரிவிப்பார். நீங்கள் பணம் செலுத்திய பின் மேலும் அறிவுறுத்தல்களுக்காக ஆவலுடன் காத்திருப்பீர்கள். ஆனால் திடீரென்று, நீங்கள் பணம் செலுத்திய நபரை உங்களால் தொடர்பு கொள்ள முடியாது, மேலும் உங்களுக்கு சொன்னதுபோல் வேலையும் கிடைக்காது. இது போன்ற சம்பவங்கள் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு* நடக்கிறது.

அதிக வேலையின்மை விகிதங்கள் மற்றும் தொலைதூர வேலைகளின் அதிகரிப்பு வேலை மோசடி வழக்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு வழிவகுத்தது. சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகானமி (CMIE) இன் சமீபத்திய தரவுகளின்படி, நாட்டின் சராசரி வேலையின்மை விகிதம் 7.85% ஆகும். இது மோசடியாளர்களுக்கு, வேலை தேடுபவர்களை அணுகி, அவர்ளை மோசடியில் சிக்க வைப்பதற்கு வழிவகுக்கிறது.

மோசடி செய்பவர்கள் கவர்ச்சிகரமான தலைப்புகள் மற்றும் கவர்ச்சிகரமான சம்பளங்களுடன் வேலைவாய்ப்புகளை விளம்பரப்படுத்தி அல்லது SMS அல்லது WhatsApp செய்திகள் மூலம் பாதுகாப்பற்ற போலி பகுதி நேர வேலை இணைப்புகளைப் பகிர்ந்து பணம் சம்பாதிக்கிறார்கள். நீங்கள் வேலைக்குப் பதிவு செய்ததும், உங்கள் முதல் பணியை முடித்தவுடன் அதிக தொகை வழங்கப்படும் எனச் சொல்லி, பேமண்ட் செலுத்தும்படி கேட்கப்படுவீர்கள். உங்கள் நம்பிக்கையைப் பெற அவர்கள் உங்கள் கணக்கில் சிறிய தொகையை அனுப்புவார்கள். இறுதியில், நீங்கள் பணம் செலுத்திய பின், நீங்கள் அவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாது.

ஒரு வேலை மோசடி செய்பவர் உங்களை குறிவைக்கும் 5 அறிகுறிகள்:

வேலை தேடுபவர்களை ஏமாற்றுவதற்கு மோசடி செய்பவர்கள் பயன்படுத்தும் 5 பொதுவான வழிகள் இங்கே உள்ளன. நீங்கள் ஒரு வேலையைத் தேடுகிறீர்களானால், இந்த அறிகுறிகளைக் கவனித்து போலி வேலைவாய்ப்புகளில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்.

  1. முக்கியத் தகவலைக் கேட்பது: பணியமர்த்துபவர்(ஆட்சேர்ப்பு செய்பவர்) உங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது வீட்டு முகவரி போன்ற தனிப்பட்ட தகவலைக் கேட்டால், அது உங்கள் வங்கிக் கணக்கு/கிரெடிட் கார்டை அணுகுவதற்கு முக்கியமான தகவல்களை உங்களிடமிருந்து பெற முயற்சிக்கும் மோசடி செய்பவர் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். பொதுவாக, ஆட்சேர்ப்பு செய்பவர்கள் உங்கள் கல்விப் பின்புலம் மற்றும் தொழில்முறை அனுபவம் பற்றிய அடிப்படைத் தகவலைக் கேட்டு, பின்னர் பணி வழங்குனருடன் ஒரு நேர்காணலை அமைத்து, அதன் பிறகு ஆஃபர் லெட்டர் வழங்கப்படும். இது பொதுவாக நிறுவனத்தில் சேரும் போது பின்னணி சரிபார்ப்பு மற்றும் பதிவுகளுக்காக கோரப்படும் தகவல்.
  2. தொழில்துறை தரத்திற்கு’ பொருந்தாத அதிகப்படியான சம்பளத்தை வழங்குதல்: வேலை விளம்பரத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றவும், மோசடியில் உங்களை ஈர்க்கவும் சிறிய வேலைக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. உங்கள் சாதனத்தில் உள்ள ரகசியத் தகவலை அணுகக்கூடிய தீம்பொருள் கொண்ட இணைப்பு இதில் இருக்கலாம். மாற்றாக, மோசடி லிங்க்கை உங்களிடம் பகிராமல், மோசடி செய்பவர்கள் தனிப்பட்ட விவரங்களைக் கோரலாம் மற்றும் முக்கியமான தகவல்களைப் பகிர்வதற்காக உங்களை ஈர்க்க முயற்சி செய்யலாம்.
  3. வேலை விளக்கங்களில் உள்ள தவறுகள்: போலியான வேலை இடுகைகளில், PhonePe.com க்குப் பதிலாக Phonepay.com என்ற நிறுவனத்தின் பெயர் போன்ற எளிதில் கவனிக்கப்படாத இலக்கண அல்லது எழுத்துப் பிழைகள் இருக்கலாம். இது உங்களை பாதுகாப்பற்ற இணையதளத்திற்கு இட்டுச் செல்லும் என்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மேலும், முறையான நிறுவன இணையதளம் இல்லாத தெளிவற்ற வேலை விவரங்கள், நீங்கள் ஒரு போலி வேலை விளம்பரத்தை படிக்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது.
  4. உடனடி வேலை வாய்ப்பு: ஒரு ஆட்சேர்ப்பு செய்பவர் உங்களை அழைத்த சில நிமிடங்களில் பின்னணி சரிபார்ப்பு அல்லது நேர்காணல் இல்லாமல் ஒரு வேலையை வழங்கினால், அந்த நபர் மோசடியாளராக இருக்கலாம். ஒரு உண்மையான ஆட்சேர்ப்பு செய்பவர், நேர்முகத் தேர்வுகளை நடத்தி, நிறுவனத்தில் வழங்கப்படும் பாத்திரத்திற்கு நபர் பொருத்தமானவரா என்பதைச் சரிபார்ப்பார். தொழில் தரங்களுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு உரிய கவனம் செலுத்துவார்.
  5. கமிஷன் கேட்கிறார்: மோசடி செய்பவர் சில சமயங்களில் ஒரு நிறுவனத்தின் சட்டப்பூர்வமான நபராகவோ அல்லது வேலை ஆலோசனை நிறுவனமாகவோ காட்டிக்கொண்டு வேலை வழங்குவதற்காக கமிஷனாக பணம் கேட்கிறார். நீங்கள் ஒரு வேலையை எதிர்பார்த்து பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்த பிறகு, சம்மந்தப்பட்ட நபர் எல்லா தகவல் தொடர்பு சேனல்களையும் துண்டித்துவிட்டு, வேலையையோ பணத்தையோ திர மாட்டார்கள். உங்களை வேலைக்கு அமர்த்தும் பணியாளருக்கு நீங்கள் ஒருபோதும் பணம் செலுத்த வேண்டியதில்லை என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்

வேலை மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி

  • சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம், குறிப்பாக மேலே உள்ள ஏதேனும் எச்சரிக்கை அறிகுறிகள் அல்லது சில வகையான நன்மைகளுடன் வரும் இணைப்புகள் — பணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ.
  • வேலை முறையானது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், கால்பேக்கை ஊக்குவிக்க வேண்டாம்.
  • கிரெடிட்/டெபிட் கார்டு எண், கார்டு காலாவதி தேதி, CVV, OTP போன்ற ரகசியத் தகவலை PhonePe அதிகாரிகள் உட்பட யாருடனும் பகிர வேண்டாம்.
  • இறுதியாக, புகாரளித்து தடுக்கவும். நினைவில் கொள்ளுங்கள், இந்த எண்ணைப் புகாரளித்து தடுப்பதே சிறந்தது.

நீங்கள் வேலை மோசடியால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் என்ன செய்ய வேண்டும்

PhonePe இல் ஒரு வேலை மோசடி செய்பவரால் நீங்கள் ஏமாற்றப்பட்டால், பின்வரும் வழிகளில் நீங்கள் உடனடியாக சிக்கலை எழுப்பலாம்:

  1. PhonePe ஆப்: உதவிப் பகுதிக்குச் சென்று, “பரிவர்த்தனையில் சிக்கல் உள்ளது” விருப்பத்தின் கீழ் சிக்கலை எழுப்பவும்.
  2. PhonePe வாடிக்கையாளர் சேவை எண்: நீங்கள் PhonePe வாடிக்கையாளர் சேவையை 80–68727374 / 022–68727374 என்ற எண்ணில் தொடர்புகொண்டு ஒரு சிக்கலைத் தெரிவிக்கலாம், பின்னர் வாடிக்கையாளர் சேவை முகவர் டிக்கெட்டை எழுப்பி உங்கள் பிரச்சினைக்கு உதவுவார்.
  3. வெப்ஃபார்ம் சமர்ப்பிப்பு: PhonePe இன் வெப்ஃபார்ம், https://support.phonepe.com/ ஐப் பயன்படுத்தியும் டிக்கெட்டை எழுப்பலாம்.
  4. சோஷியல் மீடியா: PhonePe இன் சோஷியல் மீடியா ஹேண்டில்கள் மூலம் நீங்கள் மோசடி சம்பவங்களைப் புகாரளிக்கலாம்

Twitter — https://twitter.com/PhonePeSupport

Facebook — https://www.facebook.com/OfficialPhonePe

  1. குறை: ஏற்கனவே உள்ள குறையைப் பதிவு செய்ய, நீங்கள் https://grievance.phonepe.com/ இல் உள்நுழைந்து, முன்பு தாக்கல் செய்த டிக்கெட் ஐடியைப் பகிரலாம்.
  2. சைபர் செல்: இறுதியாக, நீங்கள் மோசடி புகார்களை அருகிலுள்ள சைபர் கிரைம் செல் அல்லது ஆன்லைனில் https://www.cybercrime.gov.in/ இல் பதிவு செய்யலாம் அல்லது சைபர் கிரைம் செல் ஹெல்ப்லைன் 1930 ஐ தொடர்பு கொள்ளலாம்.

முக்கிய அறிவிப்பு — PhonePe உங்களிடம் ரகசிய அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்காது. phonepe.com டொமைனில் இல்லாத PhonePe இலிருந்து வந்ததாகக் கூறும் அனைத்து மின்னஞ்சல்களையும் புறக்கணிக்கவும். மோசடி சந்தேகம் இருந்தால், உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும்.

*ஆதாரம்: https://www.hindustantimes.com/technology/how-to-detect-fake-job-offers-modi-govt-shares-checklist-you-must-follow-101665639723089.html

#ஆதாரம்: https://www.outlookindia.com/national/robbed-of-money-hope-and-hard-work-online-job-scams-is-trapping-the-indian-youth-amidst-job-dearth-news-253665

Keep Reading