PhonePe Blogs Main Featured Image

Trust & Safety

மூன்றாம் தரப்பு செயலிகள் மூலமாகச் செய்யப்படும் பேமண்ட் மோசடிகளை அறிந்திருங்கள்

PhonePe Regional|2 min read|22 April, 2021

URL copied to clipboard

விவரம் தெரியாத மக்களின் வங்கிக் கணக்கு எண்கள், கிரெடிட்/டெபிட் கார்டு விவரங்கள், UPI PIN அல்லது OTP போன்ற தனிப்பட்ட விவரங்களைப் பகிரச்செய்து மோசடியாளர்கள் தங்கள் சொந்தக் கணக்குகளுக்கு பணத்தை அனுப்பிக்கொள்ளும் மோசடிகளைப் பற்றிய செய்திகளும் கட்டுரைகளும் அடிக்கடி வந்துகொண்டிருக்கின்றன.

மேற்கண்ட தனிப்பட்ட விவரங்களைப் பகிராமலும் மோசடி நடைபெற வாய்ப்புள்ளது. மூன்றாம் தரப்பு செயலிகள் இத்தகைய மோசடிகளுக்குத் துணைபோகின்றன!

அந்த மூன்றாம் தரப்பு செயலிகள் என்னென்ன? மோசடிக்காரர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள்?

Screenshare, Anydesk, Teamviewer போன்ற நூற்றுக்கணக்கான இலவசத் திரைப்பகிர்வு செயலிகள் உள்ளன. தொலைவில் இருந்து மொபைலில் உள்ள சிக்கல்களைச் சரிசெய்வதற்காகப் பொறியாளர்கள் இந்தச் செயலிகளைத் தொடக்கத்தில் பயன்படுத்தினார்கள். ஒரு பயனரின் மொபைலை மற்றொருவர் பயன்படுத்துவதற்கான முழு அனுமதியையும் கட்டுப்பாட்டையும் இந்தச் செயலிகள் அளிக்கின்றன.

தீங்கிழைக்கும் நோக்கங்களுக்காக உங்கள் மொபைலைக் கட்டுப்படுத்த மூன்றாம் தரப்பு திரைப்பகிர்வு செயலிகளை மோசடிக்காரர்கள் பயன்படுத்துகிறார்கள்!

நினைவில் கொள்ளுங்கள்: PhonePe நிறுவனம் எப்போதுமே மூன்றாம் தரப்பு செயலிகளை நிறுவும்படி கேட்டுக்கொள்வது இல்லை. வேறொருவர் பேச்சைக் கேட்டு செயலிகளை நிறுவ வேண்டாம். தங்கள் இருப்பிடத்தில் இருந்தே பிறரின் மொபைலைக் கட்டுப்படுத்தவும் பிறர் சேமித்து வைத்துள்ள கார்டு/கணக்கு விவரங்களைப் பார்க்கவும் Anydesk, Teamviewer உள்ளிட்ட செயலிகள் மோசடிக்காரர்களால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. எந்தவொரு சந்தேகத்திற்குரிய செயல்பாட்டைக் குறித்தும் support.phonepe.com வலைதளத்தில் புகார் செய்யுங்கள்.

மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் மோசடிகள் செய்யப்படும் விதம்:

  • PhonePe செயலி அல்லது PhonePe பணப் பரிமாற்றத்தில் பயனர் சந்திக்கும் சிக்கலுக்குக் தீர்வுகாண்பது போல் மோசடிக்கார்கள் அணுகுவார்கள்.
  • ஒரு சிக்கலை உடனடியாகத் தீர்ப்பதற்காக Screenshare, Anydesk, Teamviewer உள்ளிட்ட திரைப்பகிர்வு செயலிகளைப் பதிவிறக்கம் செய்யச் சொல்வார்கள்.
  • கார்டு, வங்கி விவரங்கள், UPI PIN அல்லது OTP ஆகியவற்றைப் பகிரும்படி நேரடியாகச் சொல்லாமல், PhonePe செயலியின் “சரிபார்ப்பு அமைப்பு” பயனரின் கார்டு விவரங்களைச் சரியாக ஸ்கேன் செய்வதற்காக அவரின் டெபிட்/கிரெடிட் கார்டை மொபைல் கேமராவுக்கு முன்பாகக் காட்டும்படி கேட்டுக்கொள்வார்கள்.
  • உதவி செய்கிறார்கள் என்று பயனர்கள் நினைக்கும் சமயத்தில் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயனரின் கார்டு எண், CVV குறியீடு உள்ளிட்டவற்றைப் பதிவுசெய்து ஒரு SMS மூலமாக தங்கள் கணக்கிற்கு பணத்தை மாற்றுவதற்கான OTP ஒன்றை மோசடிக்காரர்கள் அனுப்புவார்கள்.
  • திரைப்பகிர்வு செயலிகள் பிறரின் மொபைலைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை அளிக்கின்றன. பயனரின் மொபைலில் பெறப்படும் OTP-ஐ மோசடிக்காரர்கள் பார்த்துவிட்டு தங்கள் சொந்த கணக்கிற்கு பணப் பரிமாற்றம் செய்ய அவற்றைப் பயன்படுத்துவார்கள்.

பேமண்ட் மோசடிகளில் இருந்து உங்களைத் தற்காத்துக்கொள்ளுங்கள்

PhonePe நிறுவனம் எப்போதுமே இரகசியத்தன்மையுள்ள அல்லது தனிப்பட்ட விவரங்களைத் தரும்படி கேட்காது. PhonePe பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் ஒருவர் அத்தகைய விவரங்களைக் கேட்டாலும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பும்படி அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள். எப்போதுமே @phonepe.com என்று முடிகிற முகவரியில் இருந்து வரும் மின்னஞ்சல்களுக்கு மட்டும் பதில் அளியுங்கள்.

Google, Twitter, FB போன்ற வலைதளங்களில் PhonePe வாடிக்கையாளர் உதவி எண்ணைத் தேடாதீர்கள். PhonePe வாடிக்கையாளர் உதவி மையத்தை அடைவதற்கான ஒரே அதிகாரப்பூர்வமான வழி support.phonepe.com வலைதளம் மட்டுமே. PhonePe உதவி மையப் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் எந்த மொபைல் எண்ணையும் அழைக்கவோ அதிலிருந்து அழைப்பு வந்தால் பதிலளிக்கவோ வேண்டாம்.

Keep Reading