
Trust & Safety
சென்சஸ் 2027 மோசடி எச்சரிக்கை: உங்கள் அடையாளத்தை எவ்வாறு பாதுகாப்பது
PhonePe Regional|2 min read|24 June, 2026
உலகின் முதலாவது முழு டிஜிட்டல் சென்சஸ் என்ற பெருமையுடன், இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. வீடுகளைப் பட்டியலிடும் முதற்கட்டம் முடிவடைந்த நிலையில், ஒவ்வொரு குடிமகனின் சமூக, தனிநபர் விபரங்கள் மற்றும் பொருளாதாரத் தரவுகளைச் சேகரிக்கும் இரண்டாம் கட்டப் பணிகள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.
துரதிர்ஷ்டவசமாக, இந்த சில மாதங்களில் மோசடி செய்பவர்கள் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒரு கருவியாகப் பயன்படுத்தி அப்பாவி மக்களை ஏமாற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. மோசடி செய்பவர்கள் அரசு அதிகாரிகள் போல வேடமிட்டு, குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுகிறார்கள். எனவே, உங்கள் தனிப்பட்ட தகவல்களையும், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையும் பாதுகாக்க, இதுபோன்ற போலி கணக்கெடுப்பு அதிகாரிகளை எவ்வாறு கண்டறிவது என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.
சென்சஸ் மோசடி செய்பவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள்?
மோசடி செய்பவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பை நிதித் திருட்டு மற்றும் அடையாள மோசடிக்கு ஒரு வழியாகப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் கையாளும் சில தந்திரங்கள் இதோ:
- அதிகாரிகள் போல நடித்தல்: மோசடி செய்பவர்கள் நேரடியாக வீட்டிற்கு வந்தோ, வாட்ஸ்அப் அல்லது ஃபோன் கால்கள் மூலமாகவோ அரசு கணக்கெடுப்பு அதிகாரிகள் போல நடிக்கிறார்கள். கணக்கெடுப்பு என்ற சாக்கில் உங்கள் ஆதார், PAN மற்றும் வங்கி விபரங்கள் போன்ற மிக முக்கியமான தகவல்களைச் சேகரிக்கிறார்கள். உங்களைப் பற்றிய தகவல்களைப் பெற்றவுடன், அவர்கள் உங்கள் அடையாளத்தை சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தி, உங்களை சட்டச் சிக்கல்களில் மாட்ட விடுகிறார்கள். மேலும், இந்தத் தரவை வைத்து “போலி அடையாளங்களை” உருவாக்கி, அதன் மூலம் சட்டவிரோத லோன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பெறுகிறார்கள்.
- பிஷிங் லிங்குகள்: மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்களைப் புதுப்பிப்பதற்காக என்று கூறி போலி லிங்க்குகள் அடங்கிய SMS-களை அனுப்புகிறார்கள். ஆனால் அவர்களின் உண்மையான நோக்கம் உங்கள் தனிப்பட்ட தரவைத் திருடுவதே ஆகும். வங்கி கணக்குகள் மற்றும் UPI வாலட்டுகளில் இருந்து பணத்தைத் திருட அவர்கள் OTP அல்லது QR குறியீடு மோசடிகளையும் பயன்படுத்தலாம்.
- போலி ஆப்ஸ்: உங்கள் ஃபோனிலுள்ள விபரங்களைத் திருடுவதற்காகவே வடிவமைக்கப்பட்ட போலி சென்சஸ் ஆப்ஸ்களை (APKs) டவுன்லோட் செய்யுமாறு மோசடி செய்பவர்கள் உங்களை வற்புறுத்துவார்கள். இந்த ஆப்ஸ் மூலம் தொலைதூரத்தில் இருந்தே உங்கள் ஃபோனை அவர்கள் கட்டுப்படுத்த முடியும். இதனால், நீங்கள் டைப் செய்யும் பாஸ்வேர்டுகள் மற்றும் தனிப்பட்ட மெசேஜ்களை அவர்களால் ரகசியமாகக் கண்காணிக்க முடியும்
போலி சென்சஸ் அதிகாரிகளை அடையாளம் காண்பது எப்படி
- உண்மையான அரசு அதிகாரிகள் உங்களிடம் ஒருபோதும் OTP, CVV, ATM PIN எண்கள் அல்லது வங்கி கணக்கு எண்களைக் கேட்க மாட்டார்கள்.
- உங்கள் ஆதார் அல்லது PAN கார்டைப் படம் எடுக்க அவர்கள் வற்புறுத்தினால் எச்சரிக்கையாக இருங்கள்; அவை தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம்.
- மோசடி செய்பவர்கள் Gmail அல்லது Yahoo போன்ற பொதுவான இமெயில்களையும், தனியார் இணையதளங்களையும் பயன்படுத்துவார்கள். ஆனால், அதிகாரப்பூர்வ அரசு அறிவிப்புகள் மற்றும் தொடர்புகள் எப்போதும் .gov.in என்ற டொமைனில் மட்டுமே இருக்கும்.
- உண்மையான கணக்கெடுப்பு அதிகாரிகள் அரசாங்கம் வழங்கிய அடையாள அட்டை, அங்கீகாரச் சான்றிதழ் மற்றும் பிரத்யேக அரசு மொபைல் சாதனங்களை மட்டுமே பயன்படுத்துவார்கள்.
- சென்சஸ் கணக்கெடுப்பு முற்றிலும் இலவசம்! எனவே, “பதிவுக் கட்டணம்” அல்லது “சேவைக் கட்டணம்” என்று யாராவது பணம் கேட்டால், அது 100% மோசடி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஒருவேளை நீங்கள் மோசடிக்கு ஆளானால் என்ன செய்ய வேண்டும்
- உடனடியாக உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ ஆப் மூலமாகவோ அல்லது வங்கி கிளைக்குச் சென்றோ உங்கள் வங்கி கணக்குகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் UPI அணுகலை முடக்குங்கள்
- நீங்கள் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான ஆப்பை டவுன்லோட் செய்திருந்தால், அதிலுள்ள ஸ்பைவேர்/மால்வேர்களை முழுமையாக நீக்க உங்கள் போனை ஃபேக்டரி ரீசெட் செய்திடுங்கள்
- போலி அதிகாரி யாராவது உங்கள் வீட்டிற்கு நேரில் வந்திருந்தால், அவர்கள் உங்கள் அண்டை வீட்டாரையும் ஏமாற்றாமல் தடுக்க உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் விபரம் தெரிவியுங்கள்.
புகார் அளிப்பது எப்படி
நீங்கள் ஒரு மோசடிக்கு இலக்காகியிருப்பதாகச் சந்தேகித்தால், உடனடியாகப் புகாரளிக்கவும்.
PhonePe-வில் புகாரளிக்க:
- PhonePe குரூப் சாட்: அந்த குரூப் ஒரு மோசடி குழுவாக இருக்கலாம் என்று நீங்கள் சந்தேகித்தால், குரூப் ப்ரொஃபைல் பக்கத்திற்குச் சென்று வெளியேறு மற்றும் புகார் செய் ஆப்ஷன்களை கிளிக் செய்யலாம்.
- PhonePe ஆப்: உதவி பகுதிக்குச் சென்று புகாரை எழுப்பவும்.
- PhonePe வாடிக்கையாளர் சேவை: PhonePe-ஐ 80–68727374 அல்லது 022–68727374 என்ற எண்ணில் அழைக்கவும்.
- சோஷியல் மீடியா புகாரளித்தல்:
- Twitter: PhonePe Support
- Facebook: PhonePe Official
- குறைதீர்க்கும் போர்ட்டல்: PhonePe குறைதீர்க்கும் போர்ட்டலில் புகார் பதிவு செய்யவும்.
அதிகாரிகளிடம் புகாரளித்தல்:
- சைபர் கிரைம் பிரிவு: சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் அளிக்கவும் அல்லது 1930 என்ற எண்ணை அழைக்கவும்.
- தொலைத்தொடர்புத் துறை (DOT): சஞ்சார் சாத்தி போர்ட்டலில் உள்ள சக்ஷு வசதி மூலம் சந்தேகத்திற்கிடமான செய்திகள், அழைப்புகள் அல்லது வாட்ஸ்அப்/டெலிகிராம் மோசடிகளைப் புகாரளிக்கவும்.
முக்கிய நினைவூட்டல் — PhonePe ஒருபோதும் இரகசியமான அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்காது. Phonepe.com டொமைனிலிருந்து வராத மின்னஞ்சல்களைப் புறக்கணிக்கவும். நீங்கள் மோசடியைச் சந்தேகித்தால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும்.
