PhonePe Blogs Main Featured Image

Trust & Safety

மோசடியைப் புகாரளிப்பதற்கான வழிகள் — நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே!

PhonePe Regional|1 min read|02 December, 2022

URL copied to clipboard

ஒரு வாடிக்கையாளர் PhonePeவில் மோசடி சர்ச்சையை எழுப்ப பல வழிகள் உள்ளன. அவை பின்வருமாறு:

  1. PhonePe செயலி
  2. PhonePe வாடிக்கையாளர் சேவை எண்
  3. வெப்ஃபார்ம் சமர்ப்பிப்பு
  4. சோஷியல் மீடியா
  5. புகார் அளிப்பதன் மூலம்

PhonePe செயலி மூலம் நீங்கள் எவ்வாறு புகார் தெரிவிக்கலாம் என்பது இங்கே:

  • PhonePe செயலியில் உள்நுழையவும்
  • வலது மூலையில் உள்ள உதவி ”?” பகுதியை கிளிக் செய்யவும்
  • “பரிவர்த்தனையில் சிக்கல் உள்ளது/have an issue with the transaction” ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்
  • அடுத்த பக்கத்திற்குச் சென்று, “உங்கள் சிக்கலைப் புகாரளிக்கவும்/Report your issue” ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்
  • செயலி அனைத்து சமீபத்திய பரிவர்த்தனைகளையும் பட்டியலிடும்
  • வாடிக்கையாளர்கள் சர்ச்சையை எழுப்ப வேண்டிய பரிவர்த்தனையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
  • அடுத்து, வாடிக்கையாளர்கள் “மோசடியாளரிடமிருந்து பேமண்ட் கோரிக்கையைப் பெற்றேன்/I got a payment request from a fraudster” அல்லது “மோசடியாளரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது/I received a call from a fraudster” என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.
  • பொருத்தமான ஆப்ஷனைத் தேர்வுசெய்ததும், PhonePeவில் ஒரு டிக்கெட் உருவாக்கப்பட்டு நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக் குழு அதை மதிப்பாய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்.

PhonePe வாடிக்கையாளர் சேவை மூலம் ஒரு சர்ச்சையை எழுப்புதல்:

  • வாடிக்கையாளர்கள் தங்கள் புகாரை தெரிவிக்க, பின்வரும் எண்களில் ஒன்றைப் பயன்படுத்தி PhonePe வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்ளலாம் 080–68727374/022–68727374. நீங்கள் அவர்களைத் தொடர்பு கொண்டதும், எங்கள் ஆதரவு முகவர்கள் அதற்கேற்ப டிக்கெட்டை எழுப்புவார்கள்.

வெப்ஃபார்ம் சமர்ப்பிப்பு மூலம் ஒரு சர்ச்சையை எழுப்புதல் :

  • வாடிக்கையாளர்கள் எங்கள் இணையவழி இணைப்பைப் பயன்படுத்தி டிக்கெட் எழுப்பலாம் — https://support.phonepe.com/
  • பின்னர் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணையும் கேப்ட்சாவையும் உள்ளிட வேண்டும்.
  • சான்றுகளைச் சமர்ப்பித்தவுடன், பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும் OTP ஐ உள்ளிடுமாறு கேட்கும்
  • உள்நுழைவு வெற்றியடைந்தவுடன் வாடிக்கையாளர்கள், “மோசடி அல்லது அங்கீகரிக்கப்படாத செயல்பாட்டைப் புகாரளிக்கலாம்”
  • வாடிக்கையாளர்கள் தொடர்புடைய மோசடி புகாரளிக்கும் விருப்பங்களைத் தேர்ந்தெடுத்ததும், அவர்கள் contact support/உதவி மையத்தை தொடர்புகொள்க பக்கத்திற்கு திருப்பி விடப்படுவார்கள், அங்கு வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.
  • மோசடி பரிவர்த்தனை விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டதும், ஒரு டிக்கெட் உருவாக்கப்படும்
  • வாடிக்கையாளர் தாங்கள் எழுப்பிய டிக்கெட்டுகள் குறித்த அப்டேட்களுக்கு இந்த போர்ட்டலைப் பயன்படுத்தலாம்.

சமூக ஊடகங்கள் மூலம் சர்ச்சையை எழுப்புதல்:

  • வாடிக்கையாளர்கள் எங்கள் சோஷியல் மீடியா ஹேண்டில்கள் மூலம் மோசடி சம்பவங்களைப் புகாரளிக்கலாம்

Twitter — https://twitter.com/PhonePeSupport

Facebook –https://www.facebook.com/OfficialPhonePe

புகார் மூலம் ஒரு சர்ச்சையை எழுப்புதல் :

  • ஏற்கனவே உயர்த்தப்பட்ட டிக்கெட்டுகளில் உள்ள குறைகளைப் புகாரளிக்க இந்த போர்டல் பயன்படுத்தப்படுகிறது
  • வாடிக்கையாளர்கள் https://grievance.phonepe.com/ இல் உள்நுழைந்து ஏற்கனவே உயர்த்தப்பட்ட டிக்கெட் ஐடியைப் பகிரலாம்

சைபர் கிரைம் போர்டல் வழியாக ஒரு சர்ச்சையை எழுப்புதல்

  • வாடிக்கையாளர்கள் தங்கள் மோசடி சர்ச்சைகளுக்கு எதிராக புகார் செய்ய அருகிலுள்ள சைபர் குற்றப்பிரிவை அணுகலாம்
  • இந்த இணைப்பைத் தட்டுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் இணையப் புகாரை ஆன்லைனில் தெரிவிக்கலாம் — https://cybercrime.gov.in/
  • மாற்றாக, வாடிக்கையாளர்கள் 1930 என்ற எண்ணில் சைபர் செல் போலீஸைத் தொடர்பு கொள்ளலாம்

Keep Reading