PhonePe Blogs Main Featured Image

Trust & Safety

கடன் மோசடிகளை அடையாளம் கண்டு பாதுகாப்பாக இருப்பது எப்படி

PhonePe Regional|2 min read|25 July, 2022

URL copied to clipboard

கடன் மோசடிகளை அடையாளம் கண்டு பாதுகாப்பாக இருப்பது எப்படி

கிரெடிட் பற்றிய கருத்து — இன்றைய காலக்கட்டத்தில், ஒவ்வொருவருக்கும் அவர்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், குறிப்பாக வேலை இழப்பு அல்லது மருத்துவ அவசரநிலை போன்ற சில அவசரகால சூழ்நிலைகளில் உடனடியாக கடனைப் பெற்று பின்னர் அதனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் வசதி பலருக்கு வரப்பிரசாதமாகும். இதுபோன்ற அவசரகால சூழ்நிலைகளில் மோசடி செய்பவர்கள் அப்பாவி மக்களின் இத்தகைய தேவைகளைப் பயன்படுத்தி, லோன் வழங்குவதாக பொய் வாக்குறுதி அளித்து அவர்களிடம் இருந்து பணம் பறித்து லோன் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

லோன் மோசடி என்றால் என்ன?
லோன் மோசடிகளில், மோசடி செய்பவர்கள் தனிநபர்களிடம் விரைவாகவும் எளிதாகவும் லோன் பெறலாம் என தவறான நம்பிக்கையை வழங்குகிறார்கள். சம்மந்தப்பட்ட நபரின் தேவைகளை மனதில் கொண்டு, மோசடி செய்பவர்கள் அதற்கேற்ப ஒரு தந்திரமான திட்டத்தை தயார் செய்கிறார்கள். உதாரணமாக, ஒரு நபருக்கு ஒரு புகழ்பெற்ற வங்கியில் கடனுக்கு விண்ணப்பிக்க போதுமான நல்ல கிரெடிட் ஸ்கோர் இல்லை, ஆனால் மிகக் குறுகிய காலத்தில் ஒரு பெரிய தொகையை கடன் வாங்க வேண்டியிருந்தால், மோசடி செய்பவர்கள் சில நிமிடங்களில் தங்களால் கடன் பெற்றுத்தர முடியும் என்று சம்மந்தப்பட்ட நபரை புத்திசாலித்தனமாக நம்ப வைப்பார்கள்.

கடன் மோசடியில் வீழ்வது இரண்டு முக்கிய விளைவுகளை ஏற்படுத்துகிறது — ஒன்று மோசடி செய்பவர் (பிணையாக)பாதுகாப்பிற்காக சில முன்பணத்தைக் கேட்கலாம், அது திரும்பப் பெறப்படாது, அல்லது செயலாக்கக் கட்டணம், தாமதக் கட்டணம், வட்டி போன்ற பல செலவுகளைக் காரணம் காட்டி உங்களிடமிருந்து பணம் பறித்து இறுதியில் தனிநபருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

லோன் மோசடி எவ்வாறு நிகழ்கிறது?
லோன் மோசடியாளர்கள் எதிர்பாரா செலவினங்களுக்காக கடன் தேவைப்படுபவர்களைப் பயன்படுத்தி அவர்களை இலக்காகக் கொண்டு, எந்த நிபந்தனையும் இல்லாத கடனை வழங்குகிறார்கள். அவர்கள் SMS, மின்னஞ்சல் அல்லது ஃபோன் மூலம் தொடர்புகொண்டு குறிப்பிட்ட செயலியைப் பதிவிறக்கச் சொல்வார்கள், அதில் உங்கள் விவரங்களை நிரப்பி உடனடி கடன் ஒப்புதலைப் பெறலாம் என்பார்கள்.

செயலி(ஆப்) பதிவிறக்கப்பட்டதும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உட்பட உங்கள் ஃபோனின் தொடர்பு பட்டியலில் உள்ள அனைத்தையும் அணுக அவர்கள் அனுமதி கோருவார்கள். ஆதார், PAN, முகவரி மற்றும் உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை போன்ற அடிப்படை விவரங்களை நீங்கள் பூர்த்தி செய்தவுடன், உங்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.

இந்த லோன்கள் சிக்கலான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. குறைந்த வட்டி விகிதம் என்று வாக்குறுதியளித்து தனிநபர்களை ஏமாற்றி, பின்னர் குறைந்த வட்டி விகிதம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்று கூறுகின்றனர், அதன் பிறகு மிக அதிக வட்டி விகிதத்திற்கு அதிகரிக்கப்படுகிறது. ஆனால் அது லோன் வாங்கும்போது சொல்லப்படுவதில்லை. இந்த மோசடி நிறுவனங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாததற்கு தினசரி அடிப்படையில் அதிகமான அபராதம் விதிக்கின்றன. கூடுதலாக அதிக செயலாக்கக் கட்டணங்கள் மற்றும் பிற அபராதங்களையும் விதிக்கின்றன.

சில மோசடிக்காரர்கள் 3 மாத வங்கி அறிக்கையின் நகல், ஆதார் கார்டு மற்றும் PAN போன்ற சில ஆவணங்களைக் கேட்கும் போது, மற்றவர்கள் அத்தகைய ஆவணங்களை கேட்பதில்லை. இருப்பினும், இரண்டு சந்தர்ப்பங்களிலும், லோன் தொகை சில நிமிடங்களிலேயே வழங்கப்படுகிறது. இந்த மாதிரியான போலி செயலிகள் லோனை தரும் சாக்கில், லோன் பெறுபவவரின் தொலைபேசியில் இருந்து அனைத்து தகவல்களையும் அணுகி, பின்னர் லோன் பெறுபவரின் பணத்தை ஏமாற்ற அல்லது பிற நிதிக் குற்றங்களைச் செய்ய பயன்படுத்த முடியும்.

இத்தகைய லோன் மோசடிகளில் சிக்கி பணத்தைப் பெறுபவர்கள், லோன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்காக, மீட்பு முகவர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள். ஆபாசமான செய்திகள், அநாகரீகமான புகைப்படங்கள் மற்றும் தவறான செய்திகளை லோன் வாங்கிய அந்த நபருக்கும் அவரது/அவள் தொடர்பு பட்டியலில் உள்ள மற்றவர்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

லோன் மோசடிகளைத் தவிர்க்க எச்சரிக்கைகள்:

கடன் மோசடி செய்பவர் தான் உங்களைத் தொடர்பு கொண்டார் என்பதை உடனடியாகத் தெரிவிக்கும் எச்சரிக்கைகள் இங்கே:

  • கடன் வழங்குநரின் நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்படவில்லை மற்றும் அறியப்பட்ட எந்த வங்கி அல்லது NBFC உடன் தொடர்புடையதல்ல என்றால்
  • லோன் செயலியானது ஆப் ஸ்டோரில் சரிபார்க்கப்படாமல், லோன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் விவரங்களை வெளிப்படுத்தவில்லை அல்லது லோனுக்கான ஒப்புதலுக்கு முன் உங்கள் கிரெடிட் அறிக்கையை சரிபார்க்கவில்லை என்றால்
  • கடன் வழங்குநர் பதிவுசெய்யவில்லை, அலுவலக முகவரி அல்லது முறையான இணையதளம் இல்லை என்றால்
  • லோன் வழங்குவதற்கு முன் லோன் கட்டணம் முன்கூட்டியே கோரப்படுகிறது என்றால்
  • கிரெடிட் சரிபார்ப்பு எதுவும் செய்யப்படாமல் இந்த லோன் இலவசம் என்று சொல்லப்பட்டால்
  • கடன் வழங்குநர் மிகக் குறைந்த வட்டியில் லோன் வழங்குவார் என்றும் அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றால்

லோன் மோசடிகளிலிருந்து விலகியிருப்பது எப்படி:

  • உங்கள் கார்டு விவரங்களை தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது பிற வழிகளில் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
  • கடன் வழங்குநரின் நம்பகத்தன்மையை அறிய, எப்போதும் அவர்களின் இருப்பிட முகவரி மற்றும் இணையதளத்தை மதிப்பீடு செய்யுங்கள்.
  • OTP அல்லது பிற தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
  • லோன் ஆஃபரைப் புரிந்து கொள்ளுங்கள், ஏனெனில் மோசடிகள் எப்போதும் சந்தேகத்திற்கிடமான நன்மைகளை வழங்கும்.

முக்கியமான நினைவூட்டல் — PhonePe ஒருபோதும் ரகசிய அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்காது. Phonepe.com டொமைனில் இருந்து வரவில்லை எனில் PhonePeவிலிருந்து வந்ததாகக் கூறும் அனைத்து மின்னஞ்சல்களையும் புறக்கணிக்கவும். மோசடி நடந்ததாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக support.phonepe.com இல் எங்களைத் தொடர்பு கொள்ளவும் அல்லது https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் போலீஸில் புகார் செய்யவும்.

Keep Reading