PhonePe Blogs Main Featured Image

Trust & Safety

KYC மோசடியால் அடையாளத் திருட்டு: உங்கள் அடையாளத்தைப் பாதுகாக்கும் வழிகள்

PhonePe Regional|4 min read|18 July, 2025

URL copied to clipboard

நீங்கள் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கணக்கை உருவாக்கும்போது, அவர்கள் உங்கள் அடையாளத்தை சரிபார்க்கும்படி கேட்கிறார்கள். இது KYC செயல்முறை மூலம் செய்யப்படுகிறது, இதில் ஆதார், PAN அல்லது பிற RBI-அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிப்பது அடங்கும்.

இன்று, நிதி நிறுவனங்கள் இந்த சரிபார்ப்பு செயல்முறையை “டிஜிட்டல் KYC” மூலம் மேற்கொள்கின்றன. ஆஃப்லைன் சரிபார்ப்பை செய்ய முடியாத சூழ்நிலைகளில் வாடிக்கையாளரின் நேரடி புகைப்படங்கள் மற்றும் அவர்களின் ஆவணங்கள் அல்லது ஆதார் வைத்திருப்பதற்கான ஆதாரத்தைப் படம்பிடிப்பது தான் டிஜிட்டல் KYC ஆகும்.

KYC மோசடி மூலம் அடையாளத் திருட்டு என்றால் என்ன?

KYC அடையாளத் திருட்டில், மோசடிக்காரர்கள் உங்கள் தனிப்பட்ட தகவலை திருடுகிறார்கள் அல்லது போலியான அடையாளங்களை உருவாக்கி, அதைப் பயன்படுத்தி KYC செயல்முறையை மோசமாக நிறைவேற்றுகிறார்கள். ஒருமுறை சரிபாரிக்கப்பட்ட பிறகு, அவர்களால் உங்கள் கணக்குகளை அனுமதியில்லாமல் அணுக முடியும் அல்லது உங்கள் பெயரில் புதிய கணக்குகளைத் திறக்க முடியும், கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளை பெற்றுக்கொள்ள முடியும். இது உங்களுக்கு நிதி இழப்பையும், பெயருக்கு சேதம் விளைவிக்குமாறும் அமையும்.

இன்றைய டிஜிட்டல் உலகில், குறிப்பாக மோசடி செய்பவர்கள் KYC நடைமுறைகளை முடிக்கவும் உங்கள் கணக்குகளைக் கட்டுப்படுத்தவும் திருடப்பட்ட அல்லது போலி ஆவணங்களைப் பயன்படுத்துவதால் அடையாளத் திருட்டு ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

கூடுதலாக, இந்த அச்சுறுத்தல் KYC தொடர்பான கணக்கு இடைநீக்க மோசடிகள் வரை நீள்கிறது. இது பயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகப் பொறியியல் உத்தியாகும் ; இதில் மோசடி செய்பவர்கள் வேண்டுமென்றே உங்களுக்கு ஒரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். உங்கள் KYC ஆவணங்கள் முழுமையடையவில்லை அல்லது காலாவதியாகிவிட்டன என்பதால், உங்கள் பேமண்ட் கணக்கு, வங்கி கணக்கு அல்லது டிஜிட்டல் வாலட் மிகக் குறைந்த காலக்கெடுவிற்குள் (எ.கா. 24 மணிநேரத்திற்குள்) நிரந்தரமாக முடக்கப்படும் அல்லது இடைநீக்கம் செய்யப்படும் என்று கூறி மோசடி செய்பவர்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறார்கள். உங்களைப் பீதியடையச் செய்வதே இதன் முதன்மை இலக்காகும்; இதனால் நீங்கள் அவசரப்பட்டு, தீர விசாரிக்காமல் உங்கள் முக்கியமான வங்கி விவரங்களை வழங்கிவிடுவீர்கள் அல்லது கணக்கைப் பயன்படுத்த அவர்களுக்கு அனுமதி கொடுத்துவிடுவீர்கள்.

அடையாளத் திருட்டு மற்றும் KYC மோசடிகள் நிகழக்கூடிய பல சூழ்நிலைகள் உள்ளன:

  • சூழ்நிலை 1: மோசடி செய்பவர்கள் பல்வேறு ஃபிஷிங் முறைகள் மூலம் உங்கள் தனிப்பட்ட அடையாளத் தகவல்களைத் திருடலாம்.

அர்ஜுனை அணுகிய ஒரு மோசடியாளர், அதிக முதலீட்டு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அதைத் தொடங்க, அர்ஜுனின் தனிப்பட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும் என்று கேட்டார். அந்த நபரை நம்பிய அர்ஜுன், தனது முதலீடுகள் பாதுகாப்பாக நிர்வகிக்கப்படும் என்று நினைத்து, தனது கணக்கு விவரங்களையும் OTP-களையும் பகிர்ந்துகொண்டார். திருடப்பட்ட இந்தத் தகவலைப் பயன்படுத்தி, மோசடியாளர் அர்ஜுனின் கணக்கிற்குள் நுழைந்து, அவருக்குத் தெரியாமல் பணப் பரிவர்த்தனைகளைச் செய்தார்.

  • சூழ்நிலை 2: உங்களுடையது அல்லாத ஒரு கணக்கிற்கு KYC முடிக்குமாறு மோசடி செய்பவர்கள் உங்களை ஏமாற்றக்கூடும். அதற்குப் பிறகு, உங்களுக்குத் தெரியாமலேயே அந்தப் போலிக் கணக்கை மோசடி வேலைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

டேவிட்டைத் தொடர்பு கொண்ட ஒரு மோசடிக்காரர், கடன் பெற உதவுவதாக வாக்குறுதி அளித்தார். டேவிட்டின் பெயரில் இல்லாமல், ஏற்கனவே தனது பெயரில் தொடங்கப்பட்ட ஒரு கணக்கில் KYCயை முடிக்குமாறு அந்த மோசடிக்காரர் டேவிட்டிடம் கேட்டுக் கொண்டார். இது கடன் விண்ணப்பச் செயன்முறையின் சாதாரண ஒரு நடைமுறைதான் என்று நம்பி டேவிட்டும் அதற்குக் கட்டுப்பட்டார். அவர் KYC-க்காகத் தனது தனிப்பட்ட விவரங்களைச் சமர்ப்பித்தார்; இதனால் அறியாமலேயே அவர் கணக்கின் முழுப் கட்டுப்பாட்டையும் மோசடிக்காரரிடம் வழங்கினார். பின்னர் அந்த மோசடிக்காரர் அந்த கணக்கைத் தவறான கடன் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தினார்; இதனால் டேவிட் இதைப் பற்றி ஏதும் அறியாமல் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கிக்கொண்டார்.

  • சூழ்நிலை 3: உங்கள் பாஸ்வேர்டு மற்றும் கணக்கு விவரங்களைத் திருடுவதற்காக, வங்கியிலிருந்தோ அல்லது செயலியிலிருந்தோ வருவது போல அவசர எச்சரிக்கை குறுஞ்செய்திகளை மோசடி செய்பவர்கள் அனுப்புகிறார்கள்.

இரவு நேரத்தில் “PP-ALERT” என்ற பெயரில் வந்த ஒரு பதற்றமான SMS நிஷாவின் போனை அடைகிறது. அவசர நிலையை உருவாக்குவது போல இருக்கும் அந்தச் செய்தியில் ஒரு லிங்க் உள்ளது: “அவசரம்: உங்கள் KYC முழுமையடையவில்லை. அடுத்த 15 நிமிடங்களுக்குள் உங்கள் ஆதார் விவரங்களைச் சரிபார்க்க இங்கே கிளிக் செய்யவும், இல்லையெனில் உங்கள் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டு உங்கள் பணம் பறிமுதல் செய்யப்படும்.” பீதியடைந்த நிஷா, அந்த லிங்கை கிளிக் செய்து, ஒரு போலி இணையப் பக்கத்திற்குச் சென்று, தனது போன் எண் மற்றும் பெறப்பட்ட OTP ஆகியவற்றை உள்ளிடுகிறார். ஆனால், திருடப்பட்ட அந்த விவரங்களைப் பயன்படுத்தி வேறு ஒரு நகரத்திலிருந்து மோசடி செய்பவர்கள் அவரது கணக்கில் நுழைய முயலும் போது, PhonePe-ன் பின்னணிப் பாதுகாப்பு இயங்கத் தொடங்குகிறது. PhonePe Protect உடனடியாக அடையாளம் தெரியாத சாதனம் மற்றும் சந்தேகத்திற்குரிய இட மாற்றத்தைக் கண்டறிகிறது. அது உள்நுழைவு முயற்சியை முழுமையாகத் தடுத்து, நிஷாவின் போனுக்கு உடனடியாக ஒரு அறிவிப்பை (notification) அனுப்புகிறது: “சந்தேகத்திற்குரிய உள்நுழைவு முயற்சி தடுக்கப்பட்டது. உங்கள் கணக்கைப் பாதுகாக்கவும்.”

  • சூழ்நிலை 4: மோசடி செய்பவர் ஒருவர் வங்கி அதிகாரி போல நடித்து, கணக்கு முடக்கப்படப் போவதாகப் பயமுறுத்தி, ஸ்கிரீன்-ஷேரிங் செயலியைப் பதிவிறக்கச் சொல்லி “உடனடி தீர்வு” தருவதாகக் கூறுவார்.

KYC பிரிவிலிருந்து அஞ்சலி” என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு பெண் விக்ரமைத் தொடர்பு கொண்டு, கட்டாய தணிக்கை காரணமாக அவரது வாலட் முடக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கிறார். அவர் சொல்வதைக் கேட்டால் இரண்டு நிமிடங்களில் சரிசெய்து தருவதாகக் கூறி, ஒரு ரிமோட்-ஆக்சஸ் செயலியைப் பதிவிறக்கம் செய்யச் சொல்கிறார்: “QuickVerify செயலியை இன்ஸ்டால் செய்து, நான் இணைப்பில் இருக்கும்போதே உங்கள் PhonePe செயலியைத் திறக்கவும். எங்கள் சிஸ்டம் உங்கள் விவரங்களைப் பாதுகாப்பாகச் சரிபார்த்து, வாலட் முடக்கத்தை நீக்கிவிடும்.” விக்ரம் அதை நம்பி, பின்னணியில் அந்த ஸ்கிரீன்-ஷேர் செயலி இயங்கிக்கொண்டிருக்கும் போதே PhonePe-ஐத் திறக்கிறார். உடனே செயலியில் உள்ள பாதுகாப்பு அமைப்பு செயல்படத் தொடங்குகிறது. Device Guard அந்த ஸ்கிரீன்-ஷேரிங் வேலையைக் கண்டறிகிறது; அதே நேரத்தில் இது ஒரு மோசடி நாடகம் என்பதையும் சிஸ்டம் புரிந்துகொள்கிறது. PhonePe உடனடியாகத் திரையை இருட்டாக்கி, மோசடிக்காரர் எந்த விவரத்தையும் பார்ப்பதைத் தடுக்கிறது; மேலும் “மோசடி கண்டறியப்பட்டது” என்ற எச்சரிக்கையுடன் செயலியை முடக்குகிறது.

KYC மோசடிகள் மற்றும் கணக்கு கைப்பற்றல் தொடர்பான பொதுவான எச்சரிக்கைக் குறிப்புகள்

  • நீங்கள் கோராத கணக்கு திறப்பு குறித்து எதிர்பாராமல் வரும் அழைப்புகள் அல்லது மின்னஞ்சல்கள்.
  • நீங்கள் அனுமதிக்காத பரிவர்த்தனைகள் தொடர்பான அலர்ட்கள் அல்லது SMS அறிவிப்புகள்.
  • நீங்கள் விண்ணப்பிக்காத பில்கள் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பெறுவது.
  • உங்கள் வங்கி அல்லது நிதிக் கணக்குகளை அணுகுவதில் சிரமம்.
  • உண்மை என நம்ப வைக்கும் அளவுக்கு ஆச்சரியமாகவும் ஈர்க்கும் வகையிலும் இருக்கும் சலுகைகள், ஆனால் அவை உங்கள் அடையாளத்தைத் திருடும் மோசடி முயற்சிகளாக இருக்கலாம்.
  • உங்கள் KYC-ஐப் புதுப்பிக்காவிட்டால் கணக்கு முடுக்கப்படும் அல்லது இடைநீக்கம் செய்யப்படும் என்று கூறி SMS, WhatsApp அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் அவசர இணையதள இணைப்புகள் (URLகள்).

அடையாளத் திருட்டு மற்றும் KYC மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி?

  • உங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்திருங்கள்: தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது மெசேஜிங் ஆப்களில் முக்கியமான ஆவணங்கள் அல்லது OTPகளை ஒருபோதும் பகிர வேண்டாம்.
  • ஃபிஷிங் போலி முயற்சிகளில் எச்சரிக்கையாக இருங்கள்: சந்தேகத்திற்குரிய லிங்க்குகளைக் கிளிக் செய்வதையோ அல்லது நம்பகமற்ற இணையதளங்களில் தகவல்களைப் பகிர்வதையோ தவிர்க்கவும். உங்கள் கணக்கு முடக்கப்படும் என்று கூறி SMS, WhatsApp அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் எந்தவொரு இணையதள இணைப்புகளையும் (URLs) கிளிக் செய்ய வேண்டாம்.
  • உங்கள் கணக்குகளை அடிக்கடி சரிபாருங்கள்: உங்கள் வங்கி அறிக்கைகள், கிரெடிட் ரிப்போர்ட்கள் மற்றும் கணக்குப் பயன்படுத்தல் விவரங்களைச் சரிபார்த்து, அதில் ஏதேனும் அனுமதி இல்லாத அணுகல் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
  • வலுவான அடையாளச் சோதனையை பயன்படுத்துங்கள்: இரண்டு நிலை அடையாளச் சோதனையை (2FA) எங்கெல்லாம் பயன்படுத்த முடிகிறதோ அங்கெல்லாம் அதை இயக்கி வையுங்கள்.
  • தொடர்புகளைச் சரிபார்க்கவும்: நிதி நிறுவனங்களிலிருந்து எதிர்பார்க்காத தகவல் தொடர்பு வந்தால், அவற்றின் அதிகாரப்பூர்வ தொடர்பு வழிகள் மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்தவும். பெறப்பட்ட SMS எச்சரிக்கைகளில் உள்ள எண்களைப் பயன்படுத்தாமல், சரிபார்க்கப்பட்ட செயலிக்குள் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ எண்கள் மூலம் மட்டுமே வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்ளவும். கணக்கு முடக்கம் தொடர்பான அவசரச் செய்திகளை மூடிவிட்டு, உங்களது உண்மையான அறிவிப்புகளைப் பார்க்க மொபைல் மெனுவிலிருந்து நேரடியாக அதிகாரப்பூர்வ செயலியைத் திறக்கவும்.
  • ஸ்கிரீன்-ஷேரிங் செயலிகளில் எச்சரிக்கையாக இருங்கள்: நம்பகமான வாடிக்கையாளர் சேவை மையப் பணியாளர்கள் எந்தவொரு மூன்றாம் தரப்பு செயலிகளையும் (குறிப்பாக ரிமோட் டெஸ்க்டாப் அல்லது ஸ்கிரீன்-ஷேரிங் செயலிகள்) ஒருபோதும் இன்ஸ்டால் செய்யச் சொல்ல மாட்டார்கள்.
  • தனிப்பட்ட ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால் உடனே புகாரளிக்கவும்: உங்கள் அடையாள ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களிடம் அதுகுறித்து உடனே புகார் அளியுங்கள்.
  • அதிகாரபூர்வ KYC வழிமுறைகளை மட்டுமே பயன்படுத்துங்கள்: KYC செயல்முறைகளைச் செய்யும்போது, அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது சரிபார்க்கப்பட்ட ஏஜென்ட்கள் மூலம் மட்டும் செய்யுங்கள்.

PhonePe உங்களை எவ்வாறு தீவிரமாகப் பாதுகாக்கிறது

  • புத்திசாலித்தனமான அபாயக் கணிப்பு தொழில்நுட்பம்: PhonePe-ன் பேக்-எண்ட் அமைப்புகள், ஒவ்வொரு பரிவர்த்தனையையும் உள்நுழைவு முயற்சியையும் நிகழ்நேரத்தில் மதிப்பீடு செய்ய மெஷின் லேர்னிங் வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றன. சந்தேகத்திற்கிடமான இணைப்பை கிளிக் செய்த உடனேயே, அங்கீகரிக்கப்படாத ஒரு சாதனத்திலிருந்து உள்நுழைவு முயற்சி நடந்தால், அந்தச் செயல்பாட்டை இந்த அமைப்பு கண்டறிந்து எச்சரிக்கலாம் அல்லது தடுக்கலாம்.
  • செயலி சார்ந்த செயல்முறைகள்:PhonePe நிறுவனம், முறையான KYC கோரிக்கைகள் மற்றும் கணக்கு மேம்படுத்தல்களைத் தனது அதிகாரப்பூர்வ செயலியின் பாதுகாப்பான சூழலில் மட்டுமே மேற்கொள்கிறது. குறுஞ்செய்திகள் வழியாக அனுப்பப்படும் வெளி இணையதள இணைப்புகளைக் கொண்டு KYC-ஐ நிறைவு செய்யுமாறு பயனர்களை இந்நிறுவனம் ஒருபோதும் கட்டாயப்படுத்துவதில்லை.
  • செயலி எச்சரிக்கைகள்: புதிய சாதனத்திலிருந்து உள்நுழைவை அங்கீகரிப்பது அல்லது பணப் பரிமாற்றம் செய்வது போன்ற அதிக அபாயமுள்ள செயல்களைப் பயனர் மேற்கொள்ளும்போது, ​​PhonePe செயலி மிகத் தெளிவாகவும் கவனத்தைத் தவறவிட முடியாத வகையிலும் எச்சரிக்கைகளைக் காட்டுகிறது. இது, மோசடி செய்பவர்கள் உருவாக்கும் அவசரநிலை குறித்த மாயையை உடைக்க உதவுகிறது.

ஏதேனும் PhonePe கணக்கில் உங்கள் அடையாளத் தகவல் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால் என்ன செய்வது

PhonePe வழியாக மோசடிக்கு உள்ளாகியதாக அல்லது ஏமாற்றப்பட்டதாக சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுத்து கீழ்க்கண்ட வழிகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் புகார் அளியுங்கள்:

  • PhonePe வாடிக்கையாளர் சேவை எண் PhonePe வாடிக்கையாளர் சேவையை 80–68727374 அல்லது 022–68727374 என்ற எண்ணில் அழைக்கவும். வாடிக்கையாளர் சேவை ஏஜென்ட் ஒரு டிக்கெட்டை எழுப்பி, உங்களுக்கு மேற்கொண்டு உதவுவார்.
  • சமூக ஊடகங்கள் PhonePe இன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளில் மோசடி சம்பவங்களைக் குறித்து புகாரளிக்கவும்:
  • குறை தீர்க்கும் சேவை உங்களிடம் ஏற்கனவே புகார் டிக்கெட் இருந்தால், உங்கள் டிக்கெட் ஐடியைப் பயன்படுத்தி https://grievance.phonepe.com/ என்ற முகவரியில் குறைகளைக் குறித்து புகாரளிக்கலாம்.

அதிகாரிகளிடம் புகாரளித்தல்

  • சைபர் கிரைம் பிரிவு: சைபர் கிரைம் போர்ட்டலில் ஆன்லைனில் புகார் அளிக்கவும் அல்லது 1930 என்ற எண்ணை அழைக்கவும்.
  • தொலைத்தொடர்புத் துறை (DOT): சஞ்சார் சாதி போர்ட்டலில் உள்ள சக்ஷு வசதி மூலம் சந்தேகத்திற்கிடமான செய்திகள், அழைப்புகள் அல்லது ஏதேனும் மோசடி கோரிக்கையைக் குறித்து புகாரளிக்கவும்.

பொறுப்புத்துறப்பு: இந்தத் தகவல் முதன்முதலில் ஜூலை 2025-இல் வெளியானது; தற்போதைய ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களுக்கு ஏற்பவும், பொருத்தமாகவும் இருக்கும் வகையில் அக்டோபர் 2026-இல் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. 

Keep Reading