Trust & Safety
புதிய மோசடி எச்சரிக்கை: ஆன்லைன் வர்த்தக மோசடி
PhonePe Regional|2 min read|29 January, 2024
1850களில் பங்குச் சந்தைகள் துவங்கியபோது, பம்பாய் டவுன்ஹாலுக்கு எதிரே உள்ள ஒரு ஆலமரத்தடியில் பங்குத் தரகர்கள் வர்த்தகம் செய்து கொண்டிருந்தனர், ஒன்றரை நூற்றாண்டுக்குப் பிறகு 2023ல் ஆன்லைன் வர்த்தகம் 17%க்கும் அதிகமான இந்தியக் குடும்பங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டு முறையாக இருக்கும் என்று அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.*
டிஜிட்டல் அலை நிச்சயமாக வங்கி, பரிவர்த்தனை மற்றும் முதலீட்டை காலப்போக்கில் எளிதாக்கியுள்ளது, ஆனால் அதோடு சில அபாயங்களும் சேர்ந்தே வருகிறது. மோசடி செய்பவர்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் வாய்ப்பைக் கண்டுபிடித்து அப்பாவிகளை ஏமாற்றுவதற்கான தனித்துவமான வழிகளைக் கொண்டு வருகிறார்கள். மக்கள் மோசடிகளில் சிக்குவதைத் தவிர்க்க உதவும் எங்கள் முயற்சியில், சமீபத்திய மோசடி போக்குகள் பற்றிய தகவலைப் பகிர்ந்து கொள்கிறோம். இந்த வலைப்பதிவில், ஆன்லைன் வர்த்தக மோசடிகளை நாங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறோம்.
ஆன்லைன் வர்த்தக மோசடி என்றால் என்ன?
ஒரு மோசடி செய்பவர் தவறான தகவலை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டிற்கு ஒரு தரகராக செயல்படும் போது அல்லது போலி இணையதளத்தில் வர்த்தகம் செய்ய வைத்து மக்களை ஏமாற்றும்போது ஆன்லைன் வர்த்தக மோசடி நடக்கிறது. முதலீடு பங்குகள், பத்திரங்கள், முயூச்சுவல் ஃபண்டுகள், சொத்துக்கள் போன்ற வடிவங்களில் இவை இருக்கலாம்.
மோசடி செய்பவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள்?
மோசடி செய்பவர்கள் முதலீட்டாளர்களுக்கு அடிக்கடி எந்த ஆபத்தும் இல்லாமல் நம்பமுடியாத அளவிற்கு லாபத்தை வழங்குகிறார்கள். மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை நீங்கள் இழக்க நேரிடும் என்ற பயத்தை உங்களுக்குள் ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இந்த வகையான மோசடி செய்பவர்கள் பொதுவாக சமூக ஊடகங்கள் மற்றும் உண்மையான, அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக தளங்கள் அல்லது முதலீட்டு வணிகங்களைப் பிரதிபலிக்கும் வலைத்தளங்கள் மூலம் ஆன்லைனில் தங்களை விளம்பரப்படுத்துகிறார்கள். இந்த மோசடிகளில் ஈடுபடுபவர்கள் உள்ளூர் அல்லது தேசிய நிதிச் சட்டங்களில் இருந்து விலக்கு பெற்றவர்கள் என்று அடிக்கடி குறிப்பிடுகின்றனர். அவர்கள் நிதியை நிறுத்தி வைத்து, போலியான வரிவிதிப்பு, கட்டணங்கள் அல்லது பிற கட்டணங்களுக்கு பணம் செலுத்தக் கோரி உங்களை ஏமாற்ற முயலலாம்.
பெரும்பாலான வர்த்தக மோசடிகள் சமூக ஊடகங்களில் அல்லது மெசேஜிங் ஆப்-கள் மூலம் தொடங்குகின்றன. நீங்கள் யாரிடமாவது இருந்து அழைப்பைப் பெற்றாலோ அல்லது நீங்கள் இதுவரை கேள்விப்படாத வர்த்தக இணையதளத்தில் உங்களை அறிமுகப்படுத்தும் ஒருவரை ஆன்லைனில் சந்தித்தாலோ, அது ஒரு மோசடியாக இருக்க வாய்ப்புள்ளது. மோசடி வர்த்தக இணையதளங்களுக்கு நீங்கள் அனுப்பும் எந்தப் பணத்தையும் இழக்க நேரிடும், உங்களால் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் என்று அவர்கள் உறுதியளித்தாலும், அது எவ்வளவு எளிமையாகவும் ஆபத்து இல்லாததாகவும் இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். ஏமாற்றுவதற்கு ஏற்றவர்களை சமூக ஊடகங்கள் மற்றும் மெசேஜிங் ஆப்-களில் தேடுவதுடன், பின்வரும் ஐந்து குறிகாட்டிகள் சாத்தியமான வர்த்தக மோசடியைக் குறிக்கின்றன:
- மோசடி தரகர்கள் நம்பமுடியாத இலாபங்களை அறுவடை செய்ய சிறிய முதலீடுகளை செய்யும் யோசனையை அதிகமாக ஊக்குவிக்கின்றனர்.
- லாபம் அதிகரித்து, அந்நபர் பணத்தை திரும்பப் பெற விரும்பும் போது, உத்தேசிக்கப்பட்ட வருவாய் அணுக முடியாததாக மாறுகிறது. அதற்கான காரணத்தைக் கேட்கும்போது, வரி மற்றும் கமிஷன் என்ற பெயரில் நியாயமற்ற சாக்குகள் கூறப்படுகின்றன.
- காலப்போக்கில், பாதிக்கப்பட்டவர் எவ்வளவு வரிகள் மற்றும் கமிஷன்கள் அளித்தாலும் அவர்களது பணத்தை திரும்பப் பெறுவதற்கான அணுகல் கிடைக்கவில்லை என்பதை உணரும் போது மோசடி செய்பவருக்கு பணத்தைத் திருப்பித் தரும் எண்ணம் இல்லை என்பது நிரூபணமாகிறது.
- ஆர்வமுள்ள மோசடி செய்பவர்கள் அதிக பணம் கோருவதை ஒருபோதும் நிறுத்த மாட்டார்கள், நம்பக்கூடிய ஆக்கப்பூர்வமான சாக்குபோக்குகள் மற்றும் எதிர்காலத்தில் பணத்தை திரும்பப் பெறலாம் என்பது போன்ற வாக்குறுதிகளை அளிக்கிறார்கள்.
- மோசடி செய்பவர்கள் அவ்வளவு எளிதாக பதிலளிக்க மாட்டார்கள், அவர்களை எப்போதும் அணுக முடியாது மற்றும் கணிசமான தொகையை ஏமாற்றி பெற்றுக்கொண்டு, பதிலளிப்பதை முழுவதுமாக நிறுத்திவிடுவார்கள்.
நாம் காணும் ஒரு சில அறிகுறிகளைக் கவனிப்பதன் மூலம் ஆன்லைன் வர்த்தக மோசடியை அடையாளம் காண முடியும்.
நீங்கள் ஒரு வர்த்தக மோசடியால் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி புகாரளிப்பது
நீங்கள் ஒரு வர்த்தக மோசடியில் சிக்கிவிட்டீர்கள் என்று நீங்கள் சந்தேகித்தால், சாத்தியமான சேதத்தைக் குறைக்கவும் மேலும் இழப்புகளைத் தடுக்கவும் உடனடி நடவடிக்கை எடுப்பது முக்கியம். நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய படிகள் இங்கே:
- PhonePe ஆப்: உதவிப் பகுதிக்குச் சென்று, ‘மற்றவை’ என்பதன் கீழ் சிக்கலைப் புகாரளியுங்கள். ‘கணக்கு பாதுகாப்பு & மோசடியான செயல்பாடுகளைப் புகாரளித்தல்’ என்பதைத் தேர்ந்தெடுத்து, சம்பவத்தைப் புகாரளிக்க மிகவும் பொருத்தமான விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
- PhonePe வாடிக்கையாளர் சேவை எண்: ஒரு சிக்கலைத் தெரிவிக்க PhonePe வாடிக்கையாளர் சேவையை 80–68727374/022–68727374 என்ற எண்ணில் அழைக்கலாம். வாடிக்கையாளர் சேவை முகவர் டிக்கெட்டை எழுப்பி உங்கள் பிரச்சினைக்கு உதவுவார்.
- வெப்ஃபார்ம் சமர்ப்பிப்பு: PhonePe இன் வெப்ஃபார்ம், https://support.phonepe.com/ ஐப் பயன்படுத்தியும் டிக்கெட்டை எழுப்பலாம்.
- சமூக ஊடகங்கள்: PhonePe இன் சமூக ஊடக ஹேண்டில்கள் மூலம் நீங்கள் மோசடி சம்பவங்களைப் புகாரளிக்கலாம்
- Twitter — https://twitter.com/PhonePeSupport
- Facebook — https://www.facebook.com/OfficialPhonePe
- குறை: ஏற்கனவே உள்ள புகாரின் மீதான குறையைப் புகாரளிக்க, நீங்கள் https://grievance.phonepe.com/ இல் உள்நுழைந்து, முன்பு எழுப்பப்பட்ட டிக்கெட் ஐடியைப் பகிரலாம்.
- சைபர் செல்: கடைசியாக, மோசடி புகார்களை அருகில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் புகாரளிக்கலாம் அல்லது https://www.cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்யலாம் அல்லது 1930 என்ற சைபர் கிரைம் உதவி மையத்தைத் தொடர்புகொள்ளலாம்.
முக்கியமான நினைவூட்டல் – PhonePe ஒருபோதும் ரகசிய அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்காது. Phonepe.com டொமைனில் இருந்து வரவில்லை எனில் PhonePe இலிருந்து வந்ததாகக் கூறும் அனைத்து மெயில்களையும் புறக்கணிக்கவும். மோசடி நடப்பதாக சந்தேகம் இருந்தால், உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும்.
*ஆதாரம்: