PhonePe Blogs Main Featured Image

Trust & Safety

சிம் டேக்ஓவர் மோசடியிலிருந்து உங்கள் மொபைலை பாதுகாத்திடுங்கள்

PhonePe Regional|3 min read|30 April, 2025

URL copied to clipboard

உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் சிம் ஆகியவை உங்கள் தொழில்நுட்ப பயணத்தின் இரண்டு முக்கியப் பொருட்கள் ஆகும். தொலைபேசி அழைப்புகளிலிருந்து வங்கி மற்றும் முதலீடுகளை நிர்வகிப்பது வரை, மொபைல் சாதனங்களை நம்பியிருப்பது அதிகரித்து வருகிறது. உதாரணமாக, UPI ஐ எடுத்துக் கொள்ளுங்கள், உங்கள் UPI கணக்கை அங்கீகரிக்கும் முதல் படி, உங்கள் வங்கிக் கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து SMS மூலம் நடைபெறும். இது உங்கள் மொபைல் சிம்மில் குறிப்பிடத்தக்க அபாயத்தை விதிக்கிறது – இது சிம் டேக்ஓவர் மோசடியின் இலக்காக மாறக்கூடும்.

சிம் டேக்ஓவர் மோசடி என்றால் என்ன?

இந்த மோசடி வகைக்கு உங்கள் சாதனத்திற்கு நேரடியான அணுகல் தேவையில்லை. அதற்குப் பதிலாக, மோசடி செய்பவர்கள் உங்கள் தொலைபேசி எண்ணை, அவர்கள் கட்டுப்பாட்டிலுள்ள சிம் கார்டுக்கு மாற்ற மொபைல் கேரியர்களை மோசடியாக கையாளுகிறார்கள். முதலில் ஃபிஷிங் நுட்பங்களை பயன்படுத்தி உங்கள் தனிப்பட்ட தகவல்களை  சேகரித்து, பின்னர் உங்கள் மொபைல் கேரியரிடம் ‘சிம் கார்டு தொலைந்துவிட்டது’ என்ற புகாரை எழுப்புவதன் மூலம், அவர்கள் இதைச் செய்கிறார்கள். அவர்கள் உங்களைப் பற்றி சேகரித்த அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் சரிபார்ப்பு நோக்கத்திற்காகப் பயன்படுத்தி மேலும் உங்கள் சிம் கார்டை தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள சிம் கார்டுக்கு போர்ட் செய்கிறார்கள் – இதன் மூலம், உங்களுக்குவரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் முக்கியமாக உங்கள் வங்கி மற்றும் பேமண்ட் ஆப்களுக்கான—சரிபார்ப்பு குறியீடுகள் ஆகியவற்றை அவர்கள் அணுக முடிகிறது. இதனால் உங்களுக்கு பெரிய அளவில் பண இழப்பு ஏற்படக்கூடும்.

இந்த வலைப்பதிவில், சிம் டேக்ஓவர் மோசடிக்கு அடுத்த நிலையில் நீங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக எடுக்க வேண்டிய முக்கியமான நடவடிக்கைகளை நாம் விரிவாக பார்க்கலாம்.

சிம் டேக்ஓவர் மோசடியில் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது:

சிம் டேக்ஓவர் மோசடி தொடர்பான அதிகரித்து வரும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு, உங்கள் மொபைல் கணக்குகளைப் பாதுகாக்க முன்முயற்சி நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். உங்கள் மொபைல் சிம் கார்டை பாதுகாக்க உதவும் 5 முக்கியமான உதவிக்குறிப்புகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன:

1. சிம் பின்/பாஸ்வோர்டை செயல்படுத்துங்கள்

முக்கியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களும் கூடுதல் பாதுகாப்புக்காக உங்களின் கணக்கிற்கான பின் அல்லது பாஸ்வோர்டை அமைப்பதற்கான விருப்பத்தை வழங்குகிறார்கள். இது உங்கள் அனுமதியின்றி உங்கள் கணக்கை மாற்றுவதற்கான முயற்சிகளை மோசடி செய்பவர்களுக்கு மிகவும் கடினமாக்குகிறது. இந்த அம்சத்தை எவ்வாறு ஆக்டிவேட் செய்வது என்பது குறித்து உங்கள் மொபைல் கேரியருடன் சரிபார்க்கவும், அதே நேரத்தில், வலுவான மற்றும் தனித்துவமான பாஸ்வோர்டை தேர்ந்தெடுக்கவும்.

2. தனிப்பட்ட தகவல்களைக் கொடுக்கும்போது கவனமாக இருங்கள்

தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை (சிம் கார்டு எண், பின் மற்றும் பாஸ்வோர்டுகள் போன்றவை) ஒருபோதும் பகிர வேண்டாம். மோசடி செய்பவர்கள் அடிக்கடி சோஷியல் இஞ்சினியரிங் தந்திரங்களைப் பயன்படுத்தி தனிநபர்களின் முக்கியமான விவரங்களை வெளிப்படுத்தும்படி ஏமாற்றுகிறார்கள்.

3. வலுவான அங்கீகார முறைகளைப் பயன்படுத்துங்கள்

முடிந்தவரை, SMS ஐ மட்டும் சார்ந்திருக்காத இரு காரணி அங்கீகார முறைகளை (2FA) தேர்வு செய்யவும். SMS அடிப்படையிலான 2FA பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், இது சிம் டேக்ஓவர் மோசடிக்கு ஆளாகிறது. SMS அங்கீகாரத்துடன் பிற பாதுகாப்பான விருப்பங்களைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

4. உங்கள் மொபைல் பயன்பாட்டைக் கண்காணியுங்கள்

நெட்வொர்க் சிக்னல் திடீரென இழப்பது அல்லது எதிர்பாராத சரிபார்ப்பு குறியீடுகள் போன்ற அசாதாரண செயல்பாடுகளுக்கு உங்கள் தொலைபேசியின் பயன்பாடு மற்றும் செயல்பாட்டை தவறாமல் சரிபார்க்கவும். சந்தேகத்திற்கிடமான எதையும் நீங்கள் கவனித்தால் அல்லது உங்கள் மொபைல் எண் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகித்தால், உடனடியாக உங்கள் நெட்வொர்க் வழங்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள். மேலும் மோசடி நடவடிக்கைகளைத் தடுக்க அவர்கள் உங்கள் கணக்கை விசாரித்து பாதுகாக்க உதவலாம்.

5. அலர்ட்கள் மற்றும் அறிவிப்புகளைப் பயன்படுத்துங்கள்

பல வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பரிவர்த்தனைகள் அல்லது கணக்கு மாற்றங்கள் குறித்த அலர்ட்கள் அமைப்பதற்கான விருப்பத்தை வழங்குகின்றன. உங்கள் கணக்குகளில் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு செயலையும் விரைவாக அடையாளம் காண இந்த அறிவிப்புகளை ஆக்டிவேட் செய்யவும்.

சிம் டேக்ஓவர் மோசடி ஏன் ஆபத்தானது

சிம் டேக்ஓவர் மோசடி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்:

  • முக்கியமான தகவல்களை அணுகுதல்: பாதிக்கப்பட்டவரின் தொலைபேசி எண்ணின் கட்டுப்பாட்டை மோசடி செய்பவர்கள் கைப்பற்றியவுடன், 2FA போன்ற பாதுகாப்பு அம்சங்களைத் தவிர்த்து, நிதிக் கணக்குகள், மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் மற்றும் பிற முக்கிய சேவைகளை அணுகலாம்.
  • பணம் இழப்பு: மோசடி செய்பவர்கள், வங்கிக் கணக்குகளில் பணம் எடுப்பது அல்லது பாதிக்கப்பட்டவரின் தொலைபேசி எண்ணுடன் தொடர்புடைய கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது போன்ற அங்கீகரிக்கப்படாத நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
  • தனியுரிமை மீறல்: மோசடி செய்பவர்கள் அழைப்புகளையும் செய்திகளையும் இடைமறித்து, அடையாளத் திருட்டுக்கு பயன்படுத்தக்கூடிய தனிப்பட்ட தகவல்களைப் பெறலாம்.

இன்றைய மொபைல் உலகில் சிம் டேக்ஓவர் மோசடி ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. மோசடி செய்பவர்கள் மொபைல் நெட்வொர்க்குகளில் உள்ள பலவீனங்களை சுரண்டுவதற்காக எப்போதும் புதிய வழிகளை உருவாக்குகிறார்கள், இதனால் தனிப்பட்ட தகவல்களும் நிதிப்பாதுகாப்பும் பெரும் அபாயத்திற்கு உள்ளாகின்றன. இருப்பினும், நீங்கள் விழிப்புடன் இருப்பது, வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவது மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது ஆகியவற்றின் மூலம், சிம் மோசடியால் பாதிக்கப்படுவதிலிருந்து உங்களைப் பாதுகாக்கலாம்.

மோசடியைத் தடுக்கவும், உங்கள் மொபைல் எண் மற்றும் முக்கியமான தகவல்களைப் பாதுகாக்கவும், நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

விழிப்புடன் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் மேலும் உங்கள் மொபைல் பாதுகாப்பிற்கு எந்தவித சமரசமும் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்.

சிம் டேக்ஓவர் மோசடி சம்பவங்களை எவ்வாறு புகாரளிப்பது

நீங்கள் ஒரு மோசடியின் இலக்காக இருப்பதாக சந்தேகித்தால், உடனடியாக அதைப் புகாரளிக்கவும்:

PhonePe இல் புகாரளித்தல்

அதிகாரிகளிடம் புகாரளித்தல்

  • Cyber Crime Cell: File a complaint online at Cyber Crime Portal or call 1930.
  • Department of Telecommunications (DOT): Report suspicious messages, calls, or WhatsApp fraud via the Chakshu facility on Sanchar Saathi Portal.

முக்கியமான நினைவூட்டல் – PhonePe ஒருபோதும் ரகசியமான அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்காது. PhonePe மூலம் வந்ததாகக் கூறும் அனைத்து மின்னஞ்சல்களையும் phonepe.com டொமைனில் இருந்து வந்திருக்காவிட்டால் புறக்கணிக்கவும். மோசடி என நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக அதிகாரிகளை தொடர்புகொள்ளவும்.

Keep Reading