Trust & Safety
PhonePe செயலியில் வணிகம் செய்கிறீர்களா?
PhonePe Regional|2 min read|17 July, 2020
வருமானத்தைப் பாதுகாத்திடுங்கள். வணிகர்களைக் குறிவைக்கும் மோசடியாளர்களிடம் எச்சரிக்கையுடன் இருங்கள்.
டிஜிட்டல் பேமண்ட் முறைகளின் திடீர் பெருக்கத்தின் காரணமாக வாழ்க்கை சுலபமாகிவிட்டது. பணத்தை அனுப்பவோ பெறவோ, அனைத்து பில்களையும் செலுத்தவோ, மொபைல்/DTH ரீசார்ஜ் செய்யவோ, ஆன்லைனில் பொருட்களை வாங்கவோ, அருகாமைக் கடைகளில் உடனடி பேமண்ட்கள் செய்யவோ பேமண்ட் செயலிகளைப் பயன்படுத்துவதன் காரணத்தால் ரொக்கமாகப் பணத்தை வைத்திருப்பது அவசியமற்றதாக மாறிவிட்டது.
டிஜிட்டல் பேமண்ட் முறைகள் பெரிய வரமாக இருந்தாலும், வாடிக்கையாளர்களை மட்டும் இல்லாமல் சில்லறை வணிகர்களையும் ஏமாற்றி மோசடியான பணப் பரிமாற்றங்களில் ஈடுபடுத்த மோசடிக்காரர்கள் புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
மோசடிக்காரர்கள் சிறு கடைகளை நடத்தும் வணிகர்களை ஏமாற்ற வியூகம் வகுத்து இலக்கு வைக்கும் சூழ்நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
திரைப்பகிர்வு செயலிகள் மூலம் நடைபெறும் மோசடிகள்
பேமண்ட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஒரு வியாபாரியின் தினசரி விற்பனையைச் சரிபார்ப்பதற்காக அழைப்பது போல மோசடிக்காரர்கள் ஏமாற்றுவார்கள். உரையாடலின்போது வியாபாரியின் கார்டு அல்லது வங்கிக் கணக்கு விவரங்களைப் பெறவோ வணிகரின் ஃபோனை வசப்படுத்திக்கொள்ளவோ முயலுவார்கள். பிறகு வணிகர்கள் கடின உழைப்பின் மூலம் சம்பாதித்த பணத்தை மோசடிக்காரர்கள் ஏமாற்றிப் பறித்துக் கொள்வார்கள்.
உதாரணம்:
மோசடிக்காரர்: விற்பனை உதவிக் குழுவில் இருந்து அழைக்கிறேன், சில தொழில்நுட்பப் பிழைகளின் காரணமாக கடந்த சில நாட்களில் உங்கள் வாடிக்கையாளர்கள் செய்த பணப் பரிமாற்றங்களை எங்களால் பதிவுசெய்ய முடியவில்லை. இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம், அந்தச் சிக்கலைத் தீர்க்க நான் உதவுகிறேன். நீங்கள் செய்ய வேண்டியவை இவைதான்:
- உங்கள் வங்கிக் கணக்கு/டெபிட்/கிரெடிட் கார்டு விவரங்கள்/ BHIM UPI பின்னை எங்களுக்கு அனுப்புங்கள்
- இந்த இணைப்பைக் கிளிக் செய்து இந்தச் செயலியை நிறுவுங்கள். இதன் மூலம் இந்தச் சிக்கலுக்கு எங்களால் தீர்வு அளிக்க இயலும். <Anydesk/Screenshare போன்ற திரைப்பகிர்வு செயலிகளை நிறுவுவதற்கான இணைப்பை மோசடிக்காரர் வணிகருக்கு அனுப்புவார்>
வணிகர் அந்தக் காரணத்தை நம்பி ஏமாந்து விவரங்களைப் பகிர்ந்துகொண்டு, அந்தச் செயலியை நிறுவுவார். வணிகர் செயலியை நிறுவியதும் மோசடிக்காரர் வணிகரின் ஃபோனைத் தன்வசப்படுத்தி பணத்தைத் திருடுவார்.
கேஷ்பேக் அல்லது சலுகைத் திட்ட மோசடிகள்
பேமண்ட் பார்ட்னர்களின் வணிகப் பிரதிநிதிகளைப் போல நடிக்கும் மோசடிக்காரர்களிடம் இருந்து வணிகர்களுக்கு அழைப்பு வரும் சூழ்நிலைகளும் உண்டு. கவர்ச்சிகரமான கேஷ்பேக் சலுகைகளைக் கொண்டு வணிகரை ஏமாற்றுவதற்காக இந்த அழைப்பு மோசடிக்காரர்களால் செய்யப்படுகிறது.
சூழ்நிலை 1
மோசடிக்காரர் — நான் வணிகர் உதவிக் குழுவில் இருந்து அழைக்கிறேன். இந்த வாரம் ஒரு சிறப்பு கேஷ்பேக் திட்டம் இருக்கிறது. இந்த இணைப்பிற்கு பேமண்ட் செய்து கேஷ்பேக் தொகையை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் பெறுங்கள்.
- ₹500 பேமண்ட் செய்து ₹1000 கேஷ்பேக் பெறுங்கள்
- ₹10,000 பேமண்ட் செய்து ₹15,000 கேஷ்பேக் பெறுங்கள்
இந்தச் சலுகையை நம்பி வணிகர் முதல் பணப் பரிமாற்றத்தைச் செய்து மோசடிக்காரரிடம் இருந்து ₹1000 பெறுகிறார். அதன்பின் பெரிய தொகையை அனுப்பும்படி மோசடிக்காரர் வணிகரிடம் கேட்கிறார். அதிக லாபம் உள்ள கேஷ்பேக்கைப் பெறும் நம்பிக்கையில் வணிகர் ₹10,000 அனுப்புகிறார், மோசடிக்காரர் அழைப்பைத் துண்டித்துவிட்டு மறைந்துவிடுகிறார்.
சூழ்நிலை 2
மோசடிக்காரர்கள் வணிகர்களை அழைத்து சிறப்பான சலுகைகள் அல்லது திட்டங்கள் குறித்துப் பேசி ஒரு QR குறியீட்டைப் பயன்படுத்தி அவர்களுடைய பணத்தை மோசடி செய்வார்கள்.
உதாரணம்:
மோசடிக்காரர் — இந்த வாரம் ஒரு சிறப்பான கேஷ்பேக் திட்டம் நடைபெறுகிறது. உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் QR குறியீட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்துங்கள். அந்தப் பணம் உங்களுக்கு இரண்டு மடங்காகக் கிடைக்கும்.
- ₹100 பணப் பரிமாற்றத்திற்கு ₹200 கேஷ்பேக்கை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிலேயே பெறுங்கள்
- ₹10,000 பணப் பரிமாற்றத்திற்கு ₹20,000 பம்பர் கேஷ்பேக்கை நேரடியாகவே உங்கள் வங்கிக் கணக்கில் பெறுங்கள். இப்போதே அனுப்புங்கள்!
வணிகர் அந்தச் சலுகையை விரும்புகிறார், மோசடிக்காரர் அனுப்பிய QR குறியீட்டின் மூலம் ₹100 பணப் பரிமாற்றம் செய்து ₹200 கேஷ்பேக் பெறுகிறார். வணிகர் பெரிய தொகையைச் செலுத்தியதும் மோசடிக்காரர் அழைப்பைத் துண்டித்துவிடுவார், பணத்தைத் திரும்பச் செலுத்தமாட்டார்.
Google படிவங்கள் மூலம் மோசடி
மோசடிக்காரர் பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி ஒரு Google படிவத்தை பாதிக்கப்படும் நபருக்கு அனுப்புகிறார்.
உதாரணம்:
மோசடிக்காரர்: நான் வணிகர் உதவிக் குழுவில் இருந்து அழைக்கிறேன். எங்கள் சிஸ்டத்தில் உங்கள் விவரங்கள் சில பதிவேற்றப்படவில்லை, இதன் காரணமாக உங்கள் கணக்கைச் சிறிது நாட்களுக்கு இடைநீக்கம் செய்ய வேண்டி இருக்கும். இதைத் தவிர்க்க இந்த இணைப்பைக் கிளிக் செய்து உங்கள் விவரங்களைக் கொண்டு Google படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
வணிகர் அதை நம்பி படிவத்தில் தனது தனிப்பட்ட/பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்களான கணக்கு எண், UPI பின், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண், பெயர், மின்னஞ்சல் ஐடி, உள்ளிட்டவற்றைப் பூர்த்தி செய்கிறார். வணிகரால் பூர்த்திசெய்யப்பட்ட தகவல்களை மோசடிக்காரர்கள் தவறாகப் பயன்படுத்தி அவர்களுடைய பணத்தைத் திருடுகிறார்கள்.
நினைவில் வைக்க வேண்டிய குறிப்புகள்:
- பின்கள், OTPகள் ஆகியவற்றை ஒருபோதும் பகிரவோ அறியாத எண்ணில் இருந்து வரும் வசூல் கோரிக்கையை ஏற்கவோ வேண்டாம்.
- அறியாத எண்ணில் இருந்து வரும் வசூல் கோரிக்கைக்குப் பணம்செலுத்தவோ, அதை ஏற்கவோ, பேமண்ட் அனுப்பவோ வேண்டாம்.
- அறியாத எண்ணில் இருந்து வரும் கவர்ச்சியான சலுகைகளையோ, இலவசங்களையோ ஏற்க வேண்டாம்.
- எந்தப் படிவத்திலும் பாதுகாக்க வேண்டிய விவரங்களான வங்கி விவரங்கள், பின் உள்ளிட்டவற்றை நிரப்பிப் பதிவேற்ற வேண்டாம்.
- வசூல் கோரிக்கையை ஏற்பதற்கோ அறியாத நபர்/வணிகருக்குப் பணம் அனுப்புவதற்கோ முன்பாக அனுப்புநரின் விவரங்களைச் சரிபார்க்கவும்.
- பணத்தைப் பெற உங்கள் UPI பின்னை உள்ளிட வேண்டாம்.
- Twitter, Facebook போன்ற சமூக ஊடகங்களில் மோசடிக்காரர்களால் தவறாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் உங்களை அடையாளம் காணக்கூடிய தகவல்களைப் பகிராதீர்கள்.
- அறியப்படாத எண்ணில் இருந்து வசூல் கோரிக்கை ஒன்றை நீங்கள் ஏற்றுக்கொண்டு உங்கள் பணம் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டால் உடனடியாக சைபர் செல்/ வங்கியிடம் புகார் அளிக்கவும்.
- PhonePe செயலியில் அந்த மோசடிக்காரரின் எண்ணைத் தடை செய்யவும்.
- PhonePe செயலியில் நடைபெறும் மோசடி சம்பவங்களைப் புகார் செய்யவும். அந்த மோசடியான பணப் பரிமாற்றத்தைக் கிளிக் செய்து, “PhonePe உதவி மையத்தைத் தொடர்புகொள்க” என்பதைத் தேர்வுசெய்து ஒரு புகாரைப் பதிவுசெய்யவும்.