PhonePe Blogs Main Featured Image

Trust & Safety

போலியான செயலிகளில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்!

PhonePe Regional|1 min read|27 April, 2021

URL copied to clipboard

போலியான செயலிகளில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்!

தொழில்நுட்பத்தால் இணைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் முக்கியமான தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க அனைவரும் மொபைல் ஃபோனையே பயன்படுத்துகிறார்கள். அதே நேரத்தில், தனிப்பட்ட சாதனங்களின் பாதுகாப்பை மீறிச்செல்வதற்கான வழிகளை ஹேக்கர்களும் மோசடிக்காரர்களும் தொடர்ச்சியாகத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.

சைபர் தாக்குதல்கள் குறித்தும் அதில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

சைபர் தாக்குதல்கள் குறித்த சமீபத்திய செய்திகளின்படி, போலி செயலிகளின் மூலமாக வைரஸ்/ட்ரோஜன் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி உங்கள் மொபைல் ஃபோனைக் கட்டுப்படுத்தி, பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்களைப் பெற்று, அவற்றைத் தீங்கிழைக்கும் நோக்கங்களுக்காக ஹேக்கர்கள் பயன்படுத்துகிறார்கள்.

புகைப்படம் திருத்துதல், உரை திருத்துதல், பேமண்ட், பேங்கிங் & கேமிங் ஆகியவற்றுக்கான நம்பகமான செயலிகளைப் போலவே வைரஸ் அல்லது ட்ரோஜன்கள் தோற்றம் அளிக்கின்றன.

ஒருவரின் மொபைலில் இத்தகைய செயலிகளை நிறுவியதும் அவற்றைப் பயன்படுத்தி பயனருக்கே தெரியாமல் அவருடைய மொபைலில் உள்ள பல்வேறு செயல்பாடுகளையும் ஹேக்கர்கள் இயக்குகிறார்கள். பயனரின் மொபைலில் அவர்களால் இணையத்தை அணுக முடியும், அலர்ட் அமைப்புகளை மாற்ற முடியும், கூடுதல் மென்பொருட்களை நிறுவ முடியும், மொபைலை மீண்டும் தொடங்கும்போது அந்தச் செயலிகளையும் தானாகத் தொடங்க வைக்க முடியும், தொடர்புகளையும் மீடியா கோப்புகளையும் பார்க்க முடியும், புகைப்படம் எடுக்க முடியும், இருப்பிடத்தை அறிய முடியும், லாக் ஸ்க்ரீன் குறியீடுகளையும் செயலியின் பின்களையும் OTP விவரங்களுடைய SMSகளையும் பார்க்க முடியும்.

உங்கள் சாதனத்தையும் தகவல்களையும் பாதுகாப்பாக வைத்திட இந்தக் குறிப்புகளை நினைவில்கொள்ளுங்கள்!

  1. நம்பகமற்ற தளங்களில் இருந்து செயலிகளைப் பதிவிறக்கவும் நிறுவவும் வேண்டாம். Google Play Store & App Store போன்ற நம்பகமான தளங்களில் இருந்து பதிவிறக்கும் செயலிகளை மட்டுமே நிறுவவும்.
  2. செயலிக்கான அனமதிகளைச் சரிபார்த்துவிட்டு அந்தச் செயலியின் நோக்கத்துடன் தொடர்புடைய அனுமதிகளை மட்டுமே வழங்கவும்.
  3. ஃபோன் அமைப்புகளில் “நம்பகமற்ற தளங்களில்” இருந்து செயலிகள் நிறுவப்படுவதை முடக்குங்கள்.
  4. பொது வைஃபை நெட்வொர்க்குகளைத் தவிருங்கள், தேவையற்ற நேரங்களில் உங்கள் வைஃபை இணைப்பை முடக்குங்கள். பாதிக்கப்பட்ட செயலிகளைப் பரப்புவதற்காகப் பொது இடங்களில் மோசடியான வைஃபை அணுகல் புள்ளிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம்.
  5. நம்பகமான சேவை வழங்குநரிடம் இருந்து பாதுகாப்பு மென்பொருட்களை வாங்குவதையும் அடிக்கடி அவற்றைப் புதுப்பிப்பதையும் கருத்தில்கொள்ளுங்கள்.
  6. ஒரு செயலியைப் பதிவிறக்க வேண்டும் என்றால், அந்தச் செயலியை நிறுவுவது பாதுகாப்பானது என்பதை உறுதிசெய்ய அதைப் பற்றிய பயனர் கருத்துகளைப் படியுங்கள்.
  7. அறியாதவர்களிடம் இருந்து வரும் மெசேஜ்களில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யவோ மின்னஞ்சலில் இணைக்கப்பட்டுள்ள ஜிப் கோப்புகளைப் பதிவிறக்கவோ வேண்டாம்.
  8. உங்கள் உலாவியில் கோப்புகளைத் தானாகப் பதிவிறக்க முயலும் வலைதளங்களை உடனடியாக மூடிவிடுங்கள்.

Keep Reading