Trust & Safety
சோஷியல் இஞ்சினியரிங் மோசடிகளிடம் பாதுகாப்பாக இருங்கள்
PhonePe Regional|1 min read|10 May, 2021
சோஷியல் இஞ்சினியரிங் மோசடிகளிடம் பாதுகாப்பாக இருங்கள்
சமூக வலைதளம் வந்ததற்குப் பிறகு, வாடிக்கையாளர் ஆதரவுச் சேவையைப் பெறுவது முன்பிருந்ததைவிட மிகவும் எளிதாகியுள்ளது. உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால், உடனடியாகச் சமூக வலைதளத்தில் உள்நுழைந்து வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதியிடம் நேரடியாக உரையாடி உதவி பெறலாம்.
சில நேரங்களில், அப்படிப்பட்ட உரையாடலின் போது உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாப்பான வழியில் பகிர்வதற்குப் பதிலாகச் சமூகவலைதளத்தில் நேரடியாகப் பகிர்ந்துவிடுவதுண்டு. மோசடிக்காரர்களால் அத்தகைய விவரங்களைத் தவறான முறையில் பயன்படுத்த முடியும்.
முக்கியக் குறிப்பு — உங்கள் ரகசியாமான அல்லது முக்கியமான விவரங்களை PhonePe ஒருபோதும் கேட்பதில்லை. Phonepe.com எனும் டொமைனைத் தவிர்த்து பிற டொமைனிலிருந்து PhonePe அனுப்பியதாக வரும் மின்னஞ்சல்களைத் தவிர்க்கவும். அது மோசடியாக இருக்கும் எனக் கருதினால், உடனே உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவும்.
சோஷியல் இஞ்சினியரிங் மோசடி என்பது என்ன?
சமூக மாற்ற மோசடியை ஆங்கிலத்தில் சோஷியல் இன்ஜினியரிங் என்பார்கள். அதாவது, உங்கள் தனிப்பட்ட விவரங்களை உங்களிடம் கூறி, உங்கள் நம்பிக்கையைப் பெற்று, சில ரகசியமான விவரங்களைப் பெறுவதாகும். பெரும்பாலும், ஏதேனும் சிக்கல் குறித்து உங்களுக்கு உதவுவது போல் நடித்து உங்கள் நம்பிக்கையைப் பெற முயற்சிப்பார்கள். உண்மையில், அவர்களின் நோக்கமெல்லாம் உங்களிடம் சில ரகசியமான தகவல்களைப் பெற்று உங்கள் பணத்தைத் திருடுவதே.
இதை எப்படி செய்கிறார்கள்?
- தொலைபேசி மூலம் உங்களைத் தொடர்புகொண்டு, உங்கள் வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறுவார்கள். உங்களின் நம்பிக்கையைப் பெற, நீங்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள விவரங்களைப் பயன்படுத்தி உங்கள் டெபிட் கார்டு விவரங்களைப் பகிரும்படி கேட்பார்கள்.
- அடுத்து உங்கள் டெபிட் கார்டிலிருந்து அவர்களின் வாலட்டிற்குப் பணத்தை மாற்ற, உங்களுக்கு வரும் OTP எனப்படும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல்லைப் பகிரும்படி கேட்பார்கள்.
- பரிவர்த்தனை நிறைவடைந்ததும், மோசடிக்காரர்கள் உங்கள் வாலட்டிலிருந்து அவர்களின் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை மாற்றிக்கொள்வார்கள்.
நினைவில்கொள்ளவும்: உண்மையான வாடிக்கையாளர் பிரதிநிதி உங்கள் முழு கிரெடிட்/டெபிட் விவரங்கள் அல்லது OTP போன்றவற்றைப் பகிரும்படி ஒருபோதும் கேட்கமாட்டார்கள். அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட லேண்ட்லைன் எண்ணின் மூலம் மட்டுமே உங்களைத் தொடர்புகொள்வார்கள், மொபைல் எண் மூலம் ஒருபோதும் தொடர்புகொள்ளமாட்டார்கள். உங்கள் வங்கியின் டொமைன் அல்லாமல் பிற டொமைனில் வரும் மின்னஞ்சல்களைத் தவிர்க்கவும்.
நீங்கள் பாதுகாப்பாக இருப்பதற்குச் சில குறிப்புகள்:
- எஸ்.எம்.எஸ் அல்லது பிற வழிகளில் பெறும் OTP, பின் (PIN) அல்லது பிற குறியீடுகளை யாரிடமும் பகிர வேண்டாம்.
- பொதுவெளியில் உங்கள் கணக்கு எண் அல்லது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை ஒருபோதும் பகிர வேண்டாம்.
- தெரியாத எண்ணிலிருந்து அழைத்து, உங்கள் வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி, உங்கள் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டால், அவர்களுக்குப் பதிலளிக்காமல் அந்த அழைப்பைத் துண்டிக்கவும்.
- மின்னஞ்சலை அனுப்பியவரின் டொமைனைச் சரிபார்க்கவும். அது [XYZ]@gmail.com அல்லது ஏதேனும் வேறு ஏதேனும் மின்னஞ்சல் வழங்குநரின் டொமைனில் இருந்தால், அந்த மின்னஞ்சலைப் புறக்கணிக்கவும். எப்போதும் நீங்கள் பெறும் மின்னஞ்சலின் டொமைனும் வங்கியின் உண்மையான டொமைனும் ஒத்துப்போகின்றனவா எனப் பார்க்கவும். அனைத்து வங்கிகளின் மின்னஞ்சல்களும் பாதுகாப்பான https டொமைனிலிருந்து மட்டுமே அனுப்பப்படும்.
பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்வது குறித்த வீடியோவைப் பாருங்கள்: https://youtu.be/rHZ57O9X8kk