PhonePe Blogs Main Featured Image

Trust & Safety

பேமண்ட் மோசடிகளின் வகைகளும் பாதுகாப்பாக இருப்பதற்கான சிறந்த நடவடிக்கைகளும்

PhonePe Regional|3 min read|11 May, 2021

URL copied to clipboard

பேமண்ட் மோசடிகளின் வகைகளும் பாதுகாப்பாக இருப்பதற்கான சிறந்த நடவடிக்கைகளும்

பெருகி வரும் டிஜிட்டல் பேமண்ட் முறைகளினால் வாழ்க்கை சுலபமாகிவிட்டது. பணத்தை அனுப்புதல், பில்களுக்குப் பணம்செலுத்துதல், ரீசார்ஜ், ஆன்லைனில் ஷாப்பிங், உள்ளூர் பெட்டிக்கடைகளில் உடனடியாகப் பணம் செலுத்துதல் போன்ற வசதிகளால் ரூபாய் நோட்டுகளுக்கு அவசியம் இல்லாமல் ஆகிவிட்டது.

டிஜிட்டல் பேமண்ட் முறைகள் ஒரு மிகப்பெரிய வரம் என்றாலும் போலிப் பணப் பரிமாற்றங்கள் செய்ய வைத்து பயனர்களை ஏமாற்றுவதற்காக மோசடிக்காரர்கள் காத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

PhonePe நிறுவனத்தின் மோசடித் தடுப்பு முயற்சிகள், மோசடி வகைகள் மற்றும் பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றைக் குறித்து மேலும் அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

PhonePe நிறுவனத்தின் மோசடித் தடுப்பு முயற்சிகள்

PhonePe நிறுவனத்தில் உங்கள் பணப் பரிமாற்ற அனுபவத்தை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு தொடர்ந்து பணி செய்து வருகிறோம். நவீனத் தொழில்நுட்பத்தோடு வலிமையான ரிஸ்க் குறைப்பு மற்றும் மோசடித் தடுப்பு நடைமுறைகளைப் பயன்படுத்தி மோசடிக்காரர்களைத் தடுத்து வருகிறோம்.

PhonePe கணக்கும் பணப் பரிமாற்றப் பாதுகாப்பும்: பேமண்ட் தளத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்காக எல்லாக் கணக்குகளையும், கணக்கில் செய்யப்படும் பரிமாற்றங்களையும் சரிபார்க்கிறோம். இந்த சரிபார்ப்புச் செயல்முறை பல்வேறு நிலைகளில் செய்யப்படுகிறது. PhonePe செயலியில் புதிய பயனர்கள் பதிவுசெய்ததும் அவர்களுடைய மொபைல் எண் ஒரு OTP மூலமாக சரிபார்க்கப்படுகிறது. UPI பணப் பரிமாற்றங்கள் அனைத்திற்கும் ஒரு MPIN அல்லது பாஸ்வேர்ட் அமைப்பு உள்ளது. எந்தவொரு புதிய சாதனத்தில் இருந்து உள்நுழைந்தாலும் அது OTP சரிபார்ப்பின் மூலம் சரிபார்க்கப்படும்.

சந்தேகத்திற்குரிய பண்புகளும் அறிகுறிகளும் கொண்டுள்ள மிக ஆபத்தான பணப் பரிமாற்றங்கள் இந்தத் தளத்தை அணுகாமல் தடுக்கிறோம்.

மோசடிச் சம்பவ விசாரணைகள்: எங்கள் ரிஸ்க் விசாரணைக் குழு பல்வேறு சேனல்கள் வழியாக புகார் செய்யப்பட்ட மோசடிச் சம்பவங்களை விசாரித்து வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், கூட்டாளர்கள் மற்றும் வெளி ஏஜென்சிகளுக்கு உதவுகின்றனர். இந்தக் குழு மோசடியாளர்களுக்கு எதிரான தற்காப்பு எல்லையாக மோசடிப் பணப் பரிமாற்றங்களைத் தடுத்து நிற்கிறது.

மோசடியைத் தடுப்பதற்கான தொழில்நுட்பத் திறன்:IP, இருப்பிட விவரங்கள் உள்ளிட்டவற்றை நிகழ்நேரத்தில் பெற்று மோசடிப் பணப் பரிமாற்றங்களின் விவரங்கள் அனைத்தும் பதிவுசெய்யப்படுவதை உறுதிசெய்கிறோம். பயனர் செயல்பாடு, சாதனம் மற்றும் கருவி உள்ளிட்ட வரலாற்றுத் தகவல்களையும் பார்வையிட்டு சந்தேகத்திற்குரிய பயனர்களை அடையாளம் கண்டு எச்சரிக்கிறோம்.

சட்ட அமலாக்கத் துறையுடன் கூட்டணி: நாடு முழுவதிலும் உள்ள காவல்துறை சைபர்-க்ரைம் செல்களுடன் நாங்கள் இணைந்து செயல்படுகிறோம். மோசடிப் புகார்களைக் குறித்த தகவல்களை அளித்தல், இந்தப் பணப் பரிமாற்றங்களை இடைமறித்தல், மோசடிக்காரர்கள் PhonePe தளத்தைப் பயன்படுத்தாமல் தடுத்தல் ஆகியவற்றின் மூலம் அவர்களுக்கு உதவுகிறோம். மோசடியில் ஈடுபடும் பயனர்களை அடையாளம் காண்பதற்கான ஒரு எதிர்மறைத் தரவுத்தொகுப்பையும் பராமரித்து வருகிறோம்.

மோசடியைத் தடுப்பதற்குச் செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும்:

  • கார்டு எண், காலாவதித் தேதி, பின், OTP உள்ளிட்ட இரகசியத்தன்மையுள்ள தகவல்களை எவருடனும் பகிர வேண்டாம். PhonePe பிரதிநிதியைப் போல காட்டிக்கொள்ளும் ஒருவர் அத்தகைய விவரங்களைக் கேட்டாலும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பும்படி அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள். எப்போதுமே @phonepe.com என்று முடிகின்ற முகவரியில் இருந்து வரும் மின்னஞ்சல்களுக்கு மட்டும் பதில் அளியுங்கள்.
  • PhonePe செயலியில் பணம் பெறுவதற்கு ’பணம் அனுப்பு’ பட்டனை அழுத்தவோ UPI பின்னை உள்ளிடவோ தேவையில்லை என்பதை எப்போதும் நினைவில்கொள்ளுங்கள்.
  • Screenshare, Anydesk, Teamviewer போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளைப் பதிவிறக்கவோ நிறுவவோ வேண்டாம்.
  • Google, Twitter, FB போன்ற வலைதளங்களில் PhonePe வாடிக்கையாளர் உதவி எண்ணைத் தேடாதீர்கள். PhonePe வாடிக்கையாளர் உதவி மையத்தை அடைவதற்கான ஒரே அதிகாரப்பூர்வமான வழி https://phonepe.com/ta/contact_us.html வலைதளம் மட்டுமே.
  • பல்வேறு சமூக ஊடகங்களில் உள்ள எங்களது அதிகாரப்பூர்வக் கணக்குகளில் மட்டும் எங்களைத் தொடர்புகொள்ளவும்.

Twitter ஹேண்டில்கள்: https://twitter.com/PhonePe

https://twitter.com/PhonePeSupport

Facebook கணக்கு: https://www.facebook.com/OfficialPhonePe/

வலைதளம்: support.phonepe.com

  • PhonePe உதவி மையப் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் எந்த மொபைல் எண்ணையும் அழைக்கவோ அதிலிருந்து அழைப்பு வந்தால் பதிலளிக்கவோ வேண்டாம்.

மோசடிக்காரரால் தொடர்புகொள்ளப்படும் போது என்ன செய்வது?

  • உடனடியாக அருகில் உள்ள சைபர் க்ரைம் மையத்தில் புகார் அளித்து காவல்துறையிடம் தொடர்புடைய விவரங்களைக் கொடுத்து ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்யவும் (மொபைல் எண், பணப் பரிமாற்ற விவரங்கள், கார்டு எண், வங்கிக் கணக்கு உள்ளிட்டவை).
  • PhonePe செயலியில் உள்நுழைந்து ‘உதவி’ என்பதற்குச் செல்லவும். ’கணக்குப் பாதுகாப்புச் சிக்கல்/மோசடி செயல்பாட்டைப் புகார் செய்தல்’ பகுதியின்கீழ் மோசடிச் சம்பவத்தைப் புகார் செய்யலாம்.

பல்வேறு வகையான மோசடிகளின் உதாரணங்கள் இதோ:

‘பணம் கோருதல்’ மோசடி : ‘பணம் கோருதல்’ அம்சம் பிறர் உங்களுக்கு பணம் அனுப்ப அனுமதிக்கும். ‘பணம் அனுப்பு’ பட்டனை கிளிக் செய்து UPI பின்னை உள்ளிட்டு வேறு ஒரு பயனருக்கு பணத்தை அனுப்பலாம். “பணத்தைப் பெற உங்கள் UPI பின்னை உள்ளிடுக”, “பேமண்ட் நிறைவடைந்தது ரூ.xxx பெறுங்கள்” போன்ற மெசேஜ்களின் மூலம் போலி பேமண்ட் கோரிக்கைகளை அனுப்பி மோசடிக்காரர்கள் இந்த அம்சத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

பணம் கோருதல் மோசடி குறித்து இங்கே மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

‘பணத்தைப் பெற QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்’ என்கிற பண மோசடி: மோசடிக்காரர்கள் ஒரு QR குறீயீட்டை Whatsapp போன்ற மல்டிமீடியா செயலிகள் மூலமாகப் பகிர்ந்து பணத்தைப் பெற இந்தக் குறியீட்டை ஸ்கேன் செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்வார்கள். பணத்தைப் பெற QR குறியீட்டை ஸ்கேன் செய்ய அனுமதிக்கும் அம்சம் எதுவும் இல்லை. இத்தகைய கோரிக்கைகளுக்கு இணங்கி செயல்படாமல் அனுப்புநரின் மொபைல் எண்ணையும் பிற விவரங்களையும் புகார் செய்யுங்கள்.

மூன்றாம் தரப்பு செயலிகள் வழியாக பேமண்ட் மோசடி: பணப் பரிமாற்றத்தில் சந்திக்கும் சிக்கல்களைப் பல நேரங்களில் சமூக ஊடகங்கள் மூலம் பயனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதைப் பார்க்கும் மோசடிக்காரர்கள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் போல பயனர்களைத் தொடர்புகொள்கிறார்கள். Screenshare, Anydesk, Teamviewer போன்ற திரைப்பகிர்வு செயலிகளைப் பதிவிறக்கி “PhonePe சரிபார்ப்பு அமைப்பு” அவர்களின் விவரங்களை ஸ்கேன் செய்வதற்காக டெபிட்/கிரெடிட் கார்டை மொபைல் கேமராவுக்கு முன்பாகக் காட்டும்படி கேட்டுக்கொள்கிறார்கள். கார்டு விவரங்களைப் பெற்றதும் தங்கள் சொந்தக் கணக்கிற்குப் பணத்தை அனுப்பிக் கொள்ள உங்கள் மொபைலுக்கு வரும் OTP SMS-ஐயும் பெற்றுக் கொள்கிறார்கள்.

மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் செய்யப்படும் பேமண்ட் மோசடி குறித்து இங்கே மேலும் பாருங்கள்.

Twitter மோசடி: அசல் PhonePe வாடிக்கையாளர் உதவி மைய ஹேண்டிலில் பயனர்கள் பதிவுசெய்கிற விஷயங்களை மோசடிக்காரர்கள் கண்காணித்துவிட்டு உடனடியாக பதில் அளிக்கிறார்கள் (கேஷ்பேக், பணப் பரிமாற்றம் உள்ளிட்டவை). PhonePe உதவி எண் என்று போலி வாடிக்கையாளர் உதவி எண்ணை டிவீட் செய்து ஏமாற்றுவது ஒரு வழக்கமான முறை. ஏமாறும் வாடிக்கையாளர்கள் போலி உதவி எண்ணுக்கு அழைத்து கார்டு மற்றும் OTP விவரங்கள் போன்ற பாதுகாப்பான தகவல்களைப் பகிர்ந்துவிடுகின்றனர்.

Twitter மோசடிகள் குறித்து இங்கே மேலும் வாசியுங்கள்.

டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது டாப்-அப் மோசடி: உங்கள் வங்கி, RBI அல்லது ஈ-காமர்ஸ் தளம் அல்லது லாட்டரி திட்டத்தின் பிரதிநிதிகளாக மோசடிக்காரர்கள் தங்களைக் காட்டிக்கொண்டு உங்கள் 16 இலக்க கார்டு எண், CVV ஆகியவற்றைப் பகிரும்படி கேட்பார்கள். சிறிது நேரத்தில் OTP இருக்கும் SMS ஒன்று உங்களுக்கு வரும். அவர்களே மீண்டும் அழைத்து சரிபார்ப்பதற்காக எனச்சொல்லி இந்த OTP-ஐயும் கேட்பார்கள். இந்த விவரங்களைப் பகிர்ந்தவுடன் உங்கள் கணக்கில் இருந்து மோசடிக்காரர்களின் வாலட்டில் பணம் டாப்-அப் செய்யப்படும்.

டாப்-அப் மோசடிகள் குறித்து இங்கே மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

சோசியல் என்ஜினியரிங் மோசடி: மோசடிக்காரர்கள் உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி உங்களை நம்ப வைப்பதுதான் சோசியல் என்ஜினியரிங் ஆகும். உங்கள் வங்கியில் இருந்து வாடிக்கையாளர் உதவி மைய நிபுணர் பேசுவதாக மோசடிக்காரர்கள் அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். நீங்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்ட விவரங்களையே பயன்படுத்தி (பிறந்த தேதி, இருப்பிடம் உள்ளிட்டவை) உங்கள் நம்பவைத்து பாதுகாக்க வேண்டிய வங்கிக் கணக்கு அல்லது கார்டு விவரங்களைப் பகிரச் சொல்வார்கள். பணப் பரிமாற்றத்தைப் பூர்த்திசெய்ய OTP-ஐக் கொடுக்கும்படி கூறி உங்கள் டெபிட் கார்டைப் பயன்படுத்தி தங்கள் வாலட்டை டாப்-அப் செய்வார்கள்.

சோசியல் என்ஜினியரிங் குறித்து இங்கே மேலும் வாசியுங்கள்.

SIM மாற்றும் மோசடி: உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி உங்கள் மொபைல் எண்ணுக்குரிய ஒரு புதிய SIM கார்டை மோசடியாளர்கள் பெற்றுக்கொள்வது SIM மாற்றும் மோசடி ஆகும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வங்கியில் இருந்து பேமண்ட்டுகளை அங்கீகரிப்பதற்காக அனுப்பப்படும் OTP-ஐயும் பெற்றுவிடுவார்கள். உங்கள் மொபைல் ஆப்பரேட்டரைப் போல நடித்து நெட்வொர்க்கை மேம்படுத்துவதற்கு SMS ஒன்றை ஃபார்வேர்ட் செய்யும்படி கேட்பார்கள். இந்த SMS-இல் உங்கள் புதிய SIM கார்டின் பின்பகுதியில் உள்ள 20 இலக்க எண் இருக்கும். இது உங்கள் தற்போதைய SIM கார்டை முடக்கிவிட்டு போலி SIM கார்டை செயல்படுத்தும்.

SIM மாற்று மோசடி குறித்து இங்கே மேலும் வாசியுங்கள்.

Keep Reading