PhonePe Blogs Main Featured Image

Investments

அதிக வருவாய் ஈட்டுவதற்கான எளிய மந்திரம்!

PhonePe Regional|1 min read|27 July, 2021

URL copied to clipboard

பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யுங்கள்

பங்குச் சந்தையை கணிப்பது சாத்தியமில்லை, ஆனால் உங்களுக்கு பொறுமை இருந்து, நீண்ட கால முதலீடுகளைச் செய்திருந்தால், நல்ல வருவாயைப் பெறுவதற்கும், உங்கள் செல்வத்தை அதிகரிப்பதற்கும் இதுதான் மந்திரம்.

ஈக்விட்டி அல்லது ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற வளர்ச்சி நிதிகளில் நீங்கள் முதலீடு செய்யும்போது, ​​முதலீட்டின் மீதான உங்கள் வருவாயை நிர்ணயிப்பதில் உங்கள் முதலீட்டிற்கு பிறகு நீங்கள் எடுக்கும் முடிவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. குறுகிய கால ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படுவதிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை அறிந்து நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யுங்கள்.

அமெரிக்க முதலீட்டாளரும் உலகின் நான்காவது பணக்காரருமான வாரன் பஃபட், “பங்குச் சந்தை என்பது பொறுமையற்றவரிடமிருந்து பொறுமைசாலிக்கு பணத்தை மாற்றும் ஒரு சாதனமாகும்.” என்றார்

நீண்ட கால முதலீட்டின் நன்மைகளை விளக்க இங்கே ஒரு எடுத்துக்காட்டு.

ஈக்விட்டி ஃபண்ட் முதலீட்டாளர்களின் 4 குரூப்கள் உள்ளன என்று வைத்துக்கொள்வோம்.

  • குரூப் 1: 3 மாதங்களுக்கு முதலீடு
  • குரூப் 2: 1 வருடத்திற்கு முதலீடு
  • குரூப் 3: 5 வருடங்களுக்கு முதலீடு
  • குரூப் 4: 10 வருடங்களுக்கு முதலீடு

இந்த முதலீட்டாளர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு சமயங்களில் ரூ.10,000 முதலீடு செய்தனர். இப்போது, சராசரியாக இங்கே அவர்களின் முதலீட்டு காலத்தின் முடிவில் ரூ.10,000 முதலீடு எவ்வளவு வளர்ந்திருக்கும்.

இந்த பகுப்பாய்விலிருந்து கூடுதல் சிறப்பம்சங்கள்:

10 ஆண்டுகளாக முதலீடு செய்த 50% க்கும் அதிகமான முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடு நான்கு மடங்கிற்கும் மேலாக வளர்ந்து வருவதைக் கண்டனர், மேலும் 98% முதலீட்டாளர்கள் 10 வருட காலப்பகுதியில் தங்கள் பணத்தை இரட்டிப்பாக்கினர்.

மாத காலத்திற்கு மட்டுமே முதலீடு செய்த முதலீட்டாளர்களில், 1/3 க்கும் அதிகமானோர் இழப்புகளைச் சந்தித்தனர். மேலும், 10% முதலீட்டாளர்கள் மட்டுமே 20% க்கும் அதிகமான முழுமையான லாபங்களைக் கண்டனர்.

கற்றல்: நீண்ட காலத்திற்கு முதலீடு செய்த முதலீட்டாளர்கள் தங்கள் செல்வத்தை கணிசமாக வளர்க்க முடிந்தது. நீண்ட கால முதலீட்டைச் செய்யும்போது , நல்ல வருவாயைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஈக்விட்டி அல்லது ஹைப்ரிட் ஃபண்டுகள் போன்ற வளர்ச்சி சார்ந்த நிதிகளில் முதலீடு செய்யுங்கள். நீண்ட காலத்திற்கு (குறைந்தது 5 ஆண்டுகள்) முதலீடு செய்யுங்கள். நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது உங்கள் முதலீடுகளை கணிசமாகவும் அதிக உறுதியுடனும் வளர்க்க உதவுகிறது.

மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படியுங்கள்.

Keep Reading