English | हिंदी | ಕನ್ನಡ | తెలుగు | বাংলা | മലയാളം | ગુજરાતી | मराठी | অসমীয়া | ଓଡ଼ିଆ

    ​​PhonePe-வில் ஆதார் e-KYC-க்கான விதிமுறைகள்

    ​​உங்கள் ஆதார் எண்/VID மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP-ஐ வழங்குவதன் மூலம், பின்வரும் விதிமுறைகளின்படி ஆதார் தகவலைப் பயன்படுத்தி உங்கள் e-KYC-ஐச் செய்ய PhonePe-விற்கு அனுமதி வழங்குகிறீர்கள்: ​

  • ​​PhonePe வாலட்டை அப்கிரேட் செய்வதற்கான e-KYC அங்கீகாரத்திற்காக UIDAI-விற்கு சமர்ப்பிக்க உங்கள் ஆதார் எண்/VID தகவலைப் பயன்படுத்த PhonePe-வை அங்கீகரிக்கிறீர்கள். ​
  • ​​வெற்றிகரமான அங்கீகரிப்புக்குப் பிறகு, UIDAI மாஸ்க்டு ஆதார் (masked Aadhaar), மக்கள் தொகைத் தகவல், அடையாளத் தகவல், ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை PhonePe உடன் (ஒட்டுமொத்தமாக, “தகவல்”) பகிர்ந்து கொள்ளும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.​
  • ​​பெறப்பட்ட இந்த தகவல்களை உங்கள் PhonePe வாலட்டை அப்கிரேட் செய்வதற்கு தேவையான சரிபார்ப்பு நோக்கத்திற்காக மட்டுமே PhonePe பயன்படுத்தும்.​
  • ஆதார் e-KYC செயல்முறையின் ஒரு பகுதியாக சேகரிக்கப்பட்ட உங்கள் e-KYC தகவலைச் சேமிப்பதற்கு எங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புதலை நீங்கள் எந்த நேரத்திலும் திரும்பப் பெறலாம். உங்கள் ஒப்புதலைத் திரும்பப் பெற, ஆப் சப்போர்ட் மூலம் எங்கள் உதவி குழுவைத் தொடர்பு கொள்ளவும் அல்லது​ https://support.phonepe.com தளத்தில் ​​உங்கள் கோரிக்கையைப் பதிவு செய்யலாம்​.
  • ஆதார் தகவல்களை சமர்ப்பிப்பது ​ ​த​​ங்களது சொந்த விருப்பத்திற்கு உட்பட்டது மேலும் PhonePe வாலட்டை அப்கிரேட் செய்யாமல் குறைந்த லிமிட்டுடன் தொடர்ந்து உபயோகிக்கவும் நீங்கள் முடிவு செய்யலாம்.​
  • ​​நீங்கள் வழங்கிய தகவல்கள் ஏதேனும் ஒழுங்காக இல்லை என்றாலோ அல்லது நீங்கள் வழங்கிய தகவல்கள் ஏதேனும் தவறாக இருந்தாலோ PhonePe மற்றும் அதன் அதிகாரிகள் பொறுப்பேற்க மாட்டார்கள்.​
  • ​​ஏதேனும் புகார் தொடர்பான வழிகாட்டுதல் அல்லது தீர்வுக்கு, நீங்கள் ஆப் சப்போர்ட் மூலம்​ ​வாடிக்கையாளர் உதவி குழுவைத்​ ​தொடர்பு கொள்ளலாம் அல்லது​ https://support.phonepe.com என்ற தளத்தில் உங்கள் புகார்களை பதிவு செய்யலாம் அல்லது 080-68727374 / 022-68727374 என்ற ​​எண்ணில் ​​இன்பவுண்டு சப்போர்ட் டீமை அழைக்கலாம்.​
    விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை | குறை தீர்க்கும் கொள்கை