PhonePe | Logo
Company
  • About Us
  • Careers
  • Press
  • Blog
Our Solutions
For Businesses
For Consumers

Offline Merchant Solutions

menu
Offline Payments
menu
Offline Partner Program
See All →

Online Merchant Solutions

menu
Payment Gateway
menu
Payment Gateway Partner
menu
Payment Aggregator
menu
Payment Links
See All →

More Solutions

menu
Merchant Lending
menu
PhonePe Ads
menu
PhonePe Appstore
See All →

Consumer Payments

menu
All Payment Instruments
menu
PhonePe Wallet
menu
NRI Payments by PhonePe

Co-Branded Credit Cards

menu
PhonePe SBI Card
Credit Cards
menu
Wish Credit Card
menu
PhonePe HDFC Bank
Credit Cards

More Solutions

menu
PhonePe Invest
menu
PhonePe Appstore
menu
Mutual Funds
menu
Gold
menu
Silver
menu
Insurance
menu
Travel & Commute

Lending

menu
Consumer Lending
menu
Secured Lending
Investor Relations
Contact Us
Trust & Safety
PhonePe | Hamburger Menu
✕
Home
Company
  • About Us
  • Careers
  • Press
  • Blog
Our Solutions
For Businessesarrow
Offline Merchant Solutionsarrow
icon
Offline Payments
icon
Offline Partner Program
Online Merchant Solutionsarrow
icon
Payment Gateway
icon
Payment Gateway Partner
icon
Payment Aggregator
icon
Payment Links
More Solutionsarrow
icon
Merchant Lending
icon
PhonePe Ads
icon
PhonePe Appstore
See All
For Consumersarrow
Consumer Paymentsarrow
icon
All Payment Instruments
icon
PhonePe Wallet
icon
NRI Payments by PhonePe
Co-Branded Credit Cardsarrow
icon
PhonePe SBI Card
Credit Cards
icon
Wish Credit Card
icon
PhonePe HDFC Bank
Credit Cards
More Solutionsarrow
icon
PhonePe Invest
icon
PhonePe Appstore
icon
Mutual Funds
icon
Gold
icon
Silver
icon
Insurance
icon
Travel & Commute
Lendingarrow
icon
Consumer Lending
icon
Secured Lending
Investor Relations
Contact Us
Trust & Safety
Privacy Policy

நேஷனல் பென்ஷன் ஸ்கீம் – விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

Englishગુજરાતીதமிழ்తెలుగుमराठीമലയാളംঅসমীয়াಕನ್ನಡ
< Back

இந்த நேஷனல் பென்ஷன் ஸ்கீம் – விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (“NPS விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்”) தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000, அவ்வப்போது திருத்தப்பட்டவாறு, அதனுடன் இணைத்து வாசிக்கப்படும் தகவல் தொழில்நுட்ப (இடைநிலையாளர்களுக்கான வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைக் குறியீடு) விதிகள், 2021-ன் விதி 3-ன் கீழ் வெளியிடப்பட்ட கணினியால் உருவாக்கப்பட்ட மின்னணு பதிவாகும், மேலும் இதற்கு ஃபிஸிக்கல் அல்லது டிஜிட்டல் கையொப்பங்கள் எதுவும் தேவையில்லை.

இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து ஆங்கிலப் பெரிய எழுத்தில் தொடங்கும் சொற்களும் கீழே உள்ள பிரிவு B (வரையறைகள்)-ன் கீழ் அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள பொருளைக் கொண்டிருக்கும்.

A. அறிமுகம்

  1. இந்த NPS விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் PhonePe பிளாட்ஃபார்மில் PhonePe லிமிடெட் (முன்னர் ‘PhonePe பிரைவேட் லிமிடெட்’ என அறியப்பட்டது) (“PhonePe“) வழங்கும் சேவைகளை நீங்கள் அணுகுவதையும் பயன்படுத்துவதையும் நிர்வகிக்கின்றன.
  2. NPS சேவைகளைப் பெறுவதற்கு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன், இந்த NPS விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஒவ்வொன்றையும் கவனமாகப் படிக்கவும், ஏனெனில் இந்த NPS விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உங்கள் சட்டப்பூர்வ உரிமைகள், தீர்வுகள் மற்றும் கடமைகள் பற்றிய முக்கியமான தகவல்களைக் கொண்டுள்ளன. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உங்களுக்கும் (“நீங்கள்“) PhonePe -க்கும் இடையே சட்டப்பூர்வமாகப் பிணைக்கப்படும் ஒப்பந்தத்தை உருவாக்குகின்றன.
  3. PFRDA ஆல் செயல்படுத்தப்பட்ட NPS ஆன்போர்டிங் பயணத்தைப் பெற PhonePe பிளாட்ஃபார்மில் NPS சேவைகளை அணுகுவது, வழிசெலுத்துவது அல்லது தொடங்குவதன் மூலம், PFRDA மற்றும்/அல்லது ஏதேனும் NPS பங்கேற்பாளர்களால் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் பொருந்தக்கூடிய விதிகளுடன் இணைந்து இந்த NPS விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
  4. NPS சேவைகளைப் பெறுவதற்கு PhonePe பிளாட்ஃபார்மை அணுகுவது அல்லது NPS சேவைகளைப் பெறுவதற்காக PhonePe பிளாட்ஃபார்மில் உங்கள் தகவலைப் பதிவுசெய்வதன் மூலம், இந்த NPS விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் கூடுதலாக, பொதுவான PhonePe விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு (“பொது வி&நி-கள்”) கட்டுப்பட நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த NPS விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் பொது T&Cகளுக்கும் இடையே ஏதேனும் முரண்பாடு ஏற்படும் பட்சத்தில், இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் முரண்பாட்டின் அளவிற்கு மற்றும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சேவைகள் தொடர்பாக மட்டுமே மேலோங்கும்.
  5. PhonePe பிளாட்ஃபார்மைப் பயன்படுத்துவதன் மூலம், PhonePe -வின் தனியுரிமைக் கொள்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி உங்கள் தகவலைப் பயன்படுத்த நீங்கள் இதன் மூலம் ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் PhonePe பிளாட்ஃபார்மை அணுகும்போது PhonePe உங்கள் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு கையாள்கிறது என்பதை இந்தத் தனியுரிமைக் கொள்கை விளக்குகிறது.

B. வரையறைகள்

  1. “API” என்பது அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்ஃபேஸ் ஆகும்;
  2. “API கேட்வே” என்பது NPS பங்கேற்பாளர்களுக்கு இடையே தரநிலைப்படுத்தப்பட்ட API-வழி ஒருங்கிணைப்புகள் மூலம் தரவைப் பாதுகாப்பாக பரிமாறிக்கொள்வதற்கும் தகவல்களை அனுப்புவதற்கும் (பெரும்பாலும் கோரிக்கைகள் மற்றும் பதில்களின் வடிவில்) NBSL-க்கு சொந்தமான மற்றும் இயக்கப்படும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு அல்லது பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு அடுக்கைக் குறிக்கும்.
  3. “NBSL” என்பது NPCI BHIM சர்வீசஸ் லிமிடெட் ஆகும்;
  4. “NPS” என்பது PFRDA சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட நேஷனல் பென்ஷன் சிஸ்டம் ஆகும்;
  5. “NPS பங்கேற்பாளர்கள்” என்பது பென்ஷன் ஏஜென்ட் ஆக PhonePe, PoP, API கேட்வே ஆகியவற்றைக் குறிக்கும்;
  6. “NPS சேவைகள்” என்பது PFRDA ஆல் அனுமதிக்கப்பட்டபடி PhonePe வழங்கும் NPS ஆன்போர்டிங் வசதி சேவைகளைக் குறிக்கும்;
  7. “பென்ஷன் ஏஜென்ட்” என்பது PFRDA ஆல் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் மற்றும் சந்தாதாரர்களை NPS-ல் ஆன்போர்டிங் செய்வதை எளிதாக்குவது உட்பட NPS விநியோகத்தை எளிதாக்குவதற்காக ஒரு ஒப்பந்தத்தின் கீழ் PoP ஆல் ஈடுபடுத்தப்படும் நபராகும்;
  8. “PFRDA” என்பது பென்ஷன் ஃபண்ட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆகும்;
  9. “PFRDA சட்டம்” என்பது அவ்வப்போது திருத்தப்பட்ட பென்ஷன் ஃபண்ட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம், 2013 ஆகும்;
  10. “PhonePe பிளாட்ஃபார்ம்” என்பது PhonePe மற்றும்/அல்லது அதன் இணை நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட, சொந்தமான மற்றும்/அல்லது இயக்கப்படும் மென்பொருள்/மென்பொருள் பயன்பாடு/பிளாட்ஃபார்ம்/இணையதளத்தைக் குறிக்கும்;
  11. “பாயிண்ட் ஆஃப் பிரசென்ஸ்” / “PoP” என்பது சந்தாதாரர்களுக்கு நிதிகள் மற்றும் வழிமுறைகளைப் பெறுதல் மற்றும் அனுப்புதல் மற்றும் நிதிகளை வழங்குதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக CRA உடன் மின்னணு இணைப்பு திறன் கொண்ட மற்றும் PFRDA சட்டத்தின் கீழ் PFRDA-வில் பாயிண்ட் ஆஃப் பிரசென்ஸ் ஆகப் பதிவுசெய்யப்பட்ட இடைநிலையாளரைக் குறிக்கும். இந்த NPS விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் நோக்கங்களுக்காக, PoP என்பதில் Axis பேங்க் லிமிடெட், HDFC பேங்க் லிமிடெட், ICICI பேங்க் லிமிடெட் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை அடங்கும்;

C. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

  1. NPS சேவைகளை அணுகத் தேர்ந்தெடுப்பதன் மூலம், பொருந்தக்கூடிய சட்டங்களின்படி NPS ஆனது PFRDA ஆல் நிர்வகிக்கப்படுகிறது என்றும், PFRDA ஒழுங்குமுறைகளின் கீழ் PhonePe ஒரு இடைநிலையாளர், பென்ஷன் விநியோகஸ்தர் அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனம் அல்ல என்றும் நீங்கள் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள். PFRDA வழிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட PoP(கள்)-ன் கீழ் PFRDA ஆல் அனுமதிக்கப்பட்ட ஆன்போர்டிங் சேவைகளை வழங்குவதற்காக பென்ஷன் ஏஜென்ட்டாகக் கருதப்படும் ஒரு அமைப்பாளராக மட்டுமே PhonePe செயல்படுகிறது.
  2. PFRDA ஒழுங்குமுறைகளின்படி அந்தந்த PoP(கள்)-ன் அதிகாரம் மற்றும் மேற்பார்வையின் கீழ் மற்றும் அந்தந்த PoP(கள்)-ன் உத்தரவுகள் மற்றும் அங்கீகாரத்தின்படி மட்டுமே PhonePe செயல்படுகிறது என்றும், பிற NPS பங்கேற்பாளர்களுக்கு இடையிலான பரிவா்த்தனைகளின் பூர்த்தி, சட்டப்பூர்வத்தன்மை, நிறைவு ஆகியவற்றின் மீது PhonePe எந்தக் கட்டுப்பாட்டையும் செலுத்தவில்லை மற்றும் அதற்குப் பொறுப்பாகாது என்றும் நீங்கள் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள். சந்தாதாரர்களை ஆன்போர்டிங் செய்வதை எளிதாக்குவதற்கும், சந்தாதாரர் தகவல்களைச் சேகரித்து PoP-க்கு அனுப்புவதற்கும், ஆன்போர்டிங்கின் போது சந்தாதாரர்களுக்கு ஃப்ரண்ட்-எண்ட் பயனர் உதவியை வழங்குவதற்கும் உள்கட்டமைப்பை வழங்குவதோடு PhonePe-வின் பங்கு வரம்பிடப்பட்டுள்ளது.
  3. PoP என்பது NPS-ன் கீழ் ஆன்போர்டிங், வாடிக்கையாளர் குறித்த உரிய ஆய்வு மற்றும் சந்தாதாரர்களுக்கான சேவை ஆகியவற்றிற்குப் பொறுப்பான முதன்மை ஒழுங்குபடுத்தப்பட்ட இடைநிலையாளர் ஆகும். NPS-க்கான எந்தவொரு விண்ணப்பங்களையும் ஏற்பதிலோ அல்லது நிராகரிப்பதிலோ PhonePe தனது சுயவிருப்பப்படி முடிவெடுப்பதில்லை. வாடிக்கையாளர் அடையாளம் காணல், KYC இணக்கம், வாடிக்கையாளர் குறித்த உரிய ஆய்வு, இடர் மதிப்பீடு, PRAN உருவாக்கம், நிதி கையாளுதல் அல்லது செட்டில்மென்ட் செயல்பாடுகளை PhonePe மேற்கொள்வதில்லை.
  1. API கேட்வே மூலம் NPS பங்கேற்பாளர்களுடன் இணைந்து PhonePe NPS சேவைகளை வழங்குகிறது. PhonePe வழங்கும் NPS சேவைகள் NPS பங்கேற்பாளர்களின் பல வெளிப்புற அமைப்புகளுடனான ஒருங்கிணைப்புகளை உள்ளடக்கியது என்பதை நீங்கள் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள். அதன்படி, PhonePe-வின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட அத்தகைய வெளிப்புற அமைப்புகள் அல்லது உள்கட்டமைப்பு சார்ந்த தொழில்நுட்ப அல்லது செயல்பாட்டுச் சிக்கல்கள் காரணமாக ஏற்படும் தாமதம், தோல்வி, குறுக்கீடு அல்லது வெற்றியற்ற ஆன்போர்டிங்கிற்கு PhonePe பொறுப்பாகாது.
  1. NPS தொடர்பான எந்தவொரு சேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு PhonePe பொறுப்பாகாது, இதில் வரம்பில்லாமல் பின்வருவன அடங்கும்: (a) API கேட்வேயின் கிடைக்கும் தன்மை மற்றும்/அல்லது செயல்பாடு; (b) அந்தந்த PoP(கள்) வழங்கிய தகவலின் துல்லியம் மற்றும்/அல்லது முழுமை; (c) வெற்றிகரமான PRAN உருவாக்கம் மற்றும் முழுமையான ஆன்போர்டிங் பயணத்தை முடித்தல்; (d) PhonePe ஆல் எளிதாக்கப்படும் ஆன்போர்டிங் சேவைகள் தொடர்பானவை தவிர NPS தொடர்பான வாடிக்கையாளர் ஆதரவு சேவைகள்; (e) ஏதேனும் காரணத்திற்காக அல்லது எந்தக் காரணமும் இன்றி அந்தந்த PoP(கள்) மூலம் ஏதேனும் சேவையை ரத்து செய்தல்.
  1. NPS ஆன்போர்டிங் பயணத்தில் தடையற்ற நுழைவை எளிதாக்கும் ஒரு தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தித் தரும் தரப்பாகவும் ஃப்ரண்ட்-எண்ட் இடைமுகமாக மட்டுமே PhonePe செயல்படுகிறது. PhonePe ஒரு பாயிண்ட் ஆஃப் பிரசென்ஸ், மத்திய பதிவு பராமரிப்பு முகமை (central recordkeeping agency) அல்லது முதலீட்டு ஆலோசகராக செயல்படவில்லை.
  1. PhonePe பிளாட்ஃபார்மில் NPS சேவைகளைப் பயன்படுத்த, நீங்கள் பின்வருவனவற்றை உறுதிசெய்து உத்தரவாதம் அளிக்கிறீர்கள்:
  1. நீங்கள் இந்தியாவில் வசிக்கும் ஒரு நபர்;
  2. கணக்கு தொடங்கும் போது உங்களின் வயது 18 முதல் 85-க்குள் உள்ளது;
  3. பங்கேற்கும் பேங்க்-PoP-இல் முழுமையான KYC-இணக்கம் கொண்ட சேமிப்புக் கணக்கை வைத்துள்ளீர்கள்; மற்றும்
  4. இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872-ன் கீழ் பிணைப்புள்ள ஒப்பந்தத்தில் ஈடுபட உங்களுக்கு சட்டப்பூர்வ தகுதி உள்ளது.
  1. பிளாட்ஃபார்மில் NPS பயணத்தைத் தொடர்வதன் மூலம், அந்தந்த PoP-ன் கோர் பேங்கிங் சிஸ்டத்திலிருந்து (“CBS“) தகுதியான, வங்கி-சரிபார்க்கப்பட்ட KYC கணக்குகளைப் பெறுவதற்காக, API கேட்வே மூலம் உங்கள் மொபைல் எண், பிறந்த தேதி மற்றும் ஆன்போர்டிங் பயணத்தின் போது வழங்கப்பட்ட பிற தகவல்களை அந்தந்த PoP-க்கு பாதுகாப்பாக அனுப்ப PhonePe-க்கு உங்கள் ஒப்புதலை வழங்குகிறீர்கள்.
  1. NPS தொடர்பான PhonePe பிளாட்ஃபார்மில் ஹோஸ்ட் செய்யப்பட்ட தகவல்கள் அந்தந்த PoP-களால் வழங்கப்படுகின்றன, மேலும் PhonePe அத்தகைய தகவல்களை ‘உள்ளது உள்ளபடி’ அடிப்படையில் மட்டுமே காட்சிப்படுத்துகிறது. PhonePe பிளாட்ஃபார்மில் ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ள NPS தொடர்பான எந்தவொரு தகவலையும், அவ்வப்போது அந்தந்த PoP-கள் வழங்கும் தகவலின் அடிப்படையில் உங்களுக்கு எந்த முன் அறிவிப்பும் இன்றி PhonePe மாற்றலாம். NPS தொடர்பாக PhonePe பிளாட்ஃபார்மில் ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ள தகவல்களை நம்பியிருக்கத் தேர்ந்தெடுப்பதன் மூலம், அத்தகைய தகவல்களை நீங்கள் நம்பியிருப்பது தொடர்பாக PhonePe-க்கு எதிராக உங்களுக்கு இருக்கும் அனைத்து கிளைம்கள், நடவடிக்கை எடுக்கும் உரிமைகள் மற்றும்/அல்லது தீர்வுகளை (சட்டத்தின் கீழ் அல்லது வேறுவிதமாக) வெளிப்படையாகத் துறக்கிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு, ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொள்கிறீர்கள். NPS தொடர்பான எந்தவொரு தகவலின் துல்லியம், முழுமை அல்லது பயன்படுத்தக்கூடிய தன்மை காரணமாக ஏற்படும் அல்லது அது தொடர்பாக எழும் எந்தவொரு விளைவுகளுக்கும் PhonePe எந்தவொரு பொறுப்பையும் வெளிப்படையாக மறுக்கிறது மற்றும் எந்தப் பொறுப்பையும் ஏற்காது. மேற்கூறியவை எதுவாக இருந்தாலும், வரலாற்றுச் செயல்பாடு குறித்து PhonePe பிளாட்ஃபார்மில் காட்டப்படும் எந்தவொரு தகவலும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே தவிர, நிதி, முதலீடு அல்லது சட்டப்பூர்வ ஆலோசனையாகாது.
  1. PRAN உருவாக்கம் மற்றும் ஆன்போர்டிங் கட்டணங்கள், ஆரம்பப் பங்களிப்பு மற்றும்/அல்லது பிந்தைய பங்களிப்புகளைச் செலுத்துவது என்பது உங்களுக்கும் அந்தந்த PoP(கள்)-க்கும் இடையிலான ஒரு சுயாதீனமான பரிவர்த்தனை என்பதையும், PRAN உருவாக்கம் மற்றும் NPS சேவைகளுடன் தொடர்புடைய பிற நடவடிக்கைகளுக்கு PhonePe பொறுப்பல்ல என்பதையும் நீங்கள் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள். ஆன்போர்டிங் கட்டணம் மற்றும் ஆரம்பப் பங்களிப்புகளுக்காகச் செலுத்தப்படும் தொகைகள் நேரடியாக அந்தந்த PoP(கள்)-ன் நியமிக்கப்பட்ட கணக்கிற்கு செலுத்தப்படுகின்றன, மேலும் PhonePe எந்தவொரு கட்டத்திலும் உங்கள் நிதியை வைத்திருக்கவோ, பணப் பரிவர்த்தனைகளை கிளியர் செய்யவோ அல்லது செட்டில்மென்ட் செய்யவோ செய்யாது.
  1. PRAN உருவாக்கம், கணக்கு பராமரிப்பு, KYC சரிபார்ப்பு, நிதி மேலாண்மை அல்லது திட்டத்தின் செயல்பாடு தொடர்பான குறைகள், PFRDA ஒழுங்குமுறைகளால் நிர்வகிக்கப்படும் சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட NPS குறை தீர்க்கும் முறை மூலம் அல்லது நேரடியாக அந்தந்த PoP(கள்) மற்றும்/அல்லது CRA ஆகியவற்றிடம் எழுப்பப்பட வேண்டும். NPS சேவைகளைப் பெறும் போக்கில் PhonePe பிளாட்ஃபார்மின் பயனர் இடைமுகம் தொடர்பான ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல்கள் இருந்தால், நீங்கள் PhonePe வாடிக்கையாளர் ஆதரவைத் தொடர்புகொள்ளலாம்.
  1. பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட வரம்பிற்கு, NPS சேவைகள், புதுப்பிப்புகள், தகவல்கள்/விளம்பர மின்னஞ்சல்கள் மற்றும்/அல்லது தயாரிப்பு அறிவிப்புகள் தொடர்பாக PhonePe அல்லது அதன் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள்/வணிகப் பங்காளிகள்/சந்தைப்படுத்தல் இணை நிறுவனங்களிடமிருந்து மின்னஞ்சல்கள், தொலைபேசி மற்றும்/அல்லது SMS மூலம் தகவல்தொடர்புகளைப் பெற ஒப்புக்கொள்கிறீர்கள். இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) உருவாக்கிய விதிகள் மற்றும் விதிமுறைகள் உட்பட பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ், தொந்தரவு செய்ய வேண்டாம் (“DND”) / தேசிய வாடிக்கையாளர் விருப்பப் பதிவேடு (“NCPR”) பட்டியலின் கீழ் அத்தகைய மொபைல் எண் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், நீங்கள் வழங்கிய மொபைல் எண்ணில் அனைத்து தகவல்தொடர்புகளையும் பெற பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட வரம்பிற்கு ஒப்புக்கொண்டு சம்மதிக்கிறீர்கள். இந்த நோக்கத்திற்காக, உங்கள் தகவலை அதன் குழு நிறுவனங்கள், PhonePe-வின் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர் அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் பகிர/வெளியிட PhonePe-க்கு மேலும் அதிகாரம் அளிக்கிறீர்கள்.
  1. அனைத்துத் தகவல்தொடர்புகளும் சரியாக அனுப்பப்படுவதை உறுதிசெய்ய PhonePe நியாயமான நடவடிக்கைகளை எடுக்கும் அதே வேளையில், தொடர்புத் தகவலில் உள்ள கட்டுப்பாடுகள், DND பட்டியலின் கீழ் தொலைபேசி எண் பதிவு செய்யப்பட்டிருப்பது, மின்னஞ்சல் தரவு சேமிப்பகத்தில் போதாமை, தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் பிழைகள் போன்ற சிக்கல்கள் காரணமாக தகவல்தொடர்புகளை அனுப்புவதில் தோல்வி ஏற்படலாம். மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு தகவல்தொடர்புகளும் கிடைக்கப்பெறாததற்கு PhonePe பொறுப்பாகாது அல்லது பொறுப்பேற்காது.
  1. PhonePe பிளாட்ஃபார்ம் மற்றும் NPS சேவைகளில் இருக்கும் அறிவுசார் சொத்துரிமைகள் (அந்த உரிமைகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும்) உட்பட PhonePe பிளாட்ஃபார்ம் மற்றும் சேவைகளுக்கான அனைத்து உரிமைகள், உரிமைமூலம் மற்றும் உரிமைசார் நலன்களையும் PhonePe கொண்டுள்ளது என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள். NPS சேவைகளில் PhonePe ஆல் ரகசியமானது என ஒதுக்கப்பட்ட தகவல்கள் இருக்கலாம் என்றும், PhonePe-வின் முன் எழுத்துப்பூர்வ ஒப்புதலின்றி அத்தகைய தகவல்களை வெளியிடக் கூடாது என்றும் நீங்கள் மேலும் ஒப்புக்கொள்கிறீர்கள். PhonePe பிளாட்ஃபார்மின் உள்ளடக்கங்கள், அதன் “தோற்றம் மற்றும் உணர்வு” (எ.கா. உரை, கிராபிக்ஸ், படங்கள், லோகோக்கள் மற்றும் பொத்தான் ஐகான்கள்), புகைப்படங்கள், எடிட்டோரியல் உள்ளடக்கம், அறிவிப்புகள், மென்பொருள் மற்றும் பிற பொருட்கள் உட்பட, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப PhonePe மற்றும்/அல்லது அதன் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள்/அவர்களின் உரிமம் வழங்குநர்களுக்குச் சொந்தமானவை/உரிமம் பெற்றவை, மேலும் பொருந்தக்கூடிய பதிப்புரிமை, வர்த்தகமுத்திரை மற்றும் பிற சட்டங்களின் கீழ் அவர்களால் தகுந்த முறையில் பாதுகாக்கப்படுகின்றன. PhonePe பிளாட்ஃபார்ம் மற்றும் சேவைகளை அணுகவும் பயன்படுத்தவும் PhonePe உங்களுக்கு வரம்பிற்குட்பட்ட உரிமத்தை வழங்குகிறது. இந்த உரிமத்தில் வேறு ஒரு நபர், விற்பனையாளர் அல்லது பிற மூன்றாம் தரப்பினரின் நலனுக்காக எந்தவொரு தகவலையும் பதிவிறக்கம் செய்வது அல்லது நகலெடுப்பது அல்லது அதிலிருந்து பெறப்பட்ட படைப்பை உருவாக்குவது, மாற்றுவது, ரிவர்ஸ் இன்ஜினியரிங் செய்வது, ரிவர்ஸ் அசெம்பிள் செய்வது அல்லது மூலக் குறியீட்டைக் கண்டறிய முயற்சிப்பது, விற்பனை செய்வது, உரிமையை ஒப்படைப்பது, சப்-லைசென்ஸ் தருவது, பிணைய உரிமையை வழங்குவது அல்லது NPS சேவைகளில் உள்ள உரிமையை வேறு விதமாக மாற்றுவது ஆகியவை அடங்காது. உங்களின் அங்கீகரிக்கப்படாத பயன்பாடு உங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி அல்லது உரிமத்தை ரத்து செய்யும்.
  1. PhonePe பிளாட்ஃபார்மைப் பயன்படுத்துவதன் மூலம், பின்வருவனவற்றைச் செய்யக்கூடாது என ஒப்புக்கொள்கிறீர்கள்: (i) PhonePe பிளாட்ஃபார்ம் அல்லது அதன் உள்ளடக்கங்களை எந்தவொரு வணிக நோக்கத்திற்காகவும் பயன்படுத்துதல்; (ii) எந்தவொரு ஊக, தவறான அல்லது மோசடி பரிவர்த்தனையையும் அல்லது தேவையை எதிர்பார்த்து எந்தவொரு பரிவர்த்தனையையும் செய்தல்; (iii) PhonePe-வின் வெளிப்படையான எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு நோக்கத்திற்காகவும் ரோபோ, ஸ்பைடர், ஸ்கிராப்பர் அல்லது முறைகள் அல்லது நேரடி செயல்முறையைப் பயன்படுத்தி PhonePe பிளாட்ஃபார்மின் எந்தவொரு உள்ளடக்கம் அல்லது தகவலை அணுகுதல், கண்காணித்தல் அல்லது நகலெடுப்பது; (iv) PhonePe பிளாட்ஃபார்மில் உள்ள அணுகல் விலக்கு தலைப்புகளில் உள்ள கட்டுப்பாடுகளை மீறுவது அல்லது PhonePe பிளாட்ஃபார்மிற்கான அணுகலைத் தடுக்க அல்லது கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் பிற நடவடிக்கைகளைத் தாண்டுவது, கட்டுப்படுத்துவது அல்லது மீறிச் செயல்படுவது; (v) PhonePe-வின் விருப்பப்படி, PhonePe உள்கட்டமைப்பின் மீது நியாயமற்ற அல்லது விகிதாச்சாரமற்ற பெரிய சுமையைச் சுமத்தும் அல்லது சுமத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் எடுத்தல்; (vi) PhonePe-வின் வெளிப்படையான எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு நோக்கத்திற்காகவும் PhonePe பிளாட்ஃபார்மின் எந்தவொரு பகுதிக்கும் (எந்தவொரு தயாரிப்பு/சேவைக்கான கொள்முதல் பாதை உட்பட, வரம்பில்லாமல்) டீப்-லிங்க் செய்வது; அல்லது (vii) PhonePe-வின் முன் எழுத்துப்பூர்வ அங்கீகாரமின்றி PhonePe பிளாட்ஃபார்மின் எந்தவொரு பகுதியையும் வேறு எந்த இணையதளத்திலும் “பிரேம்”, “மிர்ரர்” அல்லது வேறு விதமாக இணைப்பது; அல்லது (viii) எந்தவொரு மோசடி விண்ணப்பங்களையும் தொடங்குவது அல்லது PhonePe/அந்தந்த PoP(கள்) அல்லது எந்தவொரு மூன்றாம் தரப்பினருடனும்/மீதும் மோசடி செய்ய PhonePe பிளாட்ஃபார்மைப் பயன்படுத்துவது; மற்றும் (ix) PhonePe மற்றும்/அல்லது அந்தந்த PoP(களுக்கு) தவறான, முழுமையற்ற அல்லது பொய் தகவல்களை/தரவுகளை வழங்குவது.
  1. NPS சேவைகள் “உள்ளது உள்ளபடி” மற்றும் “கிடைக்கும் அடிப்படையில்” வழங்கப்படுகின்றன. சிஸ்டம் இயக்க நேரம், தடையற்ற கிடைக்கும் தன்மை அல்லது பிழையற்ற பரிமாற்றம் குறித்து PhonePe எந்தவொரு வெளிப்படையான அல்லது மறைமுகமான உத்தரவாதங்களையும் வழங்கவில்லை.
  1. லாபம் அல்லது வருவாய் இழப்பு, வணிகத் தடங்கல், வணிக வாய்ப்புகளின் இழப்பு, தரவு இழப்பு அல்லது பிற பொருளாதார நலன்களின் இழப்புக்கான சேதங்கள் உட்பட, வரம்பில்லாமல், ஒப்பந்தம், அலட்சியம், சிவில் தவறு தவறு (டார்ட்) அல்லது வேறுவிதமாக இருந்தாலும், NPS சேவைகளைப் பயன்படுத்துவது அல்லது பயன்படுத்த இயலாமையால் எழும் எந்தவொரு மறைமுகமான, பின்விளைவு, தற்செயலான, சிறப்பு அல்லது தண்டனைக்குரிய சேதங்களுக்கு அவை எவ்வாறு ஏற்பட்டிருந்தாலும், ஒப்பந்தம், சிவில் தவறு (டார்ட்), அலட்சியம், உத்தரவாதம் அல்லது வேறு எந்த அடிப்படையில் ஏற்பட்டிருந்தாலும், எந்தவொரு நிகழ்விலும் PhonePe பொறுப்பாகாது. PhonePe-வின் பொறுப்பு, ஏதேனும் இருப்பின், எக்காரணம் கொண்டும் ஐம்பது ரூபாய்க்கு (ரூ. 50) மிகாமல் இருக்க வேண்டும்.
  1. NPS பங்கேற்பாளர்களுடன் தேவையான தனிப்பட்ட தகவல்கள் உட்பட மேற்கூறிய தகவல்களைப் பகிர்வது மற்றும்/அல்லது வெளியிடுவது தொடர்பாக, அல்லது இந்த NPS விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் மீறுவதால் அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய, அவர்களுக்கு ஏற்படக்கூடிய அல்லது அவர்கள் மீது சுமத்தப்படக்கூடிய அனைத்து கிளைம்கள், பொறுப்புகள், கோரிக்கைகள், இழப்புகள், செலவுகள், கட்டணங்கள் (நியாயமான வழக்கறிஞர்கள் கட்டணம் உட்பட), ஒழுங்குமுறை நடவடிக்கைகள், அபராதங்கள், தண்டனைகள் அல்லது சேதங்களுக்கு எதிராக PhonePe, அதன் இணை நிறுவனங்கள் மற்றும் அதன்/அவற்றின் சம்பந்தப்பட்ட இயக்குநர்கள், பங்குதாரர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், முகவர்களை இழப்பீடு வழங்கிப் பாதுகாக்க நிபந்தனையின்றி மற்றும் எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி ஒப்புக்கொள்கிறீர்கள்.
  1. இந்த NPS விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் PFRDA சட்டம் மற்றும்/அல்லது அதன் கீழ் உள்ள ஒழுங்குமுறைகள் உட்பட இந்திய சட்டங்களின்படி நிர்வகிக்கப்படும் மற்றும் பொருள் கொள்ளப்படும். இந்த NPS விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளிலிருந்து எழும் அல்லது அது தொடர்பான எந்தவொரு சட்டப்பூர்வ வழக்கு, நடவடிக்கை அல்லது நடைமுறைகள் கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள தகுதிவாய்ந்த நீதிமன்றங்களின் பிரத்யேக அதிகார வரம்பிற்கு உட்பட்டதாக இருக்கும்.
  1. சட்டப்பூர்வ திருத்தங்கள், PFRDA உத்தரவுகள் அல்லது செயல்பாட்டு மேம்பாடுகளுக்கு ஏற்ப இந்த NPS விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை எந்த நேரத்திலும் மாற்றியமைக்க, திருத்த அல்லது புதுப்பிக்க PhonePe-க்கு உரிமை உள்ளது. அத்தகைய புதுப்பிப்பைத் தொடர்ந்து NPS சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது திருத்தப்பட்ட விதிமுறைகளை நீங்கள் பிணைப்பாக ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும்.
  1. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் எந்தவொரு விதியும் பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் சட்டத்திற்கு முரணானதாகவோ அல்லது சட்டவிரோதமானதாகவோ, செல்லாததாகவோ அல்லது அமல்படுத்த முடியாததாகவோ இருந்தால், அத்தகைய முரண்பாடு, சட்டவிரோதம், செல்லாமை அல்லது அமல்படுத்த முடியாமை முழு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் செல்லாததாக்காது என்பதை நீங்கள் புரிந்துகொண்டு, ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொள்கிறீர்கள். அத்தகைய விதிமுறை செல்லுபடியாகும், சட்டப்பூர்வமான மற்றும் அமல்படுத்தக்கூடியதாக மாற்றுவதற்கு தேவையான அளவிற்கு மாற்றியமைக்கப்பட்டதாகக் கருதப்படும், மேலும் அத்தகைய மாற்றங்கள் எதுவும் அதை செல்லுபடியாகும், சட்டப்பூர்வமான மற்றும் அமல்படுத்தக்கூடியதாக மாற்ற முடியாவிட்டால், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் செல்லாததாகக் கருதப்படும் விதியைக் கொண்டிருக்கவில்லை என்பது போல் பொருள் கொள்ளப்படும், மேலும் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பிற விதிகள் அல்லது உடன்படிக்கைகளின் செல்லுபடியாகும் தன்மை, சட்டப்பூர்வத்தன்மை மற்றும் அமல்படுத்தப்படும் தன்மை ஆகியவை பாதிக்கப்படாது, மேலும் தரப்பினரின் உரிமைகள் மற்றும் கடமைகள் அதற்கேற்ப பொருள் கொள்ளப்பட்டு அமல்படுத்தப்படும்.
  1. இந்த ஒப்பந்தத்தை (இந்த ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து உரிமைகள், உரிமைமூலங்கள், பலன்கள், உரிமைசார் நலன்கள் மற்றும் கடமைகள் மற்றும் பொறுப்புகள் உட்பட) அல்லது அதன் எந்தவொரு பகுதியையும் தனது இணை நிறுவனங்களுக்கும் மற்றும் அதன் உரிமைகளைப் பெறும் எந்தவொரு வாரிசுதாரருக்கும் ஒப்படைக்க PhonePe-க்கு உரிமை உண்டு. இந்த ஒப்பந்தத்தின் கீழ் சில PhonePe உரிமைகள் மற்றும் பொறுப்புகளை சுயாதீன ஒப்பந்ததாரர்கள் அல்லது பிற மூன்றாம் தரப்பினருக்கு PhonePe ஒப்படைக்கலாம். எங்களின் முன் எழுத்துப்பூர்வ ஒப்புதலின்றி இந்த ஒப்பந்தத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ எந்தவொரு நபருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் நீங்கள் ஒப்படைக்கக்கூடாது, அது எங்கள் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் மறுக்கப்படலாம்.
  1. உங்களுக்கு எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, சேவையை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நிறுத்த அல்லது இடைநிறுத்த PhonePe-க்கு உரிமை உள்ளது. NPS சேவைகளின் எந்தவொரு மாற்றம் அல்லது நிறுத்தத்திற்கும் PhonePe எந்த வகையிலும் உங்களுக்குப் பொறுப்பாகாது என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.

PhonePe Logo

Business Solutions

  • Payment Gateway
  • E-commerce PG
  • UPI Payment Gateway
  • Express Checkout
  • Offline Merchant
  • Offline Payment Partner
  • Advertise on PhonePe
  • SmartSpeaker
  • POS Machine
  • Payment Links
  • Travel and Commute

Insurance

  • Motor Insurance
  • Bike Insurance
  • Car Insurance
  • Health Insurance
  • Life Insurance
  • Term Life Insurance
  • Personal Accident Insurance
  • Travel Insurance
  • International Travel Insurance

Investments

  • 24K Gold
  • Mutual Funds

Lending

  • Consumer Lending
  • Merchant Lending
  • Secured Loans

General

  • About Us
  • Careers
  • Investors Relations
  • Contact Us
  • Press
  • Ethics
  • Report Vulnerability
  • Merchant Partners
  • Blog
  • Tech Blog
  • PhonePe Pulse
  • Merchant Onboarding Guidelines

Legal

  • Terms & Conditions
  • Privacy Policy
  • Grievance Policy
  • How to Pay
  • E-Waste Policy
  • Trust & Safety
  • Global Anti-Corruption Policy
  • PhonePe Account Aggregator Notice

See All Apps

Download PhonePe App Button Icon

PhonePe Group

  • PhonePe Appstoreexternal link icon
  • PhonePe Investexternal link icon

Credit Cards

  • PhonePe HDFC Bank Co-Branded Credit Cards
  • PhonePe SBI Card Co-Branded Credit Cards
  • Wish Credit Card

Certification

Sisa Logoexternal link icon
LinkedIn Logo
Twitter Logo
Fb Logo
YT Logo

* Numbers are accurate and relevant as of September 2026

© 2026, All rights reserved
PhonePe Logo

Business Solutions

arrow icon
  • Payment Gateway
  • E-commerce PG
  • UPI Payment Gateway
  • Express Checkout
  • Offline Merchant
  • Offline Payment Partner
  • Advertise on PhonePe
  • SmartSpeaker
  • POS Machine
  • Payment Links
  • Travel and Commute

Insurance

arrow icon
  • Motor Insurance
  • Bike Insurance
  • Car Insurance
  • Health Insurance
  • Life Insurance
  • Term Life Insurance
  • Personal Accident Insurance
  • Travel Insurance
  • International Travel Insurance

Investments

arrow icon
  • 24K Gold
  • Mutual Funds

Lending

arrow icon
  • Consumer Lending
  • Merchant Lending
  • Secured Loans

General

arrow icon
  • About Us
  • Careers
  • Investors Relations
  • Contact Us
  • Press
  • Ethics
  • Report Vulnerability
  • Merchant Partners
  • Blog
  • Tech Blog
  • PhonePe Pulse
  • Merchant Onboarding Guidelines

Legal

arrow icon
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Grievance Policy
  • How to Pay
  • E-Waste Policy
  • Trust & Safety
  • Global Anti-Corruption Policy
  • PhonePe Account Aggregator Notice

PhonePe Group

arrow icon
  • PhonePe Appstoreexternal link icon
  • PhonePe Investexternal link icon

Credit Cards

arrow icon
  • PhonePe HDFC Bank Co-Branded Credit Cards
  • PhonePe SBI Card Co-Branded Credit Cards
  • Wish Credit Card

Certification

Sisa Logo

See All Apps

Download PhonePe App Button Icon
LinkedIn Logo
Twitter Logo
Fb Logo
YT Logo

* Numbers are accurate and relevant as of September 2026

© 2026, All rights reserved